கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) பழக்கத் தொடர்பை விட்டுவிடு ! (Wean Yourself) (கவிதை -34)

This entry is part of 42 in the series 20110508_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


சிறிது சிறிதாய் உன்னை
விடுவித்துக் கொள்
முன்னைப் பழக்கத்தை விட்டு !
முக்கிய அறிவுரை இது
உரைப்பது நான் !
கருவில் இருக்கும் உனக்குக்
குருதியே சத்துணவு !
பிறந்ததும் சிசு
குடிப்பது பாலுணவு !
சிறு பிள்ளை பின்பு தின்பது
அரிசிச் சோறு !
அறிவு வளர்ச்சி அடைந்து
ஆய்வாளி ஆகும்
சேய்கள் எல்லாம் !
காட்டு விலங்குகளைப் பின்னர்
வேட்டை ஆடி
விளையாடு வார் !

++++++++++++

கருவில் இருக்கும் சிசுவுடன்
உரையாடல்
புரிவ தெப்படி ?
இப்படி நீ சொல்லலாம் :
“விரிந்தது, சிக்க லானது
வெளி உலகு !
மலைப் பாதைகளும்
கோதுமை வயல்களும்
பூந்தோப்பு களும் ஆங்கே
காணலாம் !
இரவு வானில் கோடான கோடி
ஒளி மந்தைகள்
விழித் தெழும் !
பரிதி வெளிச் சத்தில் நடக்கும்
திருமணத்தில்
நண்பர்கள் இசை பாடி
நடனம் புரிவது
ஒரு தனி அழகு !”

+++++++++++

கருவுக்குள் இருக்கும் சிசுவைக்
கேட்டுப் பார் :
“ஏன் அது வயிற்றுக்குள்
இமை மூடி
முடங்கிக் கிடக்குது
இருட்டிலே !”
வரும் பதிலைக் கேள் :
“வேறோர் உலகம்” இல்லை,
நேர் மேலே !
எனக்கு மட்டும் தெரியும்
எனது அனுபவம் ! நீ
மாயக் கனவுகள் காண்பதாய்
மனதுக்குத் தெரியுது !

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 3 , 2011)

Series Navigation