வலை

This entry is part of 50 in the series 20040902_Issue

நெப்போலியன்


சிலந்திக்கு வீடு
மீன்களுக்குச் சிறை.

வேடனின் முதல்
வேட்டையின் பரமபதம்.

பிடிப்பதால் பொறி
தடுப்பதால் மறி.

வலையினைத்
தொழிலாய் வீசுபவன்
உழைப்பாளி.

வலைகளைத்
துரோகமாய் விரிப்பவன்
கொலையாளி.

வலைதனைப் பின்னுபவர்களும்
வலைக்குத் தப்புவதில்லை…
வலைகளில் சிக்கியவர்களும்
வலை பின்னத் தவறுவதில்லை…
இது வலைநிலை விதி !

காதல் வாலிப வலை.
திருமணம் வாழ்நாள் வலை.
முதுமை காலத்தின் வலை.
மரணம் விதியின் வலை.

நமக்கென
விரிக்கப்பட்டிருக்கும்
வலையினை
நோக்கியே
நம்
வாழ்க்கைப் பயணம்.
—- நெப்போலியன்
சிங்கப்பூர்
—-
kavingarnepolian@yahoo.com.sg

Series Navigation