கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று = கவிதை -9

This entry is part of 26 in the series 20100516_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா++++++++++++++++++++++++++++++
காதல் உலகு ஒரு சூனியம்
++++++++++++++++++++++++++++++

நமது உயிர் வாழ்வை
இருட்டடிக்கும்
ஒரு சூனியத்தைப் போற்று !
நமது காதலால்
உருவான
இந்தக் குடியிருப்பிடம்
தோன்றியது
சூனியத் துக்கு !
எப்படியோ வெறுமை
புகுந்திடும்
இவ்வுயிர் வாழ்வு மங்கிப் போய் !
மீண்டும் மீண்டும்
போற்று அந்த விளைவை !

+++++++++++++

வெகு காலங் களாய்
வெறுமையில் கடத்தினேன்
எனது குடிவாசத்தை !
பிறகு ஒரே பாய்ச்சலில்
கரத்தின் ஒரே சுழற்சியில்
அப்பணி முடிந்தது !
நான் யார் என்பது
நழுவிப் போனது !
முன்னிருப்பது
கண்ணுக்குத் தெரியாது !
ஆபத்தைத் தரும் அச்சம்
அகன்றது !
எனது நம்பிக்கையும்
மலைமேல் ஏறும் தேவையும்
விடுதலை பெற்றன !

++++++++++++

இங்குள்ள குன்று இப்போது
வெறுமை நோக்கி
வெளியே வீசப் பட்ட
ஒரு துரும்பு இழையின்
சிறு துணுக்கு !
பொருளற்றுப் போயின
நான் கூறும்
இந்த வார்த்தைகள் !
குடிவாசம், சூனியம், சிறு துரும்பு
குன்று, வாய்ச் சொற்கள்
கூறுகின்ற
அர்த்தம் யாவும்
பலகணி வழியே கூரையில்
சரிந்து
நழுவிச் செல்லும் !

*****************

தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 10, 2010)

Series Navigation