திண்ணை அட்டவணை

This entry is part [part not set] of 24 in the series 20020805_Issue


1990-லிருந்து அமெரிக்கா பிரயோகித்த ஏழு வீட்டோக்களில் இஸ்ரேலை விமர்சிப்பதைத் தடுத்தது : 6 முறைகள்

பாலஸ்தீன நாடு உருவாகும் உரிமையை இஸ்ரேல் அங்கீரித்துள்ள ஆவணங்கள் : 0

பெண்டகன் அமெரிக்க உளவு நிறுவனம் அணுகுண்டுகள் இருக்கிறது என்று சொல்லிய நாடுகளில் உண்மையாகவே அணுகுண்டுகள் கொண்ட நாடுகள் : 7-ல் 5

சிரியா ஜோர்டன் எகிப்து ஈராக் நான்கு நாடுகளும் சேர்ந்து செலவு செய்யும் ராணுவச்செலவிற்கு இஸ்ரேல் ராணுவச் செலவிற்கும் 1967-ல் இருந்து விகிதாசாரம் : 57 சதவீதம். (அதாவது நான்கு நாடுகளின் மொத்தச்செலவில் பாதிதான் இஸ்ரேலின் செலவு)

இன்றைய விகிதாசாரம் : 187 சதவீதம்

புஷ் அமைச்சரவையின் லத்தீன் அமெரிக்க ஆலோசகர் ஆட்டோ ரீச் மொபைல் பெட்ரோல் கம்பெனியில் வேலைக்கிருந்த வருடங்கள் : 6

வெனிசுவேலாவில் இவர் தூதுவராய் இருந்த வருடங்கள் : 4

ஏப்ரலில் வெனிசுவேலாவில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு பற்றி ஒன்றும் தெரியாது , ஏனென்றால் செய்தி இருட்டடிப்பு ஆயிற்று என்று அவர் குறிப்பிட்டது : ஆட்சிக் கவிழ்ப்புக்கு 4 நாட்கள் கழித்து

அமெரிக்க ஜனாதிபதி புஷ் அமெரிக்கத் தேர்தலில் பெற்ற வாக்குகள் சதவீதம் : 45 சதவீதம்.

வெனிசுவேலாவின் முதல்வர் ஹ்யூகோ சாவெஸ் பெற்ற வாக்குகள் சதவீதம் : 60 சதவீதம்

மீன்பிடிப்பு மிதமிஞ்சிப் போய்விட்டது என்று அமெரிக்கா வாங்கிக் கவிழ்த்த மீன்பிடிப்படகுகளின் எண்ணிக்கை – 1985ம் ஆண்டிலிருந்து : 88

பிரிட்டனின் இரண்டு ஆறுகளில், பெண்களின் சுகாதாரப் படைப்புகள் ஆறுகளில் விடப்பட்டதால் ஆண்மை இழந்து பெண்மை அடைந்து விட்ட மீன்கள் : 100 சதவீதம்

அமெரிக்க ஒளிபரப்பு நிறுவனங்களில் செப்டம்பர் 2000த்திலிருந்து மார்ச் 2002வரை இஸ்ரேலிய பதிலடித் தாக்குதல் என்ற வார்த்தை வந்த எண்ணிக்கை = 118

இவற்றில் பாலஸ்தீன பதிலடித் தாக்குதல் என்று வந்த எண்ணிக்கை = 14

மத குழுக்களின் எண்ணிக்கை வரிசையில், 1990இல் தன்னை எந்த மதத்தையும் சாராதவர் என சென்ஸஸில் குறிப்பிட்ட மக்களின் ராங்க் =5

இன்று அந்த ராங்க் = 3

***

ஹார்பர்ஸ் பத்திரிக்கையிலிருந்து

***

Series Navigation

திண்ணை அட்டவணை

This entry is part [part not set] of 22 in the series 20020707_Issue


அரபு நாடுகளிடம் உள்ள அணுகுண்டுக்களின் எண்ணிக்கை ; 0

இஸ்ரேலிடம் உள்ள அணுகுண்டுகளின் எண்ணிக்கை : 100 க்கும் அதிகம்

பாஸ்டன் கத்தோலிக்க பாதிரியார்களில் சிறுவர்கள் மீது பாலியல் பலாத்காரம் செய்த புகார் இருப்பது: 10 பேரில் ஒருவர்

புஷ் மந்திரி சபையில் உள்ளவர்களில் ஈரானுக்கு ஆயுதம் விற்ற ஊழலில் குற்றம் சாட்டப் பட்டவர்கள் : 4

சீனாவின் ராணுவச் செலவு உலக நாடுகளின் ராணுவச் செலவு வரிசையில் : 3-வது இடம்

இந்தியாவில் உலகப் பாரம்பரிய இடங்கள் என யுனெஸ்கோ அறிவித்துள்ள இடங்கள் : 23

23-வது அறிவிக்கப் பட்ட இடம் : புத்த கயா

Series Navigation

திண்ணை அட்டவணை

This entry is part [part not set] of 20 in the series 20010805_Issue


1999இல் அமெரிக்காவில் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்ட கார் ஓட்டுபவர்களால் வீணாகும் எரிபொருளின் உத்தேச மதிப்பீடு டாலரில் : $8,60,00,00,000 (சுமார் 860 கோடி டாலர்கள்)

உலகத்தின் பெரிய 10 பெட்ரோல் நிறுவனங்களின் 1999 லாபத்தைவிட அதிகமாக இருக்கும் 2000த்தின் லாபம் : சுமார் $2900 கோடி டாலர்

சாட் என்ற ஆப்பிரிக்க தேசத்துக்கு ஏப்ரல் 2000த்தில் இரண்டு பெட்ரோல் கம்பெனிகள் கொடுத்த தொகை: $2.5 கோடி டாலர்

இந்தப்பணத்தில் சாட் தேசம் ஆயுதங்களுக்காக (IMF ஒப்பந்த விதிகளை மீறி) செலவிட்ட தொகை: $45 லட்சம் டாலர்கள்

மரபணு மாற்றிய உணவை உண்டதே இல்லை என்று நினைக்கும் அமெரிக்கர்களின் சதவீதம்: 70

அமெரிக்க பலசரக்கு கடைகளில் இருக்கும் உணவுப்பொருள் மரபணு மாற்றப்பட்டதாக இருக்க வாய்ப்பு: இரண்டில் ஒன்று

திபெத்திய குழந்தைகளின் வளர்ச்சி குறைந்த உணவால் பாதிக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்பு: மூன்று குழந்தைகளில் ஒன்று

எல் சால்வடார் தேசத்தில் இருக்கும் வேலையாட்கள் ஒரு $12.99 டாலர் (600 ரூபாய்) விலையுள்ள கேப் நிறுவன சட்டை ஒன்றை தைப்பதற்குப் பெறும் கூலி : 11.6 செண்டுகள் ( 6 ரூபாய்)

பால் ஓ நெயில் என்னும் அமெரிக்க கஜானா செயலாளர் (நிதி மந்திரி என்று சொல்லலாம்) அல்கோ என்ற அமெரிக்க அலுமினிய நிறுவனத்தின் தலைவராக சென்றவருடம் வேலை செய்ததற்கு பெற்ற வருமானம்: $5.64 கோடி டாலர்

அமெரிக்க தேச வனப்பாதுகாப்பு கூட்டமைப்பின் படி, மிக மோசமாக சுற்றுச்சூழலை பாதிக்கும் நிறுவனமாக பால் ஓ நெயில் தலைவராக இருந்த போது அல்கோ பெற்ற ராங்க்: 1

கடந்த 400 வருடங்களில் கத்தோலிக்க செயிண்ட்டாக பெயரிடப்பட்டவர்களில் இன்றைய போப் ஜான் பால் 11 பெயரிட்டவர்களின் சதவீதம்: 50 சதவீதம்

1983இல் புலான் தேவி சரணடையும்போது அவரிடம் இருந்த பணம்: சுமார் 3 லட்சம் ரூபாய்கள் (அவரிடமிருந்தது 1 லட்சம், அவர் சரணடைந்ததால் அவரது தலைக்கு வைக்கப்பட்ட 2 லட்சம் ரூபாய் விலையை அவரிடம் கொடுத்தது அரசாங்கம்)

2001இல் அவர் பாராளுமன்ற உறுப்பினராக இறக்கும்போது அவரது சொத்தாக மதிப்பிடப்படுவது: சுமார் 10 கோடி ரூபாய்கள்

ஒரு தீவிரவாதிக்கு முழு பயிற்சியும் கொடுக்க பாகிஸ்தானிய உளவு நிறுவனம் செலவிடும் தொகை: சுமார் 2 லட்சம் ரூபாய்கள்

IMF பாகிஸ்தானுக்கு இந்த வருடம் கொடுத்த கடனுதவி : 2200 கோடி ரூபாய்கள்

முன்னாள் பிரதமர் சந்திரசேகர் பிரதமரான நேரத்துக்கும், போன்ட்ஸி கிராமப் பஞ்சாயத்து அவருடைய பாரத யாத்ரா கேந்திரா அமைப்புக்கு 500 ஏக்கர்கள் அன்பளிப்பாக அளித்தத நேரத்துக்கும் இடைப்பட்ட காலம்: 24 மணிநேரங்கள்

நன்றி – ஹார்ப்பர்ஸ் இண்டெக்ஸ், ஃப்ரண்ட்லைன், நியூஸ் பேப்பர் டுடே

Series Navigation