கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -22என் நாக்கின் வடிவு

This entry is part of 41 in the series 20101010_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


++++++++++++++
என் நாக்கின் வடிவு
++++++++++++++

என்னுள் இருக்கும் கண்ணாடி
எனக்குக் காட்டுகிறது;
என்னால்
என்ன வென்றும் சொல்ல ஆஇயலாது !
ஆனால் தெரியா தென்றும்
நானுரைக்க முடியாது !
என் உடலி லிருந்து நான்
இயங்குபவன் !
என் ஆன்மா விலிருந்து நான்
எழுந்தவன் !
எந்த ஒன்றுக்கும் நானிங்கு
பந்தப் படாதவன் !

+++++++++++

உயிரோ டில்லைஆ நான் !
ஊசி நாற்றம் அடிப்பதை உன்
நாசி நுகர்கிறதா ?
என் கிறுக்குத் தனம் பற்றிப்
பேசி வருகிறாய் !
ஊசி முனை அறிவைக் கேள் !
நானும்
நட்மாடும் அங்கி மேல்
கொடிப் பழமாய் ஆஇருப்பது !
நீ அறிந்த ஒரு நபர் போல்
நானிருக் கிறேனா ?

+++++++++++++

வீழ்ந்த இந்தக் கொடிப் பழம்
நீர்மை மிகுந்தது !
தலை கீழாய்த் தொங்கினும்
துளிநீர் சிந்தாது !
அவ்விதம் நீர்த்துளி சிந்தினும்
அத்துளிகள்
இறைவன் மேல் விழுந்து
முத்துக்களைப் போல்
உருண்டு விடும் !

++++++++++

கடல் மேல் நானொரு
முகிலாய்
வடிவெடுப்பேன் !
சிந்திய
நீர்த் துளிகளை எல்லாம்
சேமிப்பேன் !
பொழிவேன் மழையாய்
சூரியன்
இங்குள்ள போது !
ஓரிரு நாட்களில்
மல்லிகைப்
பூக்கள் மலரும் என்
நாக்கு வடிவத்தில் !

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (October 4 2010)

Series Navigation