கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) என்னருகில் வராதே கவிதை -26 பாகம் -4

This entry is part of 35 in the series 20101219_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


+++++++++++++++++++++++++
கணவன் மனைவிக்குள் தர்க்கம்
+++++++++++++++++++++++++

++++++++++++++++++
கணவன் கூறிய பதில் :
++++++++++++++++++

வறுமையே எனக்குப்
பெருமகிழ்ச்சி
தருவது பெண்ணே !
எளிய வாழ்வே நேர்மையும்
எழிலும் உள்ளது.
எளிய வாழ்வில் எதையும்
ஒளிக்க வேண்டம் !
அகந்தை பேராசை பிடித்தவன்
என் றென்னை
விளித்தாய் நீ !
பாம்பு, பாம்பாட்டி என்றும்
பழித்தாய் நீ !
அனைத்து அவப் பெயரும்
உனைத்தான் சாரும் !

++++++++++++++

உனது தேவைகள் மீதுள்ள
சினத்தால் நீ
என்னைப் பழிக்கிறாய் !
எதுவும் வேண்டேன்
இந்த உலகில் !
சுற்றிச் சுற்றி
மறுபடி ஓடி வரும்
சிறு பிள்ளை போன்றள் நீ !
இப்போது நீ நினைப்பது
இந்த இல்லம்
சுற்று கிறது என்று !
குற்றம் காண்பவை
உனது கண்களே !
பொறுமையாய் எண்ணிப் பார் :
இறைவன் நம் இல்லத்தில்
ஏற்றி யுள்ள ஒளியை !
கிடைத் துள்ள உனது
கொடைகளை !

++++++++++++++

இரவு பூராவும்
இப்படி நடக்கும் தர்க்கம்
இருவரை யும் புண் படுத்தும் !
மறைத்து வைத்த ரகசியங்கள்
உறுத்தும் என்னை !
எல்லாம் தம்பதிக ளுக்குள்
உள்ளதா அன்பு
இல்லையா
என்பதைப் பொருத்தது !
இந்த இரவு
இப்படிக் கழியும் !
இருக்குது நிரம்ப வேலை
எமக்கு !

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (December 13 2010)

Series Navigation