பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 54 << சின்ன ராணி >>

This entry is part of 25 in the series 20091002_Issue

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


சின்ன ராணி நீ
என் எலும்பு மேனிக்கு !
முடி சூட்டுவேன் உனக்குத்
தென்னகத்தின்
வாகை சூடி !
பசுமை இலைகளோடு
புவி உனக்குத்
தயாரித்த
கிரீடம் இலாது நீ
வாழ முடியாது.

++++++++++

உன்னைக் காதலிக்கும்
என்னைப் போல் வந்தவள்
பசுமை
வட்டாரத்தி லிருந்து !
வந்தது
அங்கிருந்து தான்
நம் குருதியில் ஓடும்
இந்தக் களிமண் !
வர்த்தகக் கடைகள்
நாம் போகும் முன்
மூடி விடுமோ என்றஞ்சி
நகரத்தில் திரிந்தோம்
குழம்பிப் போய்
நாட்டுப் புறத்தாரைப் போல் !

+++++++++++

என்னருமைக் கண்மணி !
கனிகளின்
நறுமணம் கொண்டது
உன்னிழல் !
தென்னகத்து வேரிலே
பின்னிக் கொண்டவை
உன் விழிகள் !
புறாவைப் போல் வடித்த
களிமண் பொம்மை
உன்னிதயம் !

++++++++++++

கூழாங் கற்கள் போல்
நீரில்
வழுவழுப் பானது
உன் மேனி !
புதுப் பனித் துளியில்
கொத்தானவை
உனது முத்தங்கள்
பழங்கள் போல் !
உன் அருகில் உள்ள போது
என் வசிப்பு
இந்த வைய கத்தில் !

++++++++++++++

தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (September 29, 2009)]

Series Navigation