தஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் (ஆங்கிலம் : கரோலின்ரைட்)

This entry is part of 49 in the series 20050225_Issue

தமிழில்: சிபிச்செல்வன்


வங்கமொழியில்: தஸ்லிமா நஸ்ரீன்

பிளவுற்றல்
அவர் உன் தந்தை, உண்மையில் அவர் உனக்கு ஒன்றுமேயில்லை.
அவன் உன் சகோதரன், உண்மையில் அவன் உனக்கு ஒன்றுமேயில்லை.
அவள் உன் சகோதரி, உண்மையில் அவள் உனக்கு ஒன்றுமேயில்லை.
நீ மட்டுமே தனியானவள்.
உனக்கு நண்பர்கள் என்று சொல்பவர்கள்கூட உனக்கு ஒன்றுமேயில்லை
நீ மட்டுமே தனியானவள்.
நீ அழும்போது, உன் விரல்கள்
கண்ணீரைத் துடைக்கும், அந்த விரல்கள் உன்னுடையவை.
நீ நடந்தால், உன் கால்கள்
நி பேசினால், உன் நாக்கு
நீ சிரித்தால், உன் மகிழ்வான கண்களில் உன்னுடைய நண்பர்கள்
உன்னைத்தவிர உனக்கு வேறு யாருமில்லை,
விலங்குகள் இல்லை அல்லது தாவரங்கள்கூட இல்லை.
ஆனால் நீ மட்டும் உனக்கென்று அடிக்கடி கூறுகிறாய்
அது உண்மைதானா ?

எளிய பேச்சு ( Simple Talk )
சுற்றி அலைந்து கொண்டிருக்கும் குரோமாசோமின் பெயர் ஙீ
வேகமாகச் சுற்றும் இன்னொரு குரோமாசோமின் பெயர் ஙீ
சீ குரோமாசோமுவைவிடை வேகமாகச் சுற்றக்கூடியது அது.
அடிப்படையில் எந்த வித்தியாசமுமில்லை ஙீக்கும் சீக்குமிடையில் கிக்கும் ஙிக்குமிடையில் என்ன
வித்தியாசமிருக்குமோ, அல்லது ஸிக்கும் ஷிக்குமிடையில் கி அல்லது ஙி ஒன்றைவிட ஒன்று ளிவின் எடை, அளவு
அல்லது றியின் எடை, அளவில் ஒன்றைவிட ஒன்று குறைந்ததல்ல.
ஙீக்கும் சீக்குமிடையில் ஒன்றைவிட ஒன்று அளவில் குறைந்ததல்ல.
ஙீஙீலிருந்து ஒருவன் பிறந்தான், ஙீசீலிருந்து ஒருவன் பிறந்தான், ஒன்றிரண்டு உடற்கூறு வித்தியாசங்கள் தவிர வேறொன்றும் இல்லை. அவர்கள் சிரிப்பார்கள், அழுவார்கள், சாப்பிடுவார்கள், உறங்குவார்கள் சிறிது சிறிதாக அவர்கள் வளர்கிறார்கள்.
மனிதர்களின் நற்குணங்களோடும், குற்றங்களோடும் குறிப்பிடத்தக்க மிகக் குறைவான வித்தியாசங்கள்தான் இவர்களுக்கிடையே.
அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டதற்கு ஒரு காரணமுமில்லை,
ஒரு பிரிவினர் பளபளக்கும் நாற்காலியைப் பிடித்துவிட்டார்கள்.
கொஞ்சம் கடுமையானதாகவுடைய படுக்கை விரிப்பு, எண்பது சதவீத சொத்துக்களின் அதிபதி.
இன்னொரு தட்டில் கிடக்கிறது மீனின் தலை, இறைச்சியின் எலும்புகள் வீட்டுத் தலைவனுக்காக
மணம் வீசும் எண்ணெய் கட்டில்கள் மற்றும் மருதாணி சாந்து
ஙீக்கும் ஙீக்கும் இடையில் இருபதுக்குமிடையேயான உயர்வு தாழ்வு
இன்னும் சீ அமர்ந்திருக்கிறது, ஙீன் தோள்மீது; சீ மகிழ்வோடு கால்களை ஆட்டுகிறது,
விசிலடித்துக் கைகளை ஆட்டுகிறது.
ஙீன் கழுத்துப் பின்புறத்தில் ஒரு கட்டி, ஙீன் முழங்காலில் வலி, இடுப்பிலே சுளுக்கு
நாம் அனைவருமே இந்த ஏற்றத்தாழ்வுகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
ஆனால் நாம் யாரும் இது குறித்து ஒரு வார்த்தையும் பேசுவதில்லை.
எங்கள் நாக்குகள் வெட்டப்பட்டுள்ளன. எங்கள் உதடுகள் தைக்கப்பட்டுள்ளன.
எங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளன, எங்கள் கால்களில் விலங்கு போடப்பட்டுள்ளன.
நாங்கள் யாராவது எப்போதாவது ஒரு வார்த்தை கூறியிருக்கிறோமா ?
—-

Series Navigation