விழிப்பு

This entry is part of 50 in the series 20040715_Issue

வை கலைச்செல்வி


உயரப்பறக்க ஆசை
ஊர்க்குருவி அல்லநான் !

உறுதியான சிறகிருந்தும்
உதிரத்தில் திறனிருந்தும்

உண்மையில் பருந்தென்று
உணராமற் போனதனால்

எடுத்துரைக்க எனக்கென்று
எவருமில்லாக் காரணத்தால்

என்பிறப்பின் உண்மைகூட
எட்டாதவொரு ரகசியமே !

எந்தத்தேவன் உரைப்பாரோ ?
எப்போதுஅவர் வருவாரோ !

விண்ணில் சூரியன்
உடைந் திருந்தால்
விழியின் தவறென்று
ஒதுக்கி விடலாம்

என்னை நானே
உணரா திருந்தால் ?
உலகம் என்னைத்
தவிர்த்து விடலாம்

விழிப்பு எனக்கு
தொடுவானமோ
தொடும்தூரமோ
தெரியாது நிச்சயமாய்

ஆனாலும்கூட

உயரப்பறக்க ஆசை
ஊர்க்குருவி அல்லநான் !

**** வை கலைச்செல்வி சிங்கப்பூர் ****

Series Navigation