கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << அழகுத்துவம் >> (Beauty) கவிதை -19

This entry is part of 33 in the series 20091119_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


Kahlil Gibran’s Paitings
Poetry of Trees

“உனது கண்கள் நோக்கி அமைதியில் ஓய்வெடுக்கும் உலக மயமான அழகுத்துவத்தில் நீடித்து நிலவுகிறது என் வாழ்க்கை. இயற்கைதான் அழகுத்துவம் எனப்படுவது. குன்றுப் பிரதேசங்களுக்கு இடையே ஓர் ஆட்டிடையன் பெறும் களிப்பின் ஆரம்பக் காட்சி அது. ஒரு குடியானவன் வயல் நிலங்களில் காணும் பூரிப்புக் களம் அது. மலைப் பிரதேசச் சமவெளிகளின் இடையே அற்புதப் பழங்குடியினர் அடையும் பேரானந்தம் அது.”

கலில் கிப்ரான்

+++++++++

<< அழகுத்துவம் >>

கவிதை -19

ஆத்மாவை ஈர்ப்பதுதான்
அழகுத்துவம் !
அள்ளிக் கொடுக்க
ஆசைப் படுவதைத் தவிர
அது வேறு எதையும்
யாசிப்ப தில்லை !
அழகத்துவத்தை நீ சந்தித்தால்
உள்ளத்தின்
உள்ளே உள்ள
உன் கைகள் நீண்டு அதை
உன்னிதய பீடத்துடன்
பின்னிவிடும் !
களிப்பும் துயரமும்
கலந்த ஓர் மகத்துவம் !

+++++++++++++++++

நோக்கும் போது உனக்குக்
காணப் படாது !
புரிந்து கொண்ட போது
உறுதி யற்றுப்
புதிராக இருப்பது !
காதில் விழும் போது
ஊமைச் சொல்லாய்ப் போவது !
புனிதத்திலும்
புனித மான அழகத்துவம்
உன்னுள் உதித்து
உன்னுள் முடிந்து போவது
உன் கற்பனை
உலகைத் தாண்டி !

+++++++++++++

அழகுத்துவம் பற்றி எனக்கு
விளக்குவாய் நீ !
தாறு மாறாய்
தம் இச்சைப் படி மாந்தர்
மொழிந்திடுவார் !
அழகுத்து வத்தைப்
மற்றவர்
மதிப்பதைக் கண்டுள்ளேன்
அழகினை
வழிபடுவோர் இருக்கிறார்
பல்வேறு முறைகளில்
பல்வேறு
பழக்க வழக்கத்தில் !

++++++++++++++

அழகுத்துவம் என்பது
விந்தை அளித்திடும் ஓர்
அபார சக்தி !
மனித இனம்
எல்லா வற்றுக்கும் அஞ்சிடும் !
ஆன்மீக அமைதியை
அள்ளிக் கொடுக்கும்
சொர்க்கத் துக்கு நீ
அஞ்சு கின்றாய் !
ஓய்வளித்து
மனச்சாந்தி தரும்
இயற்கைக்கு அஞ்சுகிறாய் !
சினமுற்றுச் சீறுவதாய்க்
குற்றம் சாட்டி
தெய்வீகச் சக்திக்குப்
பயப்படு கிறாய் !

+++++++++++++

கருணை வடிவான
கடவுளோ
பரிவும் பேரன்பும்
நிரம்பி யுள்ளது !
அழகத்துவம்
அறிவுடை யோரை
ஏந்திச் சென்று
சத்தியத்தின்
ஆசனத்தில் அமர்த்திடும் !
ஆத்மாவை ஈர்ப்பதுதான்
அழகுத்துவம் !
அள்ளிக் கொடுக்க
ஆசைப்படு வதைத் தவிர
அது வேறு எதையும்
யாசிப்ப தில்லை !

************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (November 17, 2009)]

Series Navigation