கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இசைக் கருவிகள் பாடும் கவிதை -14 எங்கே இசை பொங்கிடுமோ

This entry is part of 33 in the series 20100725_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


எங்கே இசை பொங்கிடுமோ

கவலைப் படாதே இந்தக்
கானங்களைக் காத்திடுவாய் என்று !
வருத்தம் அடையாதே
கருவிகளில் ஒன்று முறிந்து போயின் !
இசைக் கானமே
இன்பமயம் என நாமெல்லாம்
மூழ்கிக் கிடக்கிறோம் !
யாழின் நாண்களை மீட்டிச்
சூழ்வெளியில்
புல்லாங் குழல் இசை வெள்ளம்
பொங்கி எழட்டும் !
தரணியின் மகர யாழ்க் கருவியே
எரிந்து போயினும்
இன்னும் இசை வெள்ளம் மீட்டும்
மறைந்தி ருக்கும்
இசைக் கருவிகள் !

+++++++++++

மெழுகு வர்த்தி ஒளி துடித்து
அணைந்து போனது !
பிழைத் திருப்பது சிறு
தீப்பொறி
நமது கரங்களில் !
பாடும் இந்த இனிய கலை
ஆடும் கடல் நுரை !
ஆழ்கடல் தளத்தில் எங்கோ
நளின நகர்ச்சிகள்
வெளிவரும் ஓர் முத்திலிருந்து !
பொங்கிக் குவியும் கவிதைப் பாக்கள்
செலவாளி செல்வம் போல்
கட்டுமரக் கட்டை நுனி
கரையிலே விரும்பி
விட்டு விட்டதைப் போல் !
அவை உறிஞ்சும் மெதுவாய்
ஆனால் வலுவாய்
வேர் மூலம் நமக்குத்
தெரியாத வாறு !
வார்த்தையை நிறுத்து இப்போது !
இதயத்தின் நடுவே
திறந்து வை ஜன்னலை !
ஆன்மீகச் சிந்தனை
பறக்கட்டும்
உள்ளே வந்து போய் !

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (July 19, 2010)

Series Navigation