கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -4 பாகம் -2
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
உதவ முடியா நெருக்கடிகள்
என் குழப்பத்திற்கு மன்னிப்பீர்
என்னை !
எப்படிக் குழப்பத்தில் ஒருவன்
சீராய்
இயங்க முடியும் ?
புறாக்களின்
கூக்கூக்களையும்
காக்கைகளின் கத்தலையும்
சேர்த்துக் கொண்டு பூங்காவின்
இலைகளை எல்லாம்
எண்ணுவது போலாகும் !
கூட்டலும், கழித்தலும்
கூட்டுறவு அமைப்புகளும்
சில சமயம்
ஆட்டம் கண்டு விடும் !
ஆயிரக் கணக்கான
குடிவாசிகளில்
மாந்தர் நாம்
மனிதன் நான் என்னும்
மமதை நோக்கில்
நான் யார் ?
இப்படி நான் கேட்பதைத்
தடுக்காதீர் !
எப்போது தப்புவேன்
இந்தக் கட்டுப்பாட்டி லிருந்து
என்பதைக் கேட்பீர் !
முறியும் பாண்டம் எதையும்
என் முன் வைக்கதீர் !
எனக்குள்ளே ஒளிந்துள்ளது
ஓர் மூலத்துவ வடிவம் !
எதிரே நீ
காண்பதோர்
கண்ணாடிப் பிம்பமே !
நீ பூரித்தால் எனக்கும் பூரிப்பு !
வருத்த மானால் உனக்கு
வாழ்வு கசந்தால் உனக்கு
வையகம் நளின மானால் உனக்கு
எனக்கும் அவை எல்லாம்
எதிர்ப்படும் !
பச்சைப் புல் தளத்தில்
சைப்பிரஸ் மரத்து நிழல் போல்
ரோஜா வுக்கு நிழல் போல்
நெருங்கி நான் வசிப்பேன்
ரோஜா வுக்கு அருகில் !
காரிகை நீ பிரிந்து சென்றால்
மாறுவேன் நானொரு முள்ளாய் !
ஒவ்வொரு வினாடியும்
அடுத்தடுத்து
ஒரு கிண்ணத்தில் அருந்துவேன்
என் குருதி ஒயினை !
ஒவ்வொரு கணமும் கதவில் வீசி
உடைக்கிறேன்
ஒரு கிண்ணத்தை !
உன் முன் நிற்கிறேன்
என்னைப் பிளந்து
உள்ளே திறந்து பார் !
ஸலாதீன் கருணையால்
என் நெஞ்சில் மெழுகு வர்த்தி
விளக்கேற்றும் !
வேறு நான் யார் ?
அவனது
வெற்றுப் பிச்சைப் பாத்திரம் !
***************************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 15, 2010)
- செயற்கைக் கதிரியக்கம் ஆக்கிய ஐரீன் ஜோலியட் கியூரி (1897-1956)
- பெருநகரப் பூக்கள்
- கவிதைகள்
- என் தந்தை ஜெயந்தன்
- குழந்தைக் கவிதைகள்
- விருந்து
- தேடல்
- விலைபோகும் மில்களும் வீதிக்கு வந்த வாழ்க்கையும்
- வளரும் பருவத்தில் ஆசிரியர் – மாணவர், பெற்றோர் – குழந்தைகள் உறவுகள் மேம்பட….
- இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு மடல் (முடிவு)
- இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு மடல்
- முள்பாதை 17
- நீரலைகள் மோதி உடையும் படிக்கட்டுகள்
- ODI விளையாடு பாப்பா
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -5
- வேதவனம்-விருட்சம் 73
- பாகிஸ்தான் என்ற நல்ல பக்கத்து வீட்டுக்காரன்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆத்மாக்களின் உணர்வுப் பரிமாற்றம் கவிதை -23 பாகம் -2
- ஒரு சமூகம்…. என்னை கடந்திருந்தது…..
- 2009-ஆம் ஆண்டுக்கான இலக்கியப் பரிசுகள் – அறிவிப்பு
- ‘துணையிழந்தவளின் துயரம்’ கவிதை நூலின் வெளியீட்டு விழா
- அமீரகத் தமிழ் மன்றத்தின் பத்தாம் ஆண்டு விழா
- அக்கினிப் பிரவேசம் !
- சீதாம்மாவின் குறிப்பேடு ஜெயகாந்தன் -2
- டாக்டர் ரெ.கார்த்திகேசுவின் – ‘ஒரு சுமாரான கணவன்’
- கற்பனையின் தளம் அரவிந்தனின் குழிவண்டுகளின் அரண்மனை
- கவிதைக்குரிய காட்சிகள் செல்வராஜ் ஜெகதீசனின் “இன்ன பிறவும்”
- உயிர்பெற்ற சிற்பங்கள் கலாப்ரியாவின் “நினைவின் தாழ்வாரங்கள்”
- இந்தியச்சூழல்களில் சமூக முரண்பாடுகளும் சமயங்களின் எதிர்வினைகளும் – தேசிய கருத்தரங்கு
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -4 பாகம் -2
- ஒரு ஓவியத்திலிருந்து அல்லது பவித்திராவின் நீர்க்குவளையிலிருந்து விடுப்படும் ஆற்றல்
- வழிதப்பிய கனவுகள்..!