‘வினாடிக் கணக்கு’

This entry is part of 36 in the series 20060811_Issue

செங்காளிகடந்த வினாடி கிடைக்காது திரும்பவும்
இந்த வினாடி இமைக்குமுன் மறைந்திடும்
அடுத்த வினாடியோ அடர்ந்த இருட்டு
என்ன நடக்குமென எவரும் அறியார்
மூச்சு நின்றுநான் மறைந்தும் போகலாம்
இருந்தாலும்,
புள்ளியியல் கணக்கில் போட்டுப் பார்த்தால்
இன்னும் இருப்பேன் இருபது ஆண்டுகள்
ஆனால்
ஆண்டவன் கணக்கிலென் ஆண்டுகள் எத்தனையோ?

(கருத்து: Gibbon, Memoirs)

Series Navigation