கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << காதலில் ஏகாந்தம் >> கவிதை -10
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
Kahlil Gibran’s Paintings
“The Plunge Together”
“உன் தோல்விகளை எடைபோட்டு உனக்கு நியாயம் அளிப்பது, முரணான போக்குகளுக்குக் காரணம் பருவக் காலங்கள் என்று குற்றம் சாட்டுவதை ஒத்தது.”
கலில் கிப்ரான்.
“கடவுளின் அழகுமயக் களத்திலே, வாழ்வு நதிக்கரை ஓரத்திலே மனிதன் ஆக்கிய விதிக் கூண்டின் சிறைக்குள் நான் அடைக்கப் பட்டேன்.”
கலில் கிப்ரான்.
“கடவுளைப் பற்றி நீ அறிய விழைந்தால் புதிர்களை விடுவிக்கும் ஓர் தீர்வாளியாய் இருக்காதே. உன்னைச் சுற்றிலும் உற்று நோக்கு. கடவுள் குழந்தைகளோடு விளையாடுவதை நீ காண முடியும்.”
கலில் கிப்ரான்.
<< காதலில் ஏகாந்தம் >>
என்னருமைக் காதலி !
உன்னைப் பின்பற்றிச் செல்கிறேன்
என்ன தேடுகிறாய்
என்னிடத்தில் ?
கனல் பற்றிய உன் பாதையில்
இணையாக நடந்துள்ளேன்
உன்னோடு !
கண்களைத் திறந்த போது
காரிருள் தவிர வேறெதையும்
காண வில்லை !
தடுமாறின
என் வாய் உதடுகள் !
மற்றவர் இடர்ப்படும் சொற்களை
மட்டும் சொல்ல நீ
விட்டு வைத்தாய் !
என் கண்மணி !
உன் இனிய இருக்கைக்கு
தாகமுற
என் இதயத்தைத்
தவிக்க வைத்தாய் !
ஏனெனில்
நான் பலவீனன் !
நீயோ பலசாலி !
ஆயினும் ஏன் நீ
என்னோடு
போராடி வருகிறாய் ?
அப்பாவி மனிதன் நான் !
நேர்மை யான மாது நீ !
ஆயினும்
நீ ஏன் என் மீது
ஆதிக்கம் செலுத்து கிறாய் ?
உயிரோடு நான் வாழ
உதவியாய் இருப்பவள் நீ !
ஆயினும்
நீ ஏன் என்னைக்
காயப் படுத்துகிறாய் ?
எனக்கு உறுதி அளிப்பவள் நீ
ஆயினும் என்னை ஏன்
பலவீனப் படுத்துகிறாய் ?
வழிகாட்டி நீ எனக்கு !
ஆயினும்
ஏனிந்த இருண்ட காட்டில்
என்னை நீ
புறக்கணித்துப் போனாய் ?
உனது கருணைப் பாதத்தின்
அருகில் உள்ளேன் !
உனது பாதை விட்டு
வேறு
வீதியில் நடந்திலேன் !
உன் மன உறுதியும்
அதற்கு
என் கீழ்ப் படிதலும்
உன் இறக்கை களால்
திறந்த தளத்தில்
வண்ணம் பூசி
உவப்பூட்டும்
என் ஆத்மா வுக்கு !
ஆறுகள் விரைந் தோடும்
காதலி யான
கடலை நோக்கி !
பூக்கள் புன்னகை புரியும்
காதலன்
ஆதவனை நோக்கி !
முகிலினம் கீழிறங்கி வரும்
முறைப் பெண்
மலைப் பள்ளம் நோக்கி !
நதிகள் கேள்விப் படா
என்னை !
பூக்கள் அறியா
என்னை !
முகிலினங்கள் தெரியா
என்னை !
ஏகாந்தி ஆகினேன்
என் காதல் வாழ்விலே !
தன் பிதாவின் காவல்
சேனையாள் என்ப தையோ
மாளிகையின்
கூலியாள் என்பதையோ
ஒப்புக் கொள்ளாது
நானிங்கு இருப்பதையும்
தானே அறியாமல்
போனவள்
என்னருமைக் காதலி !
(தொடரும்)
************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (May 25, 2009)]
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << காதலில் ஏகாந்தம் >> கவிதை -10
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – ஐந்தாவது அத்தியாயம்
- மலைகளின் பறத்தல்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -38 << ஆயிரம் விழிகள் எனக்கு >>
- வேத வனம் விருட்சம் 36
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 3
- ஸெங் ஹெ-யின் பயணங்கள்
- மரமணமில்லாத மனிதர் : பாரதியின் கடிதங்கள்-(தொகுப்பு: ரா.அ.பத்மநாபன்)
- கதைசொல்லி சாதத் ஹசன் மண்டோவின் மறுபக்கம்
- விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தேழு
- ஞாபக வெளி
- பட்டறிவு
- திமிர் பிடிச்சவ
- என்றாலும்…
- விருட்ச துரோகம்
- பேராசிரியர் நாகூர் ரூமிக்கு பதில்கள்
- சுவர்க்கம்
- நாகூர் ரூமியின் இலக்கிய அறிவு
- பேராசிரியர் ஏ.எஸ். முகம்மது ர·பி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
- மகாகவியின் ஆறுகாவியங்கள் வெளியீடு
- எழுத்தாளர் “நிலக்கிளி” அ.பாலமனோகரனின் “BLEEDING HEARTS” நூல்
- வயதாகியும் பொடியன்கள்
- மலையாள இலக்கியத்தின் மாபெரும் ஆளுமை: “வைக்கம் முகம்மது பஷீர் -காலம் முழுதும் கலை”
- சங்கச் சுரங்கம் – 16: நெடுநல்வாடை
- விமர்சனக் கடிதம் – 1 ( திரு.பாரதிமணியின் ‘பல நேரங்களில் பலமனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன்வைத்து)
- நிழலாடும் கூத்துகள் : களந்தை பீர்முகம்மது எழுதிய ‘பிறைக்கூத்து’ நூலுக்கு கவிஞர் யுகபாரதியின் முன்னீடு
- தமிழ் சேவைக்கு இயல் விருது.
- “மாற்றம்”
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -4
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! அசுரக் காந்த ஆற்றல் படைத்த பூதக் காந்த விண்மீன் புரியும் பாதிப்புகள்
- வைகைச் செல்வியின் ஆவணப்படம் வெளியீட்டுப் படங்கள்