கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் கீதம் >> கவிதை -7
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
Kahlil Gibran’s Paintings
“Harmony at the Peak”
“நீவீர் உமது மூதாதையப் பிதாக்களின் மூலம் ஒரு பூர்வீகக் கனவை, ஒரு கானத்தை, ஒரு தீர்க்க தெரிசனத்தைப் பரம்பரையாகப் பெற்றுள்ளீர் என்று நான் நம்புகிறேன். அதை ஒரு நன்றிக் கொடையாக நீவீர் பெருமையாக அமெரிக்காவின் மடியில் சமர்ப்பிக்கலாம்.”
கலில் கிப்ரான்.
“தோல்வியே ! என் தோல்வியே !
ஒளிவீசும் என்வாள், இரும்புக் கவசம் !
உன் விழிகளில்
என் வாசிப்பு இவை :
முடி சூடப்பட வேண்டு மானால்
அடிமைப் பட வேண்டும் !
புரிந்து கொள்ளப் படுவதற்குத்
தரை மட்டத்துக்கு
இறங்கி வர வேண்டும் !
பற்றிக் கொள்ள எதையும் முழுப்
பக்குவம் பெற வேண்டும் !
பசித்துத் தின்ன
பழம் போல் கனிந்து பூமியில்
விழ வேண்டும்.”
கலில் கிப்ரான்.
<< ஆத்மாவின் கீதம் >>
என் ஆத்மாவின் ஆழத்தில்
வார்த்தை யில்லாக்
கீதம் ஒன்று
என் இதயத்தின் வித்தில்
வாழ்ந்து வருகிறது !
தாளின்
மையிலே கலந்திட
மறுக்கிறது !
கருணைக்குக் கவசமாக
கண்ணாடி உடை போர்த்திக்
காணும்படி
கானம் இயங்கி வந்தாலும்
உதடுகளில் ஏனோ
ஒலிக்க முடிய வில்லை
என்னால் !
எப்படி மூச்சு விடுவது
அப்பாடலை ?
வையத்தின் ஈதரில் கூடக்
ஐக்கியம்
அடையலாம் அது வென
ஐயுறுவேன் !
எவரிடம் நானதைப் பாடிக்
காட்டுவது ?
வெறுப்போர் செவிகளில்
விழுந்து விடாமல்
அக்கானம்
என் ஆத்மாவின்
இல்லத்திலே
குடிபுகுந்து கொண்டது !
ஞானக் கண்களில்
நானதை நோக்கிய போது
நிழலுக்கு நிழலாய்க்
காண்கிறேன் அந்தக் கானத்தை !
விரல் நுனிகள்
தொடும் வேளை உணர்கிறேன்
கானத்தின் அதிர்வுகளை !
ஏரியின் நீர்
ஒளி விண்மீன்களை
பிரதி பலிப்பது போல் எனது
கரங்களின் செய்கைகள்
கானத்தின் இருப்பை
அறிவிக்கும் !
உதிரும் ரோஜாவின் ரகசியத்தை
ஒளிப் பனித்துளிகள்
தெளிவாக்குவது போல் என்
கண்ணீரும் காட்டி விடும்
கானத்தை !
தியானம் இயற்றிய கானம் அது
மௌனத்தில் அச்சானது
முரண்பாடு தவிர்த்தது
மெய்ப்பாடு சூழ்ந்து கொண்டது
மீண்டும் மீண்டும் வருவது
என் கனவுகளில் !
அன்பு மயம் புரிந்து கொள்வது !
ஒளிந்துள்ளது விழிப்போடு !
ஆத்மா பாடியது !
காதல் கீதம் அது !
கெயினோ* ஈசாவோ*
அதைப் பாடக் கூடுமோ ?
மல்லிகை மணத்துக்கும் மிஞ்சிய
நறுமணக் கானம் அது !
எந்தக் குரல்
ஆட்கொள்ள முடியும்
அந்தக் கீதத்தை ?
கானம் இதய அரணுக்குள்
கட்டுப் பட்டது
கன்னியின் ரகசியம் போல் !
கயிறுகள் அதை
அதிர்வுகள் செய்யா !
கடலின் சிங்கக் குரலையும்
குயிலின் கானத்தையும்
உடன்பட வைப்பது யார் ?
புயலின் ஓலத்தையும்
மழலையின் மூச்சையும்
ஒப்பு நோக்குவது யார் ?
நெஞ்சுக் குரிய மொழிகளைக்
கூச்சலிடத்
துணிவது யார் ?
எந்த மானிடன்
சொந்தக் குரலில் பாடத்
துணிவான்
இறைவன் கீதத்தை ?
++++++++++
கெயின்* ஈசாவ்* (Cain & Esau)
பைபிள் கதா நாயகர்
(தொடரும்)
************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (May 4, 2009)]
- விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்திநாலு
- “சாமியாடிகளின் கறை படிந்த பிரதேசமும் அலைந்துகொண்டிருக்கும் எண்களும்”
- நீயும் பொம்மை நானும் பொம்மை
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -1
- ‘ நான் அவனில்லை’..
- விலை மகள்
- மணமகள்
- ஒலிகள் ஓய்வதில்லை
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் கீதம் >> கவிதை -7
- சிவம்; மானுடத்தின் மீது காதல் கொண்ட மகத்தான மனிதர்;;;;
- நான் அறிந்த மணி
- நாகூர் ஹனீஃபா பற்றி அப்துல் கையூம் மற்றும் மலர்மன்னனின் கட்டுரைகள்
- இயன்றதின் பொருட்டு…
- கத்தியின்றி இரத்தமின்றி வன்முறை
- சந்திப்பின்வதம்
- பாவேந்தர் இன்றிருந்தால்.
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – இரண்டாம் அத்தியாயம்
- நடிகர் நீலுவுக்கு பஹ்ரைனில் பாராட்டு விழா
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! பூமியும் நிலவும் பூர்வீகத்தில் ஒன்றே என்னும் புதிய நியதி !
- பாரினைக் காக்கும் பசுமை
- வேத வனம் விருட்சம் – 33
- பங்கருக்குள் இருந்து ஒரு மூச்சுக்காற்று
- இன்றைய சிறுவர் நாளை உலகம்
- கவிஞர் வைகைச் செல்வியின் (DVD) ஆவணப் பட வெளியீட்டு விழா
- சங்கச் சுரங்கம் – 13: கொங்கு தேர் வாழ்க்கை
- இரு கவிதைகள்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -35 << கோதுமைப் பதார்த்தம் நீ >>