கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -4 (மரணத்தில் எஞ்சியவை)

This entry is part of 54 in the series 20090915_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


Fig. 1
Kahlil Gibran Paintings
“ The Gloomy Woman ”

“முன்னேறு ! ஒருபோதும் இடையில் தடைப்படாதே ! ஏனெனில் முன்னேற முனைவது பூரணத்துவம் நோக்கிச் செல்வது. ஆகவே முன்னேறு ! பாதையில் முளைத்த முட்களைப் பார்த்து அச்சம் கொள்ளாதே ! ஏனெனில் அவை இழக்கும் குருதியை மட்டுமே கசிய வைக்கும்.”

“ஆன்மா தான் வேட்கை கொள்வதையே முடிவில் அடைகிறது.”

“காதல் பிரிவு வேளை வரும் தருணம் வரை தன் சொந்த ஆழத்தை அறியாது. அது எப்போதும் அறியப் படுவதுதான்.”

கலில் கிப்ரான்

+++++++++

<< மரணத்தின் அழகு >>

கவிதை -15 பாகம் -4
(மரணத்தில் எஞ்சியவை)

மண்ணைச் சேர்ந்த சாதனங்களை
எல்லாம்
என்னிடமிருந்து நீக்குவீர் !
அன்னைப் பூமியில்
என்னை
ஆழமாய்ப் புதைப்பீர் !
எனது தாயின் மார்பு மீது
கவனமாய்க் கிடத்துவீர் !
மிருதுவான மண்ணால் எனது
உருவத்தை மூடுவீர் !
ஒவ்வொரு பிடி மண்ணிலும்
கலந்திடுவீர்
மல்லிகை விதைகளை.
என்மேல் அவை
முளைத்தெழும் போது
என்னுடல் அணுக்கள்
இதயத்தின்
நறு மணத்தைப் பரப்பிடும்
சூழ்வெளியில் !
என் மௌன ரகசியத்தை
இரவிக்கும்
எடுத்துச் சொல்லித்
தென்றலோடு
ஒன்றி விடட்டும் !
கால் நடையில் செல்வோனுக்கு
ஆறுதல் அளிக்கும் அது !

++++++++++++

ஆதலால்
என்னை விட்டு விலகுவீர்
நண்பர்களே !
மௌனப் பாலை வனத்தில்
எட்டு வைப்பது போல்
என்னை விட்டுப் பிரிந்து போவீர்
அமைதித் தடங்களால் !
கடவுளை நான் அடைய
விடுவிப்பீர் என்னை !
மெதுவாய்க் கலைந்து செல்வீர்
பின்னர் யாவரும்
தென்றல் காற்றின் அதிர்வில்
ஆப்பிள் மலர்களும்
ஆல்மண்டுப் பூக்களும்
அசைந்து செல்வது போல் !

+++++++++++

திரும்பச் செல்வீர் உமது
மகிழ்வு இல்லங்களுக்கு !
உமக்கும் எனக்கும்
மரணம் காணாத
ஒன்றைக் காண்பீர் அங்கே !
நீங்கிச் செல்வீர்
இந்த இடத்தை விட்டு
ஏனெனில்
நீவீர் இவ்விடம் காண்பது
தாரணியி லிருந்து வெகு
தூரத்தில் உள்ளது !
விட்டுச் செல்வீர்
என்னை மட்டும் !

************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (September 7, 2009)]

Series Navigation