கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) – ஆத்மாக்களின் உணர்வுப் பரிமாற்றம் – கவிதை -23 பாகம் -3
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
முன்னிரவில் தாயை விளித்துச் சிறுமி கேட்கிறாள் : “வயிறு பசிக்கிறது அம்மா”. “சற்று பொறு மகளே” என்று தாய் பதில் சொல்வாள். நடு ராத்தியில் மறுபடியும் சிறுமி கேட்கிறாள்: தாயே பசிக்குது. தா எனக்கு ரொட்டி.” “ரொட்டி இல்லை கண்ணே” என்று பதில் கூறுவாள் தாய். விடிவதற்கு முன்பு மரணம் அண்டித் தாயையும் சிறுமியையும் ஒன்றாய்த் தின்கிறது. தெரு வீதியில் இருவரும் நித்திய உறக்கத்தில் விழுந்து கிடக்கிறார். பீடுநடை போடுகிறது மரணம் தூரத்து மாலை அத்தமத்தை நோக்கி !
கலில் கிப்ரான்
(லெபனானில் முதல் உலகப் போரின் சமயத்தில் ஏற்பட்ட பஞ்சத்தை பற்றி)
+++++++++++
கிராமத்தார் தூங்கிப் போனார்
மரங்களுக் கிடையில்
இருக்கும்
தமது குடிசைகளில்
என் கண்மணி !
விரைந்து போயின அவரது
ஆன்மாக்கள்
கனவுக் களம் நோக்கி
என் கண்மணி !
அனைத்து ஆடவர் பொன்தேடும்
வினைப் பளுவில்
முனைந்துள்ளார் !
பசுமையான
செங்குத்துப் பாதையில்
கடுத்துப் போயின கால்கள் !
களைத்து இடருடன்
கனத்துப் போயின கண்கள் !
தொப்பென வீழ்கிறார்
படுக்கைச் சுகத்தில் என் கண்மணி
மனம் தடுமாறி
பயப் பேய் தாக்கி !
+++++++++++++++++
பட்டினிப் பாலகர்
விடுதிகளில் தள்ளாடுவர் !
துயர்ப்
படுக்கையில் தாய்மார்கள்
பெருமூச்சு விடுகிறார்
புரண்ட வண்ணம் !
வானுயர்ந்து போகும்
மக்களின்
வறுமைத் தொல்லை !
வேதனைக் கனவுகள் எல்லாம்
கசப்புக் கவலைகளாய்
கலங்க வைக்கும்
இதயங்களை !
*************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 23, 2010)
- நினைவுகளின் சுவட்டில் – (44)
- டீலா, நோ டீலா!
- ஜெயந்தன் நினைவுகள்
- முள்பாதை 18
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -6
- சார்பு
- மொழிவது சுகம்: மனுநீதிச் சோழனும் மரண தண்டனையும்
- ஹாங்காங்கில் சீன வருடப்பிறப்பு: அனுபவம் புதுமை
- துளி விஷத்திற்கான விலையொன்றும் அதிகமில்லை..
- நிழலின் கீழ் ஒளிந்திருக்கும் சூரியன்
- தனது அறைக்கு வந்திருந்த வாப்பா
- பிம்பம்
- முல்லைப் பெரியாறு
- அகாலத்தில் நிகழும் அழைப்புகள்
- தொலைந்த பாதங்களின் சுவடுகளேந்தி…
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -5 பாகம் -1
- ரேடியம் கண்டு பிடித்த மேடம் கியூரி (கதிரியக்கம்)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) – ஆத்மாக்களின் உணர்வுப் பரிமாற்றம் – கவிதை -23 பாகம் -3
- சூதாட்டம்
- வெண்குருகு ஆற்றுப்படை
- ரேனிகுண்டா- சினிமா விமர்சனம் துயரப் பெரும்பாதையில் மரணத்தைப் பின்தொடரும் இளம்குற்றவாளியின் குரல்
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -3
- கலா பவனத்தில் ஸ்ரீதர் பிச்சையப்பா
- வேதவனம் -விருட்சம் 74
- மெலிஞ்சி முத்தனின் “வேருலகு” குறுநாவல் விமர்சன ஒன்றுகூடல்
- கூர்-2010 இரவு எரிந்து கொண்டிருக்கிறது…
- பிரான்சு கம்பன் கழகம் பொங்கல் விழா , செந்தமிழ்க் காவலர் பேராசிரியர், முனைவர் சி. இலக்குவனார் நூற்றாண்டு விழா
- குதிரை