சொற்புணர்ச்சி விளக்கச்சொற்கள்-3

This entry is part of 46 in the series 20060217_Issue

கரு.திருவரசு


ஏழைசொல் – ஏழைச்சொல்

ஏழை என்பதன் பொருள் என்ன ? போதிய பொருள் வசதி இஇல்லாதவர், வறியவர் என்பதோடு, ‘ஏழு (7) எனும் எண்ணை ‘ என்றும் பொருள்படும்.

சொல் என்பதன் பொருள் என்ன ? ஒரு பொருள் குறிக்கும் ஒலி. பேச்சு, வாக்கு என்றெல்லாம் பொருள்படும்.

‘ஏழைசொல் அம்பலம் ஏறாது ‘ என்பது பழமொழி. வறுமையான, பொருள் வசதி இல்லாத ஓர் ஏழையின் சொல், அதாவது ஏழையின் பேச்சு கூட்டத்தில் எடுபடாது, ஏறாது.

இஇங்கே நாம் சொற்புணர்ச்சி விளக்கத்திற்காகச் ‘சொல் ‘ என்பதற்குப் பேச்சு என்னும் பொருளைமட்டும் கொள்வோம்..

ஏழைச்சொல் என்றால், ஏழாம் எண்ணைச் சொல் என்பது பொருள். எண் வரிசையில் ஆறுக்கு அடுத்து வரும் எண்ணான (7) ஏழைச் சொல் என்பது பொருள்.

ஏழையின் சொல் என்று சொல்வதானால், எழுதுவதானால் அதை ‘ஏழைச்சொல் ‘ என எழுதுவது தவறு. ஏழைசொல் எனச் சொல்லவேண்டும், எழுதவேண்டும்.

ஆறுக்கு அடுத்து வரும் ஏழு (7) எனும் எண்ணைச் சொல்வதானால், எழுதுவதானால் அதை ஏழைசொல் என எழுதுவது தவறு. ஏழைச்சொல் எனச் சொல்லவேண்டும், எழுதவேண்டும்.

ஏழைசொல் = ஏழையின் பேச்சு

ஏழைச்சொல் = ஏழாம் எண்ணைச் சொல்

—-

thiru36@streamyx.com

Series Navigation