கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -5 பாகம் -1

This entry is part of 28 in the series 20100227_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


உதவ முடியா நெருக்கடிகள்

கடந்த வேளை நான் மட்டும்
இருந்தேன் எனது
உடலென்னும் படகில் !
விளக்கில்லை !
கால் வைக்க நிலமில்லை
எப்புறமும் !
அடர்ந்த மேகங்கள் !
நீர் மேலிருக்க முயல்கிறேன்
நீர்க்கடியில் ஆயினும்
ஏற்கனவே
வாழ்ந்து கொண்டு வருகிறேன்
ஆழியின்
வேலிக்குள்ளே !

+++++++++++++++

பரிதியின் அத்தமனம்
சில வேளை
பரிதி உதிப்பதாய் நமக்குத்
தெரிவ தில்லையா ?
வஞ்சக மற்ற காதல் வாழ்வு
எப்படி
இருக்கு மெனத் தெரியுமா ?
அழுகிறாய் நீ !
எரிந்து போவதாய்ப்
புலம்பு கிறாய் !
சிந்திப் பாயா நீ
எவராவது
புகை மூட்டத்தில்
வெளிறிப்
போகார் என்று ?

+++++++++++++++++++++++++++
உருகும் பனியாக இரு
++++++++++++++++++++++++

முழுச் சுய உணர்வோடு
எந்தக் குறிக்கோளும்
இல்லாது
என்னைக் காண வா !
அப்படி
ஒருவன் உள்ளானா என்று
நான் கேட்கிறேன் !
நிலவு !
முழு நிலவே உன்
வீட்டுக்குள் ஒளிவீசும் !
தெரு வழியே
ஓடித் திரிகிறோம்
நானும் என் தோழரும் !
நானிங் குள்ளேன் என்றோர் குரல்
வீட்டி லிருந்து கேட்கிறது !
வானைப் பார்க்கிறோம் காதில்
கேட்காமல் !

++++++++++

என் செல்லக் குயில்
பெருமூச்சு விடும் தோட்டத்தில்
குடி போதையில்
மயங்குவதைப் போல் !
மரங் கொத்தி
எங்கே எங்கே யென்று
அழுது
முணுமுணுக்கும் !
அப்போது நள்ளிரவு
பக்கத்து வீட்டார் யாவரும்
பதறி எழுந்து
தெருவுக்கு வந்தார் சிந்தித்து :
“மாயத் திருடன் மறுபடி
வருகிறான் !”
அவனைக் காண்பார் இல்லை !
மெய்க் கள்வனும்
கூக்குர லிட்டு
தாக்க வருவான் அங்கு !

*****************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 23, 2010)

Series Navigation