தீபம் இதழ் தொகுப்புகள் I & II – அறிமுகம்
தொகுப்பு:பி.கே.சிவக்குமார்
தீபம் இதழ் 1965-ல் அமரர் திரு. நா. பார்த்தசாரதி அவர்களால் தொடங்கப்பட்டது. பின்னர் நா.பா.வின் பெயருக்கு முன்னர் ஒரு தகுதிவாய்ந்த பட்டம் போல ‘தீபம் ‘ என்ற பெயரும் சேர்ந்து, அவர் தீபம் நா. பார்த்தசாரதி என்று அழைக்கப்பட்டார். தீபம் இதழ் தமிழ் இலக்கிய உலகில் பெற்ற முக்கியத்துவத்தை இது குறிக்கிறது எனலாம். ஓர் இலக்கிய இயக்கமாக 1983 வரை – நா.பா மறையும்வரை – தரம் குறையாது புதுப்புது உக்திகளுடன் 23 ஆண்டுகள் வெளிவந்தது தீபம்.
தீபத்தின் எல்லா இதழ்களிலிருந்தும் திரட்டப்பட்ட சிறந்த இலக்கியப் படைப்புகள் இரு தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. புகழ் பெற்ற படைப்பாளிகளிடையே நடைபெற்ற கடிதப் பரிமாற்றத்தைக் காட்டும் ‘ஊஞ்சல் ‘, ‘இலக்கியச் சந்திப்புகள், ‘நானும் என் எழுத்தும் ‘, ‘காலத்தை வென்ற சிறுகதைகள் ‘ ‘பிறமொழி இலக்கிய அறிமுகம் ‘, சாகித்ய அகாதெமி விருது பெற்ற கட்டுரைத் தொடர்கள், முன்னணி எழுத்தாளர்களின் அற்புதமான சிறுகதைகள், ‘நினைவில் நிற்கும் முன்னுரைகள் ‘, நா.பாவின் கேள்வி பதில்கள் கொண்ட ‘இலக்கியமேடை ‘. ‘எனது குறிப்பேடு ‘ ஈழ, மலேசிய எழுத்தாளர்களின் படைப்புகள், மரபு மற்றும் புதுக்கவிதைகள், இலக்கிய விவாதங்கள், சர்ச்சைகள், ரசனை அரங்கம், அஞ்சறைப் பெட்டி, தொழிலதிபர்கள் சந்திப்பு, வம்புமேடை, ரசமட்டம், பெட்டிச் செய்திகள், மாதம் ஒரு குறுநாவல், தொடர் நாவல்கள், மொழி பெயர்ப்பு நாவல்கள் என்று ஏராளமான இலக்கியப் படைப்புகளிலிருந்து மிகச் சிறப்பானவற்றை இத்தொகுப்புகளில் காணலாம்.
தி. ஜானகிராமன், எம்.வி. வெங்கட்ராமன், கி. ராஜநாராயணன், அசோகமித்திரன், ஆ. மாதவன், இந்திரா பார்த்தசாரதி, ஆர். சண்முகசுந்தரம், கண்ணதாசன், சுந்தர ராமசாமி, டொமினிக் ஜீவா, வண்ணதாசன், சூடாமணி போன்ற புகழ்பெற்ற படைப்பாளர்கள் தீபத்தில் எழுதியவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்.
தினமணி தமிழ் நாளிதழ், தி ஹிந்து ஆங்கில நாளிதழ் உள்ளிட்ட பல பத்திரிகைகள் மதிப்புரைகளில் பாராட்டிய தொகுப்புகள் இவை.
இலட்சிய வாசகரும் சிறந்த படைப்பாளியுமான வே.சபாநாயகம் அவர்கள், இவற்றைத் தொகுத்திருக்கிறார். வே. சபாநாயகம் ஏற்கனவே கணையாழி களஞ்சியம் – தொகுதி ஒன்றைச் சிறப்பான முறையில் தொகுத்து அளித்தவர். குழந்தை மற்றும் பெரியவர்களுக்கான எழுத்தாளர். அறியப்பட்ட எழுத்தாளர். எழுபது வயது நிரம்பிய இளைஞர். இணையத்தில் நினைவுத் தடங்கள் என்று வலைப்பதிவு வைத்திருக்கிறார். அதன் முகவரி http://ninaivu.blogspot.com
ஒவ்வோர் இலக்கிய ரசிகரும் போற்றிப் பாதுகாக்கத்தக்க அரிய இலக்கியப் பெட்டகங்கள் இத்தொகுதிகள்.
இத்தொகுப்புகள் http://www.anyindian.com-இல் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இத்தொகுப்புகளை தமிழ்நாட்டுக்குள் இருக்கிற எந்த முகவரிக்கும் புத்தகத்தின் விலையை மட்டும் செலுத்தினால், AnyIndian.com இலவசமாக அனுப்பி வைக்கிறது. பிற மாநிலங்களுக்கும் வெளிநாட்டுக்கும் குறைந்த அனுப்பும் செலவு மட்டுமே. விவரங்களை இங்கே காணலாம். http://www.anyindian.com/shipping.php
தொகுப்புகளை வாங்க விரும்புவோருக்காக அவற்றின் சுட்டிகள் பின்வருமாறு:
தீபம் இதழ் தொகுப்பு I – வே. சபாநாயகம் – ரூபாய் 300 –
தீபம் இதழ் தொகுப்பு II – வே. சபாநாயகம் – ரூபாய் 300 –
- புலம் பெயர் வாழ்வில் வேலையும் பெண்களும்
- AnyIndian.com நடத்தும் எழுத்தாளர் சந்திப்பு
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்)(ஐந்தாம் காட்சி பாகம்-2)
- அதீதப் புள்ளி
- வளைந்து போன வீரவாள்
- தீவுகள்..
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – 8 – லெக் வலென்சா – பாகம் 1
- வங்கதேசப் போரின்போது அமெரிக்கக் கப்பல் – அமெரிக்க தூதுவரகம் அமெரிக்க உள்துறைக்கு அனுப்பிய தந்தி
- பெரியபுராணம் – 47 சண்டேசுர நாயனார் புராணம் தொடர்ச்சி
- நீள்கிறது கவலை
- தீபம் இதழ் தொகுப்புகள் I & II – அறிமுகம்
- இந்திய அமெரிக்க உறவு – இந்திரா காந்தியின் வார்த்தைகளில்
- புட்டோவுடன் அமெரிக்க உள்துறை அமைச்சர் உரையாடல்
- இந்தியா பாகிஸ்தான் போரில் பாகிஸ்தான் தோல்வியின் பின்விளைவுகள்
- பச்சை மிருகம்
- அவனது கவிதைகள்
- கீதாஞ்சலி (30) கனவில் உன்னிசைக் கானம்! மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- விண்வெளியில் செல்லும் வால்மீனுக்குப் பேரடி கொடுத்த பூமியின் எறிகணை! (Earth ‘s Deep Impact Space Probe Hits the Comet)
- குடை வாசிக்கும் கவிதை
- எது காதல் ?
- தாயின் உயிர்க்கொடிகள்
- நான் மரணித்து விட்டேன்
- விடிகின்ற பொழுதாய் கவிதை
- தீபம் இதழ் தொகுப்புகள் I & II – அறிமுகம்
- பருவகாலம்
- பிரிவோம்…சந்திப்போம்!
- வாசுகன் ஓவியக்கண்காட்சி 06th july 2005
- நினைவுக் கூட்டம் மறைந்த யாழ் பரி.யோவான் கல்லூரி அதிபர் சி.ஈ.ஆனந்தராஜாவின் 20 வது நினைவுக் கூட்டம்;.
- AnyIndian.com நடத்தும் எழுத்தாளர் சந்திப்பு
- International Thirukkural Conference, July 8-10, 2005, Smith Auditorium, Howard Community College, 10901 Little Patuxent Parkway
- உயிர்த்திருத்தல்