கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) சிறுவரோடு விளையாடும் ஞானி கவிதை -24 பாகம் -2

This entry is part of 34 in the series 20101107_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


சிறுவரோடு விளையாடும் ஞானி
++++++++++++++
எத்தனை விதமான பெண்டிர் ?
++++++++++++++

சிறுவரை விட்டு அகன்றார்
குருநாதர்.
வாலிபன் உரக்கக் கேட்டான் :
“மேலும் கூறுவீர்
இவ்வூர் மாதரைப் பற்றி.”
அருகில் வந்தார் குருநாதர்
மரக் குதிரையில்.
“உன் முதற் காதலி
கன்னி அழகு உனக்குத்தான் !
களிப்பும் விடுவிப்பும்
அளிப்பாள் !
இரண்டாம் மாது
குழந்தை யில்லா விதவை !
பாதி மனைவி ஆவாள் உனக்கு !
மூன்றாம் மாது
வேண்டாம் உனக்கு !
திருமணம் ஆன மாது !
ஒரு பிள்ளையும் உண்டு.
முதற் பதிக்குப் பிறந்த பிள்ளை !
அவளது அன்புப் பகிர்வு
அந்தப் பிள்ளை மீதுதான் !
உந்தன் மீது
உண்டா காது உறவு !
சிந்திப்பாய் இப்போது !
வந்த வழியே திரும்பிச் செல் !
மரக் குதிரையை
திருப்ப வேண்டும் நான் !

++++++++++

சிறுவரை விளித்துக் கொண்டு
குருநாதர் நெருங்கினார்.
“மேலும் ஒரு கேள்வி மேதையே !”
“சீக்கிரம் கேள்
குதிரைச் சவாரிக்காரி
உதவிக்கு நான் தேவை.”
நேசிக்கப் போகிறேன்
நான் அவளை.”
வாலிபன் மீண்டும் கேட்டான் :
“ஈதென்ன விளையாட்டு
மேதையே ?
உமது ஞானத்தை ஏன் இப்படி
ஒளித்து வைக்கிறீர் ?”
குருநாதர் கூறினார் :
“என்னைத் தலைவனாய் ஆக்க
இம்மக்கள் விழைகிறார் !
குற்றத்தை விசாரித்து நான்
நீதி சொல்ல,
வேத நூலை விளக்க
வேண்டு மென விழைகிறார் !
என்னறிவு அதற்கு
இடங் கொடுக்க வில்லை !
இன்பத்தில் மூழ்க்க என்னை
இழுக்குது என்னறிவு !
நானொரு
கரும்புத் தோட்டம் !
அதே சமயத்தில் அதனைத்
கடித்து இனிப்பைச் சுவைப்பதும்
நான் தான் !”

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (November 1 2010)

Series Navigation