கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம்-6 மதுக்குடி அங்காடி (The Tavern)
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
வெவ்வேறு வகை உணவுத் தட்டுகள்
++++++++++
(விண்வெளியில்)
துகள் ஒவ்வொன்றும் எவ்விதம்
நகர்வ தென்று நோக்கு !
ஒவ்வொரு வரும் பயணத்தி லிருந்து
எவ்விதம்
இங்கு வந்து அடைந்தனர்
என்பதைத் தெரிந்து கொள் !
வெவ்வேறு வகை உணவுகளை
ஒவ்வொருவர்
எவ்விதம் விரும்புகிறார்
என்று உளவிப் பார் !
கதிரவன் அதி காலையில்
உதிக்கும் வேளை
தாரைகைகள்
மறைந்து போவதை நோக்கு !
ஆறுகள் யாவும் எவ்விதம்
கடலை நோக்கி ஓடுவதைக்
காண்பாய் !
+++++++++++++
சமையல் செம்மல்
உணவுப் பண்ட வகைகளை
வெவ்வேறு விதமாகத்
தகுதிக் கேற்றார் போல்
ஒவ்வொரு வருக்கும்
தயாரித்து
வைப்பதைப் பார் !
கடல் நீர் கொள்ளும் இந்த
மதுபானக்
கிண்ணத்தைப் பார் !
கண்ணாடியில் தமது முகத்தைக்
காண்போரைப் பார் !
பாவனை புரியும் விழிகள் மூலம்
பூராவும்
ஆபரணம் போல் மின்னும்
நீருக்குள்ளே
உற்று நோக்கு !
***************************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia
+++++++
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (January 4, 2010)]
- வேதக்கோவில்
- வேதக்கோவில் (முடிவு)
- நெனச்சது ஒண்ணு
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) நாலங்க நாடகம் அங்கம் -4 காட்சி -5
- எக்கியின் குடும்பம்
- ஆலமரம்
- நினைவுகளின் தடத்தில் – (41)
- கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் இயல் விருது -2009
- வயிறு
- தூண்டிற்புழு
- பட்டாம்பூச்சிகள் சுதந்திரமானவை
- ஒற்றைக் காலுடன் நிற்கிறது கடவுள்
- செவி மட்டும் செயல் படட்டும் .
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம்-6 மதுக்குடி அங்காடி (The Tavern)
- வேத வனம் விருட்சம் 67
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) < ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -3
- நீ விட்டுச் சென்ற மழை
- யாவரும் அறிவர்.
- அணு ஆயுதப் போரில் விளையும் பேரழிவுகள். (கட்டுரை: 5)
- புதுவகை நோய்: இமி-4
- ‘‘பண்டிதமணியின் திருவெம்பாவை உரைத்திறன்’’
- முறிந்த பனை: சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகம்
- இது பெரிய எழுத்து மற்றும் மலையாளக் கதைகள்
- முள்பாதை 12