கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) முத்தெடுப்போன் உடை காலியானது (கவிதை -28)

This entry is part of 41 in the series 20110102_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


எம்மோடு அமர்ந்துள்ளாய்
இப்போது.
பொழுது புலர்ந்ததும் நீ
நிலத்தில் நடமாடுவாய் !
நீ நீயாக இருக்கிறாய் ! நாம்
விரட்டிச் செல்லும்
வேட்டை விலங்குகள்
வேட்டை யாடப் படும்
வேட்டைக்கு நீ எம்மோடு
விரையும் போது !
உடம்பிற்குள் உள்ளாய் நீ
நிலத்தில் நிற்கும்
திட மான செடிபோல் !
ஆயினும் நீயொரு
வாயு !
கடற்கரையில்
காலியாய்க் கிடக்கும்
நீ முத்தெடுப் போன் உடம்பு !
நீயொரு மீன் !

++++++++++++++

கடலுக்குள் கிடக்கின்றன
கதிர்வீசும்
கணக்கற்ற நாண்கள் !
கரிய நாண்களும் உள்ளன
ஏராளமாய் !
இரத்தக் குழல்கள் போல்
தெரியும் அவை
ஒருபுறம் திறக்கும் போது !
கடலிசை எழுப்பும்
இசைக் கருவியின் நாண்கள்
ஒளிந்திருக்கும்
உனது இரத்தக் குழாய்கள் !
கடல்நுரை நோகும் விளிம்பல்ல
காணாத
கடற்கரையின் ஓலம் !

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (December 28, 2010)

Series Navigation