கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு கவிஞனின் கூக்குரல் >> கவிதை -16 பாகம் -1 (மரணத்தில் எஞ்சியவை)
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
“உலக நாடுகளின் ஊர் நகரங்களில் மனிதர் பல்வேறு குழுக்களாகவும் இனங்களாகவும் பிரிவு பட்டிருக்கிறார். ஆனால் நானோ எந்தக் குடியிருப்பையும் சேராமல் எல்லா இனத்தவருக்கும் புதியவனாய்த் தோன்றுவதாக எனக்குத் தெரிகிறது ! பிரபஞ்சமே என் பிறந்த தேசம் ! உலகக் குடி இனத்தோரே என் பூர்வீகக் குலத்தினர் !”
கலில் கிப்ரான்
” மனிதர் பலவீனமானவர் ! தமக்குள் பலவேறு பிரிவுகளை அவர் வகுத்துக் கொள்வது எனக்கு வருத்தம் அளிக்கிறது ! குவலயம் குறுகிப் போனது ! அதைத் தனித்தனி ராஜியங்களாகவும், ஏகாதிபத்தியங்களாகவும், மாநிலங்களாகவும் பிளப்பது அறிவீனமாகும் !”
கலில் கிப்ரான்
Fig. 1
Paintings of Kahlil Gibran
The Gloomy Woman
+++++++++
<< ஒரு கவிஞனின் கூக்குரல் >>
கவிதை -16 பாகம் -1
இவற்றை நான் புரியக் காரணம்
அவற்றில் நான் வசிப்பதினால் !
விதி என் கைகளுக்கு
விலங்கிட்டு நான் புரிவதைத்
நிறுத்தினால்
மரணம் மட்டுமே பிறகென்
விருப்பாகும் !
காரணம் நானொரு
கவிஞன்.
என்னால் கொடுக்க இயலாத
கதி நேர்ந்தால்
கை நீட்டிப்
பெறுவதையும் நான்
மறுத்திடுவேன் !
+++++++++++++
ஆழமாய் என்னிதயத்தில்
வித்திடுவது
அறநெறி உறுதி !
கோதுமைத் தண்டுகள் சேமித்து
அறுவடையில்
தருவேன் பசித் தோர்க்கு !
உயிரளிக்கிறது
என் ஆத்மா
திராட்சைக் கொடிக்கு !
அதை அழுத்திச் சாரெடுத்து
அளிப்பேன்
தாகம் உடை யோர்க்கு !
+++++++++++++
எண்ணை இட்டு
என் விளக்கை நிரப்புபவன்
இறைவன் !
விளக்கை வைப்பேன்
பலகணியில்
வழிப்போக் கனுக்கு
வழி காட்ட
இருட்டினிலே !
++++++++++++
சீறி எழும்
சூறாவளி போல்
மனித இனம் !
பெரு மூச்சு விடுவேன் நான்
மௌனத்தில் !
நின்று விடும் புயல் அடங்கி
என்றன் பெருமூச்சு
ஒன்று
இறைவனை நோக்கி
ஏகும் போது !
+++++++++++
மனித இனம்
பற்றிக் கொள்ளும்
பூதளப் பொருட்களை !
ஆயினும்
பின்பற்றத் தேடுவது நான்
அன்பு விளக்கொளியை
எப்போதும் !
அக்கினியால் தூய தாக்கும்
என்னை அது !
எனது நெஞ்சை விட்டு
அறுத் தெறியும்
மனித வெறுப்பை !
+++++++++++
பெரு வாரியான
செல்வச் சாதனங்கள்
மரணம் தரும்
இன்னலின்றி
ஒரு மனித னுக்கு !
அன்பு நேயம்
அவனை விழித்திட வைக்கும்
இன்பம் தரும்
வலியோடு !
************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (September 21, 2009)]
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -12
- அப்படியே….!
- விஸ்வரூபம் – ஒரு அறிவிப்பு
- நல்லாசிரியர்
- அணுவளவும் பயமில்லை
- கடற்பறவையின் தொழுகை
- தொலைக்காட்சி
- கண்ணோடு காண்பதெல்லாம்
- ஆயுதங்களால் போரிடுவது எளிதானது
- நாடகம் நிகழ்வு அழகியல் _வெளி ரங்கராஜன்
- அவிழ்க்கப்படாத சில முடிச்சுகள்
- பட்டாளத்து மாமா
- வேத வனம் விருட்சம் -51
- பணமா? பாசமா?
- விண்கோள்களின் சுற்று விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர் (1571-1630)
- அண்ணா – வேலுமணியின் வரைபடம்
- கடவுளிடமிருந்து பறிக்கப்பட்டவர்கள்
- ‘தேவனி’ன் நாவல் ‘கல்யாணி’
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு கவிஞனின் கூக்குரல் >> கவிதை -16 பாகம் -1 (மரணத்தில் எஞ்சியவை)
- சாகித்திய அகாதமி: ஆனந்தகுமாருக்கு சா அ பரிசு
- அப்துல் அஸீஸ் எழுதிய கட்டுரை, வஹாபி சிந்தனையின் நீட்சி
- முடிந்த முடிவாக இஸ்லாம் இருக்கிறது என்றும் வாதத்திற்கும், மருநோக்கல்களுக்கும் இடமில்லை என்பதைத் தெளிவு படுத்தியமைக்கு
- அறிவியல் புனைகதை:8 ஐஸ்வர்யா பாட்டியும் தமிழ் பேசும் கிளியும்
- சிங்கப்பூர் கவிமாலை விருது விழா
- PRESTIGE GROUP Presents “Katha Collage” & Ismat Apa Ke Naam – II
- நியூஜெர்ஸி பாரதி தமிழ் சங்கம் – தமிழ் வகுப்புகள்
- சிறப்புமிக்க படைப்பிலக்கியமானதொரு கட்டுரை: கி.ரா.’வின் ‘அண்ணாச்சி’
- தவறியவர்களுக்கு
- அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,
- விவேகனுக்கு எனது பதில்
- அப்துல் அஸீஸ் உலகம் தட்டை என்று சொல்கிறாரா?
- முத்துசாமி பழனியப்பன் கவிதைகள்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 53 << நீ வறுமைப் பெண் >>
- ரசனை
- நட்புடன் நண்பனுக்கு