திருச்சிராப்பள்ளி தேசியக்கல்லூரியில் “இணையத்தில் தமிழ்” : கருத்தரங்க செய்தி

This entry is part [part not set] of 37 in the series 20090312_Issue

துரை.மணிகண்டன்



05-03-2009 வியாழன் அன்று திருச்சிராப்பள்ளி தேசியக்கல்லூரியில்
தமிழ்த்துறைச் சார்பாக “இணையத்தில் தமிழ்” என்ற காட்சி விளக்க தொடர்பான
கருத்தரங்கம் ந்டைபெற்றது. கருத்தரங்கிற்கு கல்லுரியின் முதல்வர்
கு.அன்பரசு, சுய நிதிப்பாடப்பிரிவின் பொறுப்பு பேராசிரியர் முனைவர்
மதியழகன் ஆகியோர் தலைமை வகித்தனர். தமித்துறைத்தலைவர் திரு
இரா.மாணிக்கவாசகன் முன்னிலை வகித்தார்.

இணையத்தில் தமிழ் என்ற கருத்தரங்கில் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர்
துரை.மணிகண்டன் இணையம் என்றால் என்ன?அதனின் தொற்றம் வளர்ச்சி பற்றி
விரிவாகக் கூறினார்.
1995 ஆம் ஆண்டு சிங்கபூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர்
கோவிந்தசாமி அவர்களால் முதன்முதலில் இணையத்தில் தமிழை ஏற்றம் பெற
வைத்தவர் என்ற செய்தியைக் குறிப்பிட்டார்.
தமிழ் இணைய இதழ்களின் தோற்றமும்,வளர்ச்சியும் குறித்துக்
காட்சிவிளக்கமாக எடுத்துக்கூறினார். மேலும் தமிழ் இணையை இதழ்களான
முத்துகமலம், திண்ணை, பதிவுகள், வார்ப்பு, மிழ்த்திணை,
நிலாச்சாரல்,
கீற்று,போன்ற இதழ்களை விளக்கிக்காட்டினார். இவ்விதழ்களுக்குப் படைப்புகளை
எவ்வாறு ஒருங்குறியில் அடித்து அனுப்புவது என்ற விபரத்தையும்
எடுத்துக்கூறினார்.
தமிழ் விக்கிபிடியாவில் தமிழின் வளர்ச்சிக்கு அவர்கள் ஆற்றிவரும்
பங்களிப்பையும், கட்டுரகள்,உலகச் செய்திகளை உடனுக்குடன் தமிழ்ப்படுத்தி
தமிழ் ஆய்வாளர்களுக்கு அவர்கள் ஆற்றிவரும் தொண்டினையும்
எடுத்துக்கூறினார்
.
தமிழ் மரபு அறக்கட்டளையின் தமிழ்ப்பற்றையும் அதற்காக உழைத்துவரும்
முனைவர் கண்ணன், பொறியாளர் திருமதி சுபாசினி போன்றவர்களின்
பங்களிப்பையும் எடுத்துக்கூறி விளக்கினார்.
உலகத்தில் உள்ள தமிழ்ர்கள் தமிழைப் படிப்பதற்காகத் தமிழகத்தில் துணை
வேந்தர் வா.செ.குழைந்தைசாமி அவர்களாலும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின்
துணைவேந்த்தர் முனைவர் பொன்னவைக்கோ அவர்களாலும் தமிழ்
இணையப்பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட செய்தியையும், அதில் இடம்பெற்றுள்ள
கதைகள், தமிழ் இலக்கிய நூல்கள், அகராதிப்பணிகள் போன்ற
அறியச்செய்திகளையும் விளக்கிக்காட்டினார்.
இறுதியாக மாணவர்கள், பேராசிரியர்கள் கேட்ட கேள்விகளுக்குத் தெளிவான
பதிலகளைத் தெரிவித்தார். இக்கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்த
தமிழ்த்துறைப்பேராசிரியர்களான முனைவர் ராமசந்த்திரன்,முனைவர்
தி.ஆறுமுகம்,செல்வி. ராதிகா அவர்கள் நன்றிகூறினார்கள்.

மேலும் கணிப்பொறித்துறை, வணிக மேலான்மைதுறை மாணவர்கள், மற்றும்
பேராசிரியர்கள், தமிழ் ஆர்வளரகள், பிற கல்லூரி மாணவரகள் பேராசிரியர்கள்
இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.


mkduraimani@gmail.com

Series Navigation

முனைவர் துரை. மணிகண்டன்

முனைவர் துரை. மணிகண்டன்