கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு (கவிதை -41 பாகம் -5)

This entry is part of 37 in the series 20110306_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா“சமூகச் சொத்தைப் பற்களுக்குப் பொன் கவசமிடும் பல்மருத்துவர் பலர் இருக்கிறார். சிரியன் நாட்டு வாசலில் ஊசிப் போய் நாற்ற மடித்துச் சீழ் வடியும் ஊத்தைப் பற்கள் பல நடமாடுகின்றன ! மருத்துவர் அவற்றை அகற்றாது பொன்னிட்டு நிரப்புவார். நோய் இன்னும் அங்கே நிலைத்துள்ளது.”

கலில் கிப்ரான். (Decayed Teeth)

+++++++++
திருமணம்
+++++++++

(சென்ற வாரத் தொடர்ச்சி)

++++++++++++

திருமணம் என்பது
தங்கத்தில் வடித்த சங்கிலித்
தோரணம் !
ஆரம்பம் அதற்குக்
காதலர் கண்ணோக்கு !
நேரும் விளைவு
நித்தியப் பிணைப்பு !
மாசற்ற வானி லிருந்து
காய்கள் பழுத்திடப் பெய்திடும்
தூய மழைப் பொழிவு !
தெய்வீக இயற்கை நிலங்கள்
ஆசிகள் பெறும் !

++++++++++++

ஏனெனில் கண்மணியின்
மான் விழிகள்
ஏவிடும்
கடைக்கண் பாய்ச்சல்
வாலிபன்
இதயத்தில் இடப்படும் விதை !
இள நங்கையர் இடும்
உதடுகளின்
முதல் முத்தங்கள்
வாழ்க்கை மரக் கிளையில்
பூக்கும் மலர்கள் !
திருமணத்தில்
இரு மனங்கள் கூடி
உடன்படும் ஐக்கிய ஒப்பந்தம்
முதல் விதையில் விளைந்த
முதற்கனி !

(முற்றும்)

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 28 2011)

Series Navigation