கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -8)

This entry is part of 48 in the series 20110313_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


************************************
ஆண்மையின் குறைபாடு !
************************************

(சென்ற வாரத் தொடர்ச்சி)

+++++++++++

ஏழு குர்ரான் நூட்களை
ஒன்றின் மேல் ஒன்றாய் அடுக்கி
உறுதி எடுப்பான்
காலி•ப் !
எழில் மாது கட்டுக்கடங்கி
உள்ளதைச் சொல்வாள்
தெளிவாய் :
புல்வெளியில் சிங்கத்தைக்
கொன்றது,
குடிலுக்குத் திரும்பிய காலி•ப்
குறி எழுந்தது,
குறுக்கே எலி ஓடிய போது
குறி குனிந்தது
எல்லாம் உரைப்பாள்
தயங்காது !
ஒளித்து வைத்த நினைவுகள்
வெளியே வந்தன !

++++++++++++++

வினை விதைக்காதே மனிதா !
விதைத்தால்
வினைதான் அறுவடை செய்வாய் !
வெய்யிலும் மழையும்
விளைவிக்கும் பயிர்களை !
இலையுதிர் காலத் துக்குப் பின்
வசந்தம் வரும் !
மீள் பிறப்பை வலுயுறுத்தும்
சான்றாய்ப்
பருவ காலச் சுழற்சி !
வசந்த காலத்தில் இரகசியம்
வந்திடும் வெளியே !
வயல் மண் வாய் பிளந்து
துளிர்விடும் இலைகள் !
கவலை மிகுந்திடும் ஒயின்
தலை வலியாக !
எங்கிருந்து ஒயின் வருதென்று
சிந்தித்துப் பார் !

+++++++++++++++

விரிந்து மலரும் பூக்கள்
விதைகள் போல் தோன்றா !
மீன் போலிருக்கும்
ஸீமன் போன்று மனிதன்
தோன்று வதில்லை !
ஏசு நாதர் பிறந்தது
காபிரியல் மூச்சி லிருந்து !
ஆயினும்
அந்த வடிவில் ஏசு இல்லை !
முந்திரிக் கொடி போல்
கனி தெரிவதில்லை !
காதல் உடல் உறவுகள்
சில வற்றின்
வேறு பட்ட விதைகள் !
மாறான இடங்கள் !
பிறவி எல்லாம் மூலம் போல்
இருப்ப தில்லை !
வலி எங்கிருந்து
வருவ தென்று அறியோம் !
நாம் முன்பு செய்த தெல்லாம்
ஏனென்று அறியோம் !
காரணம்
அறியா திருப்பது நல்லது !
கவலை தாக்கும்
அல்லது !

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (March 8, 2011)

Series Navigation