விருந்தோம்பின் பாடல்
டீன்கபூர்
நெஞ்சுக்குள் வெடித்தது வெடி குண்டு.
காலைப் புகைமூட்டம் புரைத்தது.
அதிகாரிகளுக்கிடையில் நான்….
மேசையில் விழுந்து சுருண்டது உயிர்.
உயிருக்குப் பதவி உயர்வு கொடுத்தேன்.
பதவி நிலை அறிந்து
பசுவின் வாலைப்பிடித்து ஓடியது நண்டு.
மழலைகளுக்கு முதல் விழா.
மேடையில் அதிகாரி விலாசினார்.
சேகரித்த மொழியின் வடிவங்களுக்கு
குப்பையில் குண்டுமணி பொறுக்கினார்.
நான் அதிகாரி அமர்த்திய சாரதி.
ஆயினும் அதிகாரிகளுக்கிடையில்…..
வடை ஒன்று வாய்க்குள் உருண்டது
நிலமாக அதிர்ந்தது.
மென்று மென்று விழுங்கிட முயற்சித்து
துறைமுக அலையானேன்.
முதல்வர் உரித்து ஊட்டிய வாழைக்கனியொன்று
அதிகாரியின் கிணற்றில் கயிறு அறுந்து
விழுந்த வாளியாய்,
நான் அருகில்……
என் தும்புக் கயிறு தெறிக்கும்; தறுவாயில்.
பத்திக்கை கட்டிட முயற்சித்த நான்,
என் முகம் மரணித்து…. மரணித்து…
எனக்கென்ற கனியொன்று தட்டில இருபக்கம்
முகம் துலாவி சரிந்தது.
முதல்வரின் கைக்கு எட்டாத செய்தி எது?
எனக்கு எது உயர்வான தரமாக வேண்டும்?
மற்றொரு அதிகாரி என்னை
அவர் கண்களால் தூக்கி இருத்தினார்.
பாடம் நன்றாக விளங்கியது.
அவர் வீட்டில் படித்துக்கொண்டிருப்பார்.
மக்களுக்கும் படித்துக் கொடுப்பார்.
எனக்குள்
அவரைப்படித்தேன்
அவரை உரைத்தேன்
அவரைப் பாடினேன்.
விருந்தோம்பல் மயிரளவும் இல்லாத பாடல்
எனக்குள் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
டீன்கபூர் – இலங்கை
deengaffoor7@yahoo.com
- கீதாஞ்சலி (71) உன்னோடு என் கலப்பு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- புதுவை ஞானத்தின் நாட்குறிப்பில் இருந்து – 1 – யோகத்துக்கு அப்பால்………..
- தேர்தலும், அதற்கு அப்பாலும்-1
- தலித்தலைவர்களின் தலித் துரோகங்கள்!
- புலம் பெயர் வாழ்வு 8 – எனது தொலைக்காட்சி அனுபவங்களும் இன்னும் உணர்வுகளும்
- எடின்பரோ குறிப்புகள் – 14
- த னி ம ர ம் நாளை தோப்பாகும் – தொடர்கதை -1
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-19)
- குறுநாவல்:சேர்ந்து வாழலாம், வா! – 1
- தொன்மையில் இல்லை, தொடர்ச்சியில்
- கற்பதை விட்டொழி
- தோணி
- கால மாற்றம்
- இயற்கையின் மர்ம முடிச்சு
- அணுயுகப் பிரளய அரங்கேற்றம்
- கவிதைகள்
- பெரியபுராணம் — 87 — திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- பிரமோத் மகாஜனின் மறைவு
- உண்மையைத் தேடியலைந்தபோது
- தேர்தலும், அதற்கு அப்பாலும்-2
- ‘இருதய சூத்திரம்’
- விருந்தோம்பின் பாடல்
- கண்டதும் காதல்
- எழுத்தாளர் சோமகாந்தனின் இழப்புத் தமிழ்கூறும் உலகிற்குப் பேரிழப்பு!
- யாத்ரா பிறந்த கதை
- கடித இலக்கியம் – 3
- நாயின் வயிற்றில் மணிக்கயிறு
- சமாதி கட்டிய செர்நோபில் அணு உலையில் 20 ஆண்டுகள் கடந்தும் கதிரியக்கம் -2
- செயற்கை கருப்பை – ஒரு வரம் தாய்மார்களுக்கு
- காபா ( Gamma aminobutyric acid ) : ஸென்னும் தாவோவும் இணையும் புள்ளி ?-2
- செந்தமிழ் நாடெனும் போதினிலே
- வளர்ந்த குதிரை – 2
- உடன்பிறப்புக்கு என் நன்றி.
- அப்பாவின் அறுவடை
- ஒற்றைப் பனைமரம்
- தொடரும் வெளிச்சம் – பளீரென்று
- கவிஞர் மனுஷ்ய புத்திரனின் மலேசியா- சிங்கப்பூர் பயணம்
- கற்புக் கனல் அன்னை மர்யம்
- கடிதம்
- இவர்கள் அழிக்கப்படவேண்டும்
- மனுஷ்ய புத்திரன் மலேசிய வருகை
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 19