பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 48 << விளக்கின் ஒளி நீ >>

This entry is part of 44 in the series 20090813_Issue

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


விளக்கின் ஒளி நீ ! அமுதுக்கு
வெறுப்பு நிலவு நீ !
புண் படுத்திய இரகசியத்தை
மண்ணில் பரப்பும்
மல்லிகை நீ !
அச்சக் காதலி லிருந்து
வெண்மையும் மென்மையும்
கொண்ட கைகளி லிருந்து
பொழியும்
அமைதி நிலையை என்
விழிகளில் !
ஏற்றி வைக்கும்
ஒளிப் பரிதியை
எனது
ஐம்புலன் களில் !

என்னருங் காதலி !
எத்தனை விரைவில் நீ
கட்டி முடித்தாய்
இனிய ஓர் எழுச்சியை
எனது புண் பட்ட
இடங்களில் ! வேட்டைப்
பறவை யோடு நீ
போராடி
நாமிருவரும் சேர்ந்து
இப்போது
ஒற்றைக் குடித் தம்பதிகளாய்
எப்படி நிற்கிறோம்
இவ்வை யத்தின் முன்பு !

என்னினிய கொடூரக் காதலி !
என்னருமை மாட்டில்டி* !
அப்படித்தான் இருந்தது
அப்போதும் !
அப்படித்தான் இருக்கிறது
இப்போதும் !
அப்படித்தான் இருக்கும்
இனிமேலும்
அன்று மலர்ந்த
கடைசிப் பூவோடு
ஆயுட் காலம் நமக்குச்
சமிக்கை
அறிவிக்கும் வரை !

அப்புறம் நீ ஏது ?
நான் ஏது ?
ஒளி விளக்கு ஏது ?
ஆயினும்
பூமிக்கு அப்பால்
அதன் நிழல் இருட்டைத்
தாண்டி
உயிரோ டிருக்கும்
நமது காதல்
உன்னதம் !

***************************
*மாட்டில்டி – (Matilde)
பாப்லோ நெருடாவின் காதலி

தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com ((August 10, 2009)]

Series Navigation