பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 52 << என் நேசம் >>

This entry is part of 54 in the series 20090915_Issue

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


நேசம் ! விதையி லிருந்து விதைக்கு
செடியி லிருந்து செடிக்கு
இருண்ட தேசங்கள்
பின்வழிப் புகுந்த
புயற் காற்றின் மீதும்
ரத்தக் கறைக் காலணிகள்
பூணும்
யுத்தத்தின் மீதும்
இரவில் முள் கொண்ட
பகற் பொழுதின்
பரிவு எனக்குண்டு !

++++++++++

தீவுகள், பாலங்கள் அல்லது
தேசக் கொடிகள்,
எங்கெங்கு சென்றாலும்
வயலின்
இசைக் கருவிகள் இருந்தன
ஓடுகின்ற
இலையுதிர் காலத்தில்
குண்டு ரவைகள் இடப்பட்டு !
ஒயின் கிண்ணத்தின்
ஓரத்திலே மினுமினுக்கும்
பூரிப்பு !
துக்கம் நிறுத்தி விடும் எம்மைக்
கண்ணீரால்
கற்ற பாடத்துடன் !

+++++++++++

குடியரசு நாடுகளின்
இடையே
அகந்தை பிடித்த அரண்மனைகளை
பனிபடிந்த சிகரத்தை
அடித்து முறித்தது புயல் !
திருப்பி அளிக்கும் மலர்களைச்
சன்மானமாய்ப்
பிறகு
அவரது பணிக்கு !

++++++++++++

இலையுதிர் காலத்தில்
உதிரும் போது
எப்போதும்
எம்மைத் தொடுவ தில்லை !
எமது நிரந்தரப் பீடத்தில்
முளைத்துக்
காதல் ஓங்கி
வளரும்
பனித்துளி போல்
தகுதியோடு
ஆற்றல் பெற்று !

++++++++++++++

தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (September 7, 2009)]

Series Navigation