கவிதை

This entry is part of 33 in the series 20070802_Issue

மட்டுவில் ஞானக்குமாரன்ஒரு அமெரிக்க வீரனுக்கு ….!
ஓ வீரனே
தபாலிலே வந்திருக்கிறதா
உனது குழந்தையின்
முத்தங்கள்.
மெத்தச் சந்தோசத்தோடு
வாங்கிக் கொள் …

ஆனால்
உன் தூப்பாக்கி
எத்தனை குழந்தைகளின்
மழலைச் சத்தங்களை நிறுத்தியிருக்குமோ .. ?

உனது மனைவியின்
வெப்பம் நிறைந்த
ஏக்கப் பெருமூச்சுகளை
எப்படி அறியப் போகிறாய் … ?

நிறைவேறாத
குறிக்கோளுக்காகவே
நீ கொதிக்கும் வெயிலிலே
நிற்க்கிறாய்.

வெள்ளை மாளிகையின்
குளிர் அறையிலே
உனது எசமான்..

இரவல்
எண்ணை வயலுக்காகவே
நீ பாலைவனத்திலே எரிகிறாய் …!

உனது தேசக் கொடி
பறப்பது
அப்பாவிகளின் மண்டை ஓடுகளிலே
என்பது கூட
அறியாமலே
மரண பயத்தோடு
உனது வாழ்கை
கரைகிறது…!


கவிதை மட்டுவில் ஞானக்குமாரன் (யேர்மனி)


Series Navigation