கிழித்து வந்த காலமே!

This entry is part of 57 in the series 20050106_Issue

சிவஸ்ரீ


நாள்காட்டிகளைக் கிழித்துப் போட்டுத்
தீர்ந்ததும் திடுமென
வருவாய் வழக்கமாய்…

நரம்புகளை கிழித்துப் போட்டு
நாடுகளைக் குலுக்கிப் போட்டு
நாட்டெல்லைகளை மாற்றிப் போட்டு
நெஞ்சங்களை உலுக்கிப் போட்டுக்

கடல்களை ஏவிவிட்டு
உடல்களைக் காவிக் கொண்டு

ஊடகங்களை ஆக்ரமிக்கும் திகில்
நாடகங்களை நடத்தி விட்டு

நிலமும் நீரும் அதிர அதிர
கொஞ்சமும் கூசாமல்
நெஞ்சு நிமிர்த்தி வர

எந்தத் தீவிரவாதியிடம் கற்றாய்…

பிய்ந்த ஆண்டை
புடைத்துச் சலித்து விட்டு
புதுசாய் ஒரு ஆண்டை -கைப்
பிடித்து நடத்தி வரும்
காலமே!

வெவ்வேறு ரூபமெடுத்து வந்து
மூழ்கடிக்க முயலும்
ஒவ்வொரு கடலிலும்

கலங்களைச் செலுத்திக் கொண்டு
நாங்களும்
காலங்களைச் செலுத்திக் கொண்டு
நீங்களும்
யுக யுகங்களாய்…!

Series Navigation