ஏவலர்கள் எஜமானர்களாய்

This entry is part of 40 in the series 20101114_Issue

வே பிச்சுமணி


நாம் வடிதத கடவுள் சிலைதான்
இருந்தபோதிலும்
எட்டி நின்றுதான் தொழ வேண்டியுள்ளது
நாம் விதைத்து அறுத்த நெல்தான்
இருந்தபோதிலும்
நமது பிள்ளைகளின் பசியை போக்குவதில்லை
நமது வரிபணத்தில் வாழும் அலுவலர்கள்
இருந்த போதிலும்
பணிந்து முன் நிற்க வேண்டியுள்ளது.
நாம் வாக்களித்து வாகைசூடிய தலைவர்கள்
இருந்தபோதிலும்
நெருங்க முடியாத தூரத்தில் இருக்கிறார்கள்
நாம் இயற்கையில் மனிதாக பிறந்துவிட்டோம்
இருந்த போதிலும்
நமக்கு முதுகெலும்பு இருப்பதை மறந்துவிட்டோம்

Series Navigation