கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << காதல் கீதம் >> கவிதை -12 பாகம் -1

This entry is part of 37 in the series 20090625_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாFig. 1
Kahlil Gibran’s Paintings
“Man’s Superior Standing”

“சொர்க்கத்தின் ஆட்சிமுறை உபதேசிக்கப் படலாம் என்பதற்கும், மனிதன் அந்த அழகுணர்வை, நன்னெறியை, மெய்ப்பாட்டைத் தன் உள்ளத்திலே உணரலாம் என்பதற்கும் அவர் மரித்தார். உலக வரலாற்றிலே ஆற்றல் மிக்க மகத்துவம் பெற்றவர் ஏசுக் கிறிஸ்து.”

கலில் கிப்ரான்.

“அவர் பலவீனம் உள்ளவர் இல்லை. வலு மிக்கவராய் இருந்தார்; இப்போதும் அவர் வலுவோடு இருக்கிறார். ஆனால் மாந்தர் நெஞ்சுறுதியின் உண்மைத் தகுதியை அறிய மறுக்கிறார். ஏசு கிறிஸ்து அஞ்சி வாழும் ஒரு பிறவியாக வசிக்க வில்லை. புகார் செய்தோ அல்லது வேதனை யுற்றோ ஒருபோதும் அவர் சாக வில்லை. ஒரு வழிகாட்டித் தலைவனாய் வாழ்ந்தார். ஓர் அறப்போர் தீரராய்ச் (Crusader) சிலுவையில் அடிக்கப்பட்டார். அவரைச் சித்திரவதை செய்தவரும், கொலை செய்தவரும் அஞ்சும்படி அவரது வீர மரணம் இருந்தது. ஏசு நாதர் இறக்கைகள் இழந்த ஒரு பறவையில்லை ! மற்றவரின் வளைந்த இறக்கைகளை முறித்த அவர் ஓர் அவேசப் புயல் அடிப்பு ! ஏசு இந்த உலகுக்கு வந்தார், மனித இதயத்தை ஓர் ஆலயமாக்க, மாந்தர் ஆத்மாவை ஒர் சன்னிதியாக்க, மேலும் மனதை ஓர் அறிநெறிக் குருவாக்க !

கலில் கிப்ரான்.

<< காதல் கீதம் >>

கவிதை -12 பாகம் -1

காதலிக்கு விழிகள் நான் !
ஆத்மாவுக்கு ஒயினும் நான் !
இதயத்துக்கு ஊட்டமும் நான் !
நானொரு ரோஜா மலர்
காலைப் பொழுதில்
கண் திறக்கும் என் இதயம் !
என்னை முத்தமிட்டுக்
கன்னிப் பெண்
தழுவிக் கொள்வாள்
தன் மார்போடு !

அரண் இல்லம் நான் மெய்யான
அதிர்ஷ்டத் துக்கு !
இன்பத்திற்கு ஆரம்ப கர்த்தா !
சாந்தத் துக்கும்
சமாதானத் துக்கும் மூல கர்த்தா !
அழகின் இதழ்களில் மலரும்
மென் முறுவல் நான் !
இளம் பருவம்
எனை ஆட்கொளும் போது
வினை மறந்து
அதன் முழு வாழ்வு
உறுதிப்படும்
இனிய மெய்க் கனவாய் !

கவிஞனின் மனப் பூரிப்பு நான்,
கலைத்துவனின்
காவிய வெளிப்பாடு நான் !
இசைத்துவனின்
இதய உட்கிளர்ச்சி நான் !

குழைவோடு தாய் ஒருத்தி
கொஞ்சிடும்
குழந்தை மனதில்
குடியுள்ள புனிதக்
கோயிற் சன்னிதியே நான் !
இதயக் குமுறலுக்கு
அபயப் பட்டதாய்த் தெரிந்தேன் !
தேவைப்படும் ஒன்றைப்
புறக்கணித்தேன் !
பூரணமாய் நிரம்பினாலும் மேலும்
தேடிப் போகுது
ஓடி என் இதயம்
இச்சை மிகுந்து !
சூனிய மான வாய்ப் பேச்சைப்
புறக்கணிக்கும்
என் ஆசை மனம் !

ஆதாமுக்கு ஈவ் நங்கை மூலம்
அறிமுக மானேன் !
புலங் கடத்தப் பட்ட
அவனுக்கு
நிலமே சொந்த மானது !
என்னை நானே
மேலும் அறிமுகம் செய்தேன்
சால மனுக்கு !
நானருகில் இருக்கையில்
ஞானம் பெற்றான்
ஆன்ம சாலமனும் !

(தொடரும்)

************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (June 22, 2009)]

Series Navigation