வீடு

This entry is part of 45 in the series 20060120_Issue

தேவமைந்தன்


வாழ்வதற்காகத்தான் வீடு
திடப்பொருள்களுக்கு அல்ல.
குறிப்பாக எஃகு நிலைப் பேழைகளுக்கு.
அதிலும் குறிப்பாக ஓரம் மழுக்காத
கொடூரம் ததும்பும் கட்டில்களுக்கு.
மேலும் குறிப்பாக
தூசி புழுதி காவாத
உயரமான அடுக்குகளுக்கு.
மரச்சாமான்கள் உயிருடன் இருந்து
நமக்கு இதமான தோழமை தந்தாலும்
அவற்றின் மிகையும் கூடத்தான்
வீட்டுக்கு அன்னியம்
முழங்கால் மூட்டைப் பெயர்க்கும்
இழுவை மேசைகள்
வீட்டின் நிம்மதிக்கு ?வில்லன் ?கள்.
மழுமழு என்று முகம் பார்க்கலாம்
தரையோ, கனத்த வீட்டார்க்கு
?சீரியலில் ? வரும் வகைமாதிரி வில்லி.
சரி, விடுங்கள்!
தனிமனிதத்துவம்
தன்னலமும் கூடிய அவசங்களுக்கு
எப்படிக் கவிதையானது
இடம் தரலாகாதோ
அப்படித்தான்
மேற்படிப் பொருள்களுக்காக அல்ல
வீடு-
மனிதர் வாழத்தான்.
****
pasu2tamil@yahoo.com

Series Navigation