கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -24 பாகம் -1சிறுவரோடு விளையாடும் ஞானி

This entry is part of 36 in the series 20101101_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா++++++++++++++
சிறுவரோடு விளையாடும் ஞானி
++++++++++++++

++++++++++++++
எத்தனை விதமான பெண்டிர் ?
++++++++++++++

வாலிபன் ஒருவன் வழி நெடுவே
கேள்வி கேட்டு அலைந்தான் :
“ஞானி ஒருவரைக்
காண நான் விழைகிறேன்;
இயல வில்லை என்னால்.”
அருகில் நின்றவன் கூறினான் :
“மரக் குதிரை மேலமர்ந்து அங்கே
சிறுவரோடு
விளையாடி வரும்
அந்த மனிதரைத் தவிர
எந்த நபரும் இல்லை
எமது ஊரில்.
உள்ளொள,¢ கூரிய அறிவு
விரிந்த விழுமம் உடையவர்,
ஆனால் அவற்றை யெல்லாம்
மறைத்துக் கொண்டு
சிறுவரோடு விளையாடுகிறார்.”

++++++++++

சிறுவர் விளையாடும் இடத்தை
நெருங்கிக் கேட்டான் :
“அன்புத் தந்தையே !
நீர் சிறுவனாய் மாறியதின்
மர்மம் என்ன ?”
மா மனிதர் கூறினார் :
“போடா போ !
எந்த மர்மமும் இன்றில்லை”
வழிப்போக்கன் கேட்டான் :
“குதிரையைத் திரும்பி ஒருகணம்
பதில் அளிப்பீர் !”
குருநாதர் கூறினார் :
“விரைவாகக் கேள் !
நேர மில்லை எனக்கு !”

+++++++++++

தனது முக்கிய
வினாவைக் கேளாமல்
விகடம் பேசினான் வழிப்போக்கன் !
“திருமணம் புரிய வேண்டும்
பொருத்த மான பெண்ணொருத்தி
இருக்கி றாளா இந்தத்
தெருவில் ?”
குருநாதர் கூறினார் :
“முத்தரப் பெண்டிர் உள்ளார்
இத்தரையில் !
இருவர் துயர் கொடுப்பவர் !
ஒருத்தி ஆத்மாக்கு
அமுத சுரபி !
முதல் பெண்
முழு மனைவி ஆவாள் உனக்கு !
அடுத்த பெண்
பாதி மனைவிதான் உனக்கு !
மூன்றாம் பெண்
தீண்டாள் உன்னை !
ஊரை விட்டு
ஓடிப் போய்விடு
குதிரை உன் தலையை எட்டி
உதைப்ப தற்கு முன் !”

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (October 26 2010)

Series Navigation