சத்யானந்தன் கவிதைகள்

This entry is part of 36 in the series 20101101_Issue

சத்யானந்தன்


1.வானவில்

காலதாமதமாய் கூரையிலேறிக் கூவியது
சண்டைச் சேவலா என அவதானிக்கவில்லை
புத்தகச் சுமையில்

கொதிக்கும் தாரில் செருப்பு சிக்கித் தவிக்கையில்
மீட்டுக் கரை சேர்த்த விரல்களின் தொடுகை
மறுபடி வாய்க்காத காரணம் தேடவில்லை

திறவு கோல்களிின் சாவிப்பதங்களின்
சொடுக்குகளுக்கு இடைப்பட்டு மழை
இன்றி ஆரமிடும் நீளும் ஒரு வானவில்

2.இரு பக்கங்கள்

ஒலைச் சுவடிகள் அனேகம் மௌனித்து விட்டன
காகிதங்களிற் சில காணாமற் போயின பல
காலாவதி ஆயின

மாரிக்கால முற்றத்துப் பிள்ளைச் சொல்லாடல்
சில பதிவுகளாய் வேனிற்கால நெடுஞ்சாலை
நெடுக மரப்பாச்சி மௌனம் இடைவெளியாய்

மின்னணு வெளியில் விரவிய சொற்கள்
சுமக்கும் சேருமிடம் ஏற்குமிடத்தின்
இரு பக்கங்கள் அசல் நகல்

Series Navigation