வேத வனம் -விருட்சம் 68

This entry is part [part not set] of 26 in the series 20100115_Issue

எஸ்ஸார்சி


கயிறு உறுதியாகட்டும்
தீராக்கிணற்று த்தண்ணீர்
இறைக்கப்படுக
கலைப்பைகள் பூட்டப்படட்டு
பக்குவ மண் மீது
நல் விதைகள் தூவப்படுக
தரை மீது விளைத்
தானியங்களை அரிவாள்
தன் கீழ் கொணரட்டும்
அழகுப்பியுடைக்கலப்பையின்
கூரிய கொழுவே
பசு ஆடு இளம்யுவதி
எனச்சுமந்து
விரையும் இரதத்திற்கு
ஆதாரம் நீ யே ஆகிறாய்
மண்மீதமர் எம் கலப்பை
செழுமை உறுக மண்
உழவர்கள் ஏர்க்கால்களைச்
சுற்றி வரட்டும் சுகமாய்
அக்கினி வருணன்
பூஷணன் இந்திரன் மித்திரன்
மனிதர் செடி கொடி
விருட்சங்களிடை காமம் சொரிக ( கிருஷ்ண யஜுர் 4/189)
உஷையே கதிரோனுக்கு
முன்பாய் வருபவள்
எல்லோர் இல்லத்தும்
அமரும் தாயவள்
தாய்களைச்சுமப்பவள்
அழகு நிலைப்பு நேர்மை
முக்குணம் தாங்கும் உஷைகள்
வானத்தில் கொடியோடு
பவனிக்கிறார்கள்
அனல்களிடை முவ்வழிகள்
வல்லமை மக்கட்பேறு
நல்லோன் செயலுக்கு
உறுதுணையாவது
என்பன அம்மூன்று
ஜகதி பிரகதி
காயத்ரி திருஷ்டுபு அநுஷ்டுபு
முனிகளின் இந்நான்கு
துதிகள் விரைந்துபோய்
மேலுள்ள அச்சொர்க்கத்தை
வளமாக்குகின்றன
பிரசாபதி இவ்வுலகை
அய்ந்து பூதம் கொண்டு ஆக்கி
அய்ந்து அய்ந்தால் காக்கிறான்
இந்திரவலிமையால் மட்டுமே
அசுரர்கள் வெல்லப்பட்டர்கள்
இந்திரன் அசுர காதகன்
உஷைகளே எம்மை இளமையுடன்
ஆக்கினீர்கள்
சத்தியம் பேசி
வஞ்சனை தவிர்த்து
அனுபவிப்போம் இனி மனங்களை
மட்டும் யாம்
எல்லாம் அறிபவனே
எம் நல் மனத்து உறைவோன்
உஷையவள் நித்தம்
தினங்களை ஆட்சி செய்கிறாள்
தன் மூப்பறியா உஷையே
அநித்தியம் அத்தனைக்கும்
மூப்பு வர்ஷிக்கிறாள் ( கி. ய. 4/206)
—————————————————-

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி