கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு காதலனின் அழைப்பு >> கவிதை -14 பாகம் -3 (முன் பாகத் தொடர்ச்சி)

This entry is part of 44 in the series 20090813_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


Fig. 1
Kahlil Gibran’s Paintings
“Man Climbing over Man

“மனித இனம் என்பது பூர்வீக முடிவின்மையிலிருந்து (எதிர்கால) முடிவின்மை நோக்கி ஓடும் ஓர் ஒளி நதி !”

“பொழுது புலர்வதை ஒருவர் இரவின் பாதையைத் தவிர வேறு வழியில் அடைய முடியாது.”

“நினைவில் வைத்துக் கொள்வது ஒருவிதச் சந்திப்பு போல்வது. மறந்து போவது ஒருவித விடுதலை போன்றது.”

கலில் கிப்ரான் (பைத்தியகாரன்)

+++++++++

<< ஒரு காதலனின் அழைப்பு >>

கவிதை -14 பாகம் -3
(முன் பாகத் தொடர்ச்சி)

பிரதிபலிப்பாய் எனக்குள்ள நீ இன்று எங்கிருக்கிறாய் ?
இரவின் மௌனத்தில் நீ விழித்திருக் கிறாயா ?
தெரிவிக்கும் தூய தென்றல் என் இதயத்தின்
பரிவுத் துடிப்பு ஒவ்வொன் றையும் உனக்கு !

உனது நினைவில் என் முகத்தைத் தடவு கிறாயா ?
எனது வசீகர முகப்பு எனதில்லை இனிமேல்
தனது நிழலைத் துக்கம் கடந்து போன காலத்தில்
இனிய முகத்தின் மேல் இறக்கிய காரணத்தால் !

உன்னழகை எதிரொளித்து உதடுகள் உலர்ந்தன !
என் கண்களைக் கரித்தன எனது பெரு மூச்சுகள் !
இன்ப மூட்டின இதழ்களுக்கு நீ இட்ட முத்தங்கள் !

என் அன்பே ! எங்கே நீ இருக்கிறாய் ?
என் அழுகுரல் கேட்கிறதா கடலைத் தாண்டி ?
என் தேவையை நீ புரிந்து கொள்கிறாயா ?
என் பொறுமையின் உன்னதம் தெரியுதா உனக்கு ?

எந்த ஆன்ம உணர்வும் உள்ளதா சூழ்வெளியில்
இந்த வாலிபன் விடும் மரண மூச்சின் மேல் ?
எந்தன் புகாரை உனக்குச் சொலும் தேவதை களுக்கு
இடையே ரகசியத் தொடர்பு எதுவும் இருக்கிறதா ?

எங்கிருக்கிறாய் என் அழகுத் தாரகையே ?
என்மேல் சாபம் இட்டது வாழ்வின் இருட்டடிப்பு !
என்னை வென்று விட்டது துன்ப மயம் !
புன்னகையை மிதக்க விடு தென்றல் காற்றில்
புத்துயிர் ஊட்டுமது என்னை வாழ வைத்து !
நறுமணத்தை ஊதி விடு தென்றல் காற்றில்
தருமெனக்கு நீண்ட வாழ்வு அதன் சுவாசிப்பு !

எங்கே நீ இருக்கிறாய் என் அன்பே ?
இந்தக் காதல் எத்தகை உன்னதம் பெற்றது !
இந்த வாழ்வில் எத்துணைச் சிறியவன் நான் !

************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (August 10, 2009)]

Series Navigation