சொற்புணர்ச்சி விளக்கச்சொற்கள்

This entry is part of 72 in the series 20040415_Issue

கரு திருவரசு


உலகப் பெருமொழிகள் அனைத்துக்கும் தனித்தனி இஇயல்புகள், மரபுகள் இஇருக்கின்றன.

இஇயல்பு, மரபு என்பனவற்றின் தொகுதியைத்தான் இஇலக்கணம் என்று சொல்கிறோம்.

இஇப்போது, ‘தமிழில் உள்ள சொற்புணர்ச்சி விதி தேவையில்லை ‘ என்பதுபோல ஒரு நிலைப்பாடு காணப் படுகிறது. அது தவறு.

சொற்களின் புணர்ச்சி சரியாக அமைய வில்லையானால் சொற்றொடரின் பொருளே மாறிவிடும்.

கைகுட்டை – கைக்குட்டை (1)

கைகுட்டை, கைக்குட்டை என்ற சொற்களிலுள்ள ‘கை ‘ என்பதற்குச் சில வேறு பொருள்கள் இஇருந்தாலும் இஇங்கே நாம் மனிதக் கையைப்பற்றிச் சொல்கிறோம் என்பது தெளிவு.

‘உடுக்கை இஇழந்தவன் கைபோல ‘ என்பார் திருவள்ளுவர்.

‘இஇதை உங்கள் காலாக நினைத்து வணங்குகிறேன் ‘ என்று கையைப்பிடித்து நடிப்பார் ஒருவர்.

‘வெறுங்கையால் முழம் போடுவது ‘ தெரியுமா ?

‘குட்டை ‘ என்பதற்கு வேறு பொருள்கள் இஇருந்தாலும் இஇங்கே நாம் குறுகியது, சிறியது என்னும் பொருள்களில் மட்டுமே பார்க்கிறோம்.

கைகுட்டை என்றால் அந்த மனிதருடைய கை பொதுவான அமைப்பைவிட நீளக் குறைவானது என்று பொருள்.

கைக்குட்டை என்றால் சதுர வடிவத்திலான சிறு துணி.

கைக்குட்டையால்தான் நாம் முகம் துடைக்கவேண்டும்.

உங்கள் கைகுட்டை கீழே விழுந்துவிட்டது என்று சொல்லக்கூடாது, எழுதக்கூடாது. குட்டையான கையோ, நீளமான கையோ, அது எப்படிக் கீழே விழும் ?

கைகுட்டை = நீளம் குறைந்த கை

கைக்குட்டை = சதுர வடிவச் சிறுதுணி

—-

thiru36@streamyx.com

Series Navigation