இழப்பு

This entry is part [part not set] of 45 in the series 20081009_Issue

குரு அரவிந்தன்

சிகப்பு மஞ்சள் விளக்குகள் மின்னிக்கொண்டிருக்க, இராணுவ நோயாளர் காவுவண்டி ஒன்று அலறி அடித்துக் கொண்டு மருத்துவமனை வாசலில் வந்து நின்றது.

என்னவோ ஏதோவென்று மருத்துவமனை ஊழியர்கள் எட்டிப் பார்த்தனர். காவுவண்டிக்கு பாதுகாப்பாய் வந்த இன்னுமொரு வண்டியில் இருந்து குதித்து இறங்கிய இராணுவத்தினர் ஆயுதங்களோடு தடதட என்று உள்ளே நுழைந்தனர். வெளிநோயாளர் பயந்துபோய் ஒதுங்கி நிற்க, வரவேற்பு மேசையில் இருந்த பெண் பதட்டத்தில் தன்னை அறியாமலே சட்டென்று எழுந்து நின்றாள்.

‘டாக்டர் எங்கே..?’ அதிகாரக்குரலில் மிரட்டினான் துப்பாக்கியோடு உள்ளே நுழைந்த இராணுவ சிப்பாய்.

பயத்தில் வார்த்தைகள் வெளிவர மறுக்கவே, அவள் மருத்துவரின் அறையை நோக்கிக் கையை நீட்டினாள். எந்தவித தயக்கமும் இல்லாமல் அவன் கதவை உதைந்து தள்ளித் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.

‘டாக்டர் ரொம்ப அவசரம், உடனே வாங்க, எங்க காப்டனுக்கு உடனே சத்திர சிகிச்;சை செய்யணும்.’ என்றான்.

‘என்னாச்சு..?’ வைத்திய கலாநிதி சிவகுமாரன் பதட்டப்பட்டார்.

‘கிளைமோர் குண்டு வெடிச்சதாலே எங்க காப்டன் ஆபத்தான நிலையில இருக்கிறார். உடனே வாங்க..!’ அவசரப்படுத்தினான் சிப்பாய்.

கடமை அழைத்த வேகத்தைவிட, துப்பாக்கி முனையின் அழைப்பு அவரை உடனே எழுந்திருக்க வைத்தது. இப்படியான நேரங்களில் பாதிக்கப் பட்டவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை அவர் நன்கு புரிந்து வைத்திருந்தார். எனவே அதிகம் அலட்டிக் கொள்ளாது, சத்திர சிகிச்சை அறைக்குள் சென்றபோது, அவரது உதவியாளர்கள் இராணுவ அதிகாரிக்கு செலைன் கொடுத்து, அவசரமாக செய்யவேண்டிய உதவியை செய்து கொண்டிருந்தார்கள்.

மரணத்தின் பிடியில் அகப்பட்டுத் தவிப்பவன்போல, வேதனையில் முனகிக் கொண்டிருந்தான் அந்தநோயாளி. மரணபயம் குறித்த அவனது வேதனையில் அவனது முகம்; சகிக்கமுடியாதபடி அப்படியே இறுகிப் போய்;க்கிடந்தது. நிறைய இடங்களில் இரத்தம் வழிந்து இராணுவ சீருடையில் ஆங்காங்கே கறை படிந்திருந்ததிலிருந்து அந்த முனகலின் தேவை கருதிய வெளிப்பாடு என்னவாய் இருக்கும் என்பது அவருக்குப் புரிந்து போயிற்று. அவரவர் சுயமாக அனுபவிக்கும் போதுதான் இப்படியான வலியும் வேதனையும் எப்படிப்பட்டது என்பது அவர்களுக்குப் புரியும் என்பதைத் தனது தொழில் ரீதியான அனுபவத்திலிருந்து அவர் நன்கு தெரிந்து வைத்திருந்தார். உதவியாளர்களிடம் அவனுடைய சீருடையை அகற்றி சத்திர சிகிச்சைக்குரிய உடையை அணிவிக்கச் சென்னார். சீருடையில் நடமாடும் வெறிபிடித்த இந்த வக்கிரங்கள் எல்லாம், அந்த சீருடை இல்லாவிட்டால் வெறும் பூஜ்யங்கள்தான் என்பதில் அவருக்குச் சிறிதளவும் சந்தேகமே இல்லை! ஒன்றா இரண்டா, துப்பாக்கி ரவைகள் துளைத்ததுபோல பட்ட இடமெல்லாம் சின்னச் சின்னக் காயங்கள். அவசரமாக எக்ஸ்றே எடுத்து, நோயாளிக்கு மயக்க மருந்து கொடுத்தார்கள்.

கையுறையை மாட்டும்போதுதான் கவனித்தார், துப்பாக்கியோடு உள்ளே நின்ற சிப்பாயை! அவனை வெளியே போகும்படி சைகையிலே காட்டினார். வெளியே போகாவிட்டால் சத்திர சிகிட்சையைத் தொடங்கமாட்டார் என்பதை அவன் புரிந்து கொண்டிருக்க வேண்டும், வேறு வழியில்லாமல், பரம விரோதிபோல அவரை முறைத்துப் பார்த்து விட்டு அவரைத் தனது மொழியில் நன்றாகத் திட்டிக் கொண்டே வெளியேறினான்.

சின்னஞ் சிறிய ஆணிகள், பிளேட்டுத் துண்டுகள், சைக்கிள் பால்சுகள் என்று அத்தனையும் காப்டனின் உடம்பைப் பதம் பார்த்திருந்தன. சத்திர சிகிச்சை மூலம் ஒவ்வொன்றாக அவற்றை வெளியே எடுக்க முயற்ச்சி செய்து கொண்டிருந்தவரின் மனதை அதிர்ச்சியும், ஆச்சரியமும் முழுமையாக ஆக்கிரமித்திருந்தன. இதை வெடிக்க வைத்தவனின் மனதிலே எவ்வளவு கோபமும், பழிவாங்கும் வெறியும் இந்த ஆக்கிரமிப்பு ராணுவத்தின் மேல் இருந்திருக்க வேண்டும், இந்தத் தருணத்திற்காக எத்தனை நாட்கள் ஊனுறக்கம் இல்லாமல் அவன் தவம் கிடந்திருப்பான் என்று உடலைக் கீறி வெளியே எடுத்த ஒவ்வொரு பொருளையும் பார்த்தபோது, தனக்குள்ளே கணக்குப் போட்டுக் கொண்டார். எங்கேயாவது சைக்கிள் பால்சுகளைக் கண்டால் ஆக்கிரமிப்பு இராணுவம் ஏன் வெருண்டடித்துப் பயந்து ஓடுகிறது என்ற உண்மையும் அவருக்கு இப்போது புலனாகியது. உயிரோடு போராடிக் கொண்டிருக்கும் வேற்று இனத்தவனான அந்த அதிகாரி உயிர் தப்புவானா இல்லையா என்ற இறுதி முடிவைக் காலன், தமிழரான இவரது கையிலே ஒப்படைத்திருந்ததை நினைத்துப் பார்க்க அவருக்கே வியப்பாக இருந்தது.

தமிழ் இனத்தையே கூண்டோடு அழிக்கப் போவதாக சவால் விட்டு விட்டு வந்து, இந்த நாடே தங்கள் இனத்திற்குத்தான் சொந்தம் என்ற ஆணவத்தோடு, ஆயுத பலத்தால் தமிழரின் பாரம்பரிய மண்ணை ஆக்கிரமித்து, அந்த புனிதமண்ணில் நிலை கெண்டிருக்கும்; ஆக்கிரமிப்பு ராணுவத்தின் அதிகாரிதான் இவன் என்பது எல்லோருக்கும் தெரியும். மண்ணாசையாலும், பெண்ணாசையாலும் வெறி பிடித்தலையும் இவனைப் போன்றவர்களைக் காப்பாற்றுவதிலேயோ, அல்லது உயிர் தப்பவைப்பதிலேயோ அவருக்கு எந்தவித ஈடுபாடும் மனதார இருக்கவில்லை.

‘பாரம்பரியமாய் நாங்கள் வாழ்ந்து வந்த எங்கள் தாய்மண்ணை ஆக்கிரமித்து, எங்கள் இனத்தையே அழித்தொழித்து, இந்த மண்ணிலே தங்கள் இனத்தைக் குடியேற்றும்; பரமஎதிரி இவன். இவனைப் போன்ற இனவாதிகள் எல்லாம் விபத்து நடந்த இடத்திலேயே இறந்து போயிருந்தால் எங்களுக்குச் சற்று நிம்மதியாவது இருந்திருக்கும்’ என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டார். இப்போ நோயாளியாக இவரிடம் வந்தபின், தனது கடமையில் இருந்து நழுவ அவருக்குக் கொஞ்சமும் விருப்பமில்லை. தன்னை நம்பி வந்த ஒரு நோயாளி இவன் என்ற கடமை உணர்வோடு, இனமத பேதம் எல்லாவற்றையும் மறந்து விரைவாகச் செயற்பட்டார்.

கடினமான உழைப்பில், நேரம் நீண்டு கொண்டு போனதே தெரியவிலிலை. கடிகாரத்தைப் பார்த்தார். மருத்துவபீடத்தில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் தனது மகனை, வகுப்பு முடிந்ததும் அங்கு சென்று வீட்டிற்கு அழைத்துக் கொண்டு செல்வதாக உறுதியளித்திருந்தார். இப்போதைக்கு இந்த இடத்தை விட்டு நகரவேமுடியாது, எப்படியாவது அவன் சமாளித்துக் கொள்வான் என்ற நம்பிக்கையோடு மீண்டும் நோயாளி மேல் கவனம் செலுத்தினார்.

நேரகாலம் இல்லாமல் இப்போதெல்லாம் சத்திர சிகிட்சை ஒரு சாதாரண நிகழ்வாய்ப் போய்விட்டது. இராணுவம் வலிந்து ஆக்கிரமித்த மண்ணில் தினமும் இப்படி ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. முன்பெல்லாம் வாழ்ந்து, அனுபவித்த முதியோர்தான் தேவை கருதி அடிக்கடி வைத்திய சாலைக்கு வருவார்கள். இப்போ நிலைமை ரொம்பவும் மாறிவிட்டது. வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் பலதரப்பட்ட வைத்தியத்திற்காகவும் வருகிறார்கள். இந்த வைத்திய சாலையில் சத்திர சிகிச்சைக்குப் பொறுப்பாக இருந்த மற்றவைத்தியர் சமீபத்தில் மாற்றலாகிப் போய்விட்டபடியால் இவர் மட்டும்தன் அங்கே மிஞ்சியிருந்தார். எனவே இங்குவரும் எல்லா அவசரசத்திர சிகிச்சையையும் அவரே தனியே கவனிக்க வேண்டியிருந்தது. யுத்தப் பிரதேசத்தில் தொழில் செய்ய யாருமே விருப்பப்படவில்லை. இப்படியான நேரங்களில் ராணுவத்தையும் போராளிகளையும் சமாளிக் வேண்டிய பெரும் பொறுப்பு அவரிடம் இருந்தது. ‘ஏன் சிகிச்சை செய்தாய்’ என்று மிரட்டல்கள் வரும்போதெல்லாம் ‘கடமையைத்தான் செய்தேன்’ என்று துணிந்து சொல்ல வேண்டும். இல்லாவிட்hல் இடமாற்றம் எடுத்துக் கொண்டு எங்கேயாவது கண்காணாத இடத்திற்குப் போகவேண்டும், அல்லது வேலையை இராஜினாமா செய்துவிட்டு வீட்டிலே சிவனே என்று உட்கார்ந்து இருக்க வேண்டும். இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியிலும், மருத்துவக்கல்லூரி இறுதி ஆண்டில் படிக்கும் மகனின் படிப்பு முடியட்டும் என்ற எண்ணத்தோடுதான் பல்லைக் கடித்துக் கொண்டு நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார். தன்னைப் போலவே அவனும் இந்த மண்ணில் படித்து ஒரு புகழ்பெற்ற மருத்துவராக வந்து, மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்ற படித்த சாதாரண பெற்றோருக்கு இருக்கும் ஆசைதான் அவருக்கும் இருந்தது.

சத்திர சிகிட்சை அறையைவிட்டு வெளியே வந்தபோது, தாதி அவரைநோக்கிப் பரபரப்பாக ஓடி வந்தாள். முகத்திலே கவலை தோய்ந்து இறுகிப்போயிருந்தது.

‘என்ன..?’ என்றார்.

‘சத்திர சிகிச்சை முடிஞ்சுதா டாக்டர்..?’

‘ஆமா, நோயாளி தப்பிப்பிழைச்சிட்டான்.’

‘பிழைச்சிட்டானா..? காப்பாற்றிவிட்டீங்களா..?’ இனம்புரியாத வெறுப்பு, அவளின்; பெருமூச்சில் கலந்திருந்ததை அவர் அவதானித்தார். அவளது அந்த வெறுப்பு நியாயமானதுதான், இது அவளின் தனிப்பட்ட வெறுப்பல்ல, ஒட்டு மொத்தமாக அங்கேயுள்ள ஊழியர்களின் வெறுப்பையும் உள்வாங்கித்தான் அவள் பிரதிபலிக்கிறாள் என்பதையும் அவர் அறிவார். நாட்டு நடப்பும் அப்படித்தான் இருந்தது.

ஆத்திரப்பட்டு அறிவிழந்து விடாமல் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு, எங்கள் முன்னோரின் அறிவுரையின்படி சந்தர்ப்பத்திற்கு ஏற்பநடந்து கொள்வதில் எந்தத் தப்புமில்லை என்பது அவரது வாதமாக இருந்தது. திருவள்ளுவர்கூட ‘காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலங் கருதுபவர்’ என்று ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார். எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு, ஓடுமீன் ஓட உறுமீன் வரும் வரையும் காலம் கனியட்டும் என்று விழிப்போடு காத்திருப்பதே சிறந்தது. இதை எங்கள் இனத்தின் பலவீனம் என்று ஆக்கிரமிப்பு இராணுவம் தப்பாக நினைக்கக்கூடாது, அப்படி நினைத்து, இனவொழிப்பு நடவடிக்கையில் மீண்டும் இறங்கினால் அதுவே அவர்களுக்கு அவர்களாகவே தோண்டிய புதைகுழியாய்க் கூடப் போய்விடலாம். எடுத்துக் கொண்ட குறிக்கோளை முக்கிய லட்சியமாய்க் கொண்டு, சாதிக்க வேண்டியது இன்னும் நிறையவேயிருக்கிறது, எனவே தேவை கருதிப் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தை நினைத்துப் பார்த்து விட்டு அவர் சொன்னார்,

‘ஓரு வைத்தியருக்குரிய என்னுடைய கடமையைத்தானே நான் செய்தேன். என்னுடைய கையில் எதுவுமில்லை, நான் ஒரு காரணி அவ்வளவுதான், எல்லாம் அவன் செயலே!’ என்றவரின் குரல் கம்மியது.

‘எது கடமை..?’ அவள் எதையோ சொல்லத் தயங்குவது தெரிந்தது.

தான் செய்த காரியத்தில் அவளுக்குத் தொடுகிலும் சம்மதமிருக்காது என்பது அவருக்குத் தெரியும். அவளும் தொடக்கத்தில் மனிதாபிமானத்தோடு சேவை மனப்பான்மையோடுதான் தாதியாக சேவை செய்தாள். ஆனால் இந்த சீருடை அணிந்தவர்கள் கிருசாந்தி என்ற பாடசாலை மாணவியை கதறக்கதற பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிவிட்டு, அதை மூடி மறைப்பதற்காக அவளைக் கொன்று புதைத்ததைக் கேள்விப்பட்டதில் இருந்து அவளுக்குச் சீருடை அணிந்து கொண்டு திரியும் இவர்கள்மேல் சொல்லமுடியாத வெறுப்பு. அது போன்ற பல சம்பவங்கள் அதன்பின் நடந்தேறிவிட்டன. அந்தக் காழ்ப்புணர்வின் வெளிப்பாடுதான் இது என்பதை அவர் ஊகித்துக் கொண்டார்.

‘என்ன ஒரே பதட்டமாய் இருக்கிறாய்?’ அசதியோடு அவளிடம் கேட்டார்.

‘வந்து.., அவசர சிகிச்சைக்காக காவுவண்டியிலே இரண்டு, மூன்று நோயாளியைக் கொண்டு வந்தாங்க, வாசலிலே காவலுக்கு நின்ற இராணுவ சிப்பாய்கள் உள்ளே அனுமதிக்க மறுத்திட்டாங்க!’

‘அப்படியா..? இப்போ எங்கே அவங்க..?’ கடமை உணர்வோடு கேட்டார்.

‘ரொம்ப நேரம் காவுவண்டி வெளியே காத்திருந்திட்டு, வேறு வழியில்லாமல் எங்கேயாவது வேறு வைத்தியசாலைக்கு கொண்டு போகமுடியுமா என்று முயற்சி செய்யப்போவதாக சொல்லித் திரும்பிப் போயிட்டாங்க!’

‘ரொம்ப ஆபத்தான நிலையில் இருந்தாங்களா?’

‘ஆமா, துப்பாக்கிச் சூட்டுக்காயம், இரத்தசேதமாம்! அவசர சத்திர சிகிச்சை செய்தால் எப்படியும் அவங்க தாப்பிவிடுவாங்க என்று சொன்னாங்க.’

‘எங்கே இருந்து கொண்டுவந்தாங்க? சத்திரசிகிச்சை செய்யக்கூடிய வேறு வைத்தியசாலை ஒன்றும் அருகே இல்லையே!’

‘மருத்துவகல்லூரிக்கு முன்பாகத்தான் கிளைமோர் குண்டு வெடிச்சதாம். அதிலேதான் நீங்க சத்திர சிகிச்சை செய்து பிழைக்கவைத்த இந்த இராணுவ காப்டன் அகப்பட்டிருக்கிறார்.’

‘மருத்துவக் கல்லூரிக்கு முன்பாகவா? அங்கேயா நடந்தது?’ டாக்டரின் குரல் பதட்டத்தில் சட்டென்ற அடைத்துக் கொண்டது.

‘ஆமா, கப்டன் காயமடைந்த ஆத்திரத்தில் கூடவந்த இராணுவத்தினர் மருத்துவக் கல்லூரிக்குள்ளே புகுந்து கல்லூரி மண்டபத்திற்கு தீவைச்சது மட்டுமல்ல, அங்கே நின்ற மாணவர்களையும் நோக்கிச் சாரமாரியாகச் சுட்டிருக்கிறாங்க. அதிலேதான் அந்த மாணவங்க காயப்பட்டாங்களாம்!’

‘மருத்துவக் கல்லூரி மாணவங்களா..?’ வார்த்தைகள் தேங்கி வெளிவர மறுத்தன.

‘ஆமா டாக்டர்..!’

‘எத்தனை பேரைக் கெண்டு வந்தாங்க? அவங்க முகத்தையாவது நீ பார்த்தியா?’ பதட்டத்தோடு எழுந்து நின்றார் சிவகுமாரன்.

‘இல்லையே டாக்டர், உயிருக்குத் துடிச்சிட்டு இருப்பதாக கொண்டு வந்தவங்க சொல்லி மன்றாடினாங்க, ஆனால் அவங்களை உள்ளே கொண்டுவர சிப்பாய்ங்க விடவேயில்லை!’

‘ஏன்..? ஏன் தடுத்தாங்க..?’ கடமையைச் செய்ய முடியாமல்போன ஏமாற்றமும் அதுசார்ந்த இயலாமையும் அவரை வாட்டத் தொடங்கின.

‘காப்டனின் சத்திரசிகிச்சை முடியாமல் யாரையும் உள்ளே விடமாட்டோம் என்று சொல்லித் தடுத்திட்டாங்க. அதுமட்டுமல்ல காப்டனுக்கு ஏதாவது ஆச்சுதென்றால் எங்களையும் சுட்டுப் பொசுக்கி விடுவோம் என்று துப்பாக்கியைக் காட்டி மிரட்டினாங்க.’

‘உண்மையாவா..? எனக்கு இதெல்லாம் தெரியாமல் போச்சே..!’

இங்கே எல்லாமே துப்பாக்கி முனையில் தான் நடக்கிறது என்பதை நினைக்க, குழப்பமும் அது சார்ந்த கவலையும் அவரைச் சூழ்ந்து கொண்டது. அதன் தாக்கத்தால் மனம் உடைந்துபோன சிவகுமாரன், தலையிலே கை வைத்தபடி அருகே இருந்த நாற்காலியில் யோசனையோடு உட்கார்ந்தார்.

இந்த நேரம் பார்த்து மேசையில் இருந்த தொலைபேசி அலறியது. இராணுவ மேலிடத்தின் அழைப்பாக இருக்கலாம், எடுக்காவிட்டால் அது குறித்த பிரச்சனைகள் இன்னும் பூதாகரமாய் வெடித்துவிடும் என்ற நினைப்பில் வேண்டா வெறுப்பாய் எடுத்துக் காதில் வைத்தார்!

என்றுமில்லாதவாறு கத்திக் குழறியழும் மனைவியின் அவலக்குரல் மறுபக்கத்தில் செவி வழி புகுந்து அவரை அப்படியே உறைய வைத்தது!

Series Navigation

kuruaravinthan@hotmail.com

Series Navigation

குரு அரவிந்தன்

குரு அரவிந்தன்

இழப்பு

This entry is part [part not set] of 39 in the series 20080612_Issue

கவிதா நோர்வே

எனக்குத் தெரியும்

எம் மண்ணில்

வசந்தம் ஒருநாள்

மலருமென்று

இழப்புகளை ஒருநாள்

இழப்போம் என்று

அன்று

அழிந்த வீதியெல்லாம்

தோரணங்கள் கட்டப்படும்

என் இடிந்த வீட்டை

மாமா புதுபித்துத் தருவார்

பூஞ்செடிகளில் பூக்கள்

புத்துயிர் பெறும்

என் பழைய சினேகிதர்கள்

மீண்டும்

அறிமுகமாவார்கள்.

இருள் மறையும்

என் அம்மா வருவாள்

என் மாமன், மாமி

வருவார்கள்.

மடித்துக் கட்டிய

அழுக்கு வேட்டியுடன்

என் தாத்தா வருவார்.

என் மச்சான் வருவான்

தேசத்திற்காய் உயிர் நீத்தவர்கள்

என்ற மாவீரர் பட்டியலில்

என் அப்பாவும்

வருவார்.

-கவிதா நோர்வே

Series Navigation

கவிதா நோர்வே

கவிதா நோர்வே

இழப்பு

This entry is part [part not set] of 46 in the series 20040701_Issue

ஸ்ரீமங்கை

எட்டுவயது மகன் கண்கசக்கியபடி சொன்னான்,
‘எதிர்வீட்டு பாட்டி இறந்ததாக
அழுதவர்களில் ஒருவர் கூட
என் பட்டாம்பூச்சியை பல்லி தின்றதற்கு
அழக்காணோம் ‘

நானும் அழுதேன்
எனது எட்டுவயது நான்
இறந்ததை நினைத்து…

(kasturisudhakar@yahoo.com)

Series Navigation

ஸ்ரீ மங்கை

ஸ்ரீ மங்கை

இழப்பு

This entry is part [part not set] of 52 in the series 20040422_Issue

நாவாந்துறை டானியல் அன்ரனி

கருக்கலின் மென் இருட்டு. கனத்த மெளனத்தைக் கிழித்துக் கொண்டு காகக்கூட்டங்கள் கத்தின. தெரு நாய்கள் ஊளையிட்டன. எங்கேயோ பட்டமரப் பொந்திலிருந்து கிளிக்குஞ்சு ஒன்று எதையோ பார்த்துப் பயந்து கீச்சிட்டுக் கத்தியது.

சரசுவுக்கு விழிப்புக் கண்டது. கண்ணுக்குள் என்னவோ உருளுவது போல் கச….முசவென்று எாிந்தது. தேகம் முழுவதும் அடித்துப் போட்ட சோர்வு. கிடுகு வாிச்சுக்களால் பகல் உள்ளே வந்தது.

“அதுக்குள்ள விடிஞ்சு போச்சா….” அவள் அலுத்துக் கொண்டாள். எப்போதும் அவளுக்கு அப்படித்தான், துாக்கத்திலிருந்து எழுந்து கொள்வதே பெரும் கவலைபோல, நேற்று அம்மன் கோயில் கடைசித் திருவிழா. ஸ்பீக்கரும் சினிமாப்பாட்டும் அந்த அயல் முழுவதும் கலகலத்துப் போயிருந்தது. இரவு வழமைபோல் குட்டித் தம்பியின் சங்கிலியன் கூத்து. திருவிழாவின் உச்சம். இரவு முழுவதும் வெற்றிலையைப் போட்டு அரைத்துக் கொண்டே கொட்டக் கொட்ட விழித்திருந்து பார்த்துவிட்டு சற்று நேரத்திற்கு முன்தான் தனது பாிவாரங்களுடன் வந்து படுக்கையில் சாிந்திருந்தாள் சரசு.

குட்டித் தம்பியாின் பாட்டு இப்பொழுதும் காற்றினில் கிணு….கிணுத்தது. முகம் கூட முன்னுக்கு வந்து கண்ணுக்குள் நின்றது. சரசுவுக்கு அப்படி ஒரு பிாியம் அவன் பாட்டில்.

அவள் எதையோ நினைத்தாள். எதற்காகவோ சிாித்தாள்.

“ஊாில் உள்ளவர்களெல்லாம் என்னமோ….என்னமோ…. எல்லாந்தான். வாயிலை வச்சுப் பேசுறாங்க. அது என்ன இழவோ…. அப்படி ஒரு பிரியம் எனக்கு….என்ர புருசனில் வச்சிருந்தமாதிாி.”

பக்கத்திலே குழந்தை முலைக்காம்பைச் சப்பியபடி உறங்கிப்போயிருந்தது. அதன் கடைவாயைத் துடைத்துவிட்டு சட்டையை இழுத்துச் சாிசெய்து கொண்டே எழுந்தாள். குழந்தையின் மூத்திரத்தால் சேலை நனைந்திருந்தது. பிழிந்துவிட்டுக் கொண்டாள். கிழியல் இல்லாத பக்கமாக புரட்டிப் பார்த்து சீராக உடுத்துக் கொண்டாள். “எடி….பொன்னு….எழும்படி….நல்லா நேரம் போட்டுது….”

பொன்னுவை எழுப்பினாள். அவள் என்னென்னவோ முணுமுணுத்தாள். பக்கத்தில் கிடந்த சின்னவள் தலையை நிமிர்த்திப் பார்த்துவிட்டு மறுபக்கம் திரும்பி சாிந்து கொண்டாள். நாகராசா, சின்னராணி மூலைக்கு ஒருத்தராய் முறுகிப் போய்க் கிடந்தனர்.

“எடி, எழும்படியென்றால்…. அங்கால பார் எல்லோரும் அவதிப்பட்டு ஓடுகினம். எழும்பு புள்ள….”

“போண….நான் இண்டைக்குப் போகல…. உம்…. உம்….”

“ஏனடி புள்ள.. திங்கட்கிழமையும் அதுவுமா…. பிழைப்புக் கிடைக்கிற நாளில…. சுறுக்கா எழும்பி வெளிக்கிடு….”

“ஒரே அலுப்பா இருக்குதண. இராவுக்கும் ஒண்டும் தரேல்ல. எனக்குச் சாியாகப் பசிக்குது….”

பொன்னு அழுதுவிடுவாள் போலிருந்தது. சரசுவுக்கு நினைவு இருந்தது. மத்தியானம் பாண் வாங்கிக் கொடுத்தது. அதற்குப் பின் இரவு! இரவு என்ன ? முடிச்சில் கூத்துச் செலவுக்கு என்றே பிடித்து வைத்திருந்த ஒரு ரூபாக்குத்தி. அது கடலை வாங்கிக் கொடுத்ததோடு சாி. கூத்து ரசிப்பில் எல்லாவற்றையும் தான் மறந்து விட்டாள்.

“என்ர குஞ்செல் ல….நீ போனால்தானடி நான் அடுப்புப்பத்த வைப்பன்…. நான் புள்ளைக்கு விசாலாட்சிக் கிழவி வந்தோடன கிழங்கும் சம்பலும் வாங்கி ஒருத்தருக்கும் குடுக்காம ஒழிச்சு வைப்பன்….”

“….உம் இப்பிடித்தான் நேத்துக் காலம் புறமும் சொன்னனி”

“என்ர வைரவராணை வேண்டி வைப்பன்”.

சரசு தலையில் தொட்டு வைத்தாள். பொன்னு மறுபடியும் அம்மாவை நம்பினாள். எழுந்து பாயில் குந்திக்கொண்டாள். சிக்குப் பிடித்த தலையை பற….பற….வென்று சொறிந்தாள். மறுபடியும் கண்களை மூடினாள். மீண்டும் விழித்தாள்.

சரசு குடிசை வாசலுக்கு வந்தாள். சோளகம் பிய்த்து வாங்கியது. முகட்டுக் கிடுகுகள் வாிசைவிட்டு எம்பி….எம்பிக் குதித்தன. அப்படி ஒரு வேகம், இப்படித்தான் ஒரு நாள் சோளகம் அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தபோது கணபதி இவளைத் திட்டிக் கொண்டே வடக்குப் பக்கமாகப் போனான். காற்றில் இரைச்சலுக்குள் அப்படியே அமுங்கிப் போனதில் இவளுக்கு எதுவும் கேட்கவில்லை.

அவன் அதற்குப்பின் இந்தப் பக்கமே வரவில்லை. கணபதி “வகுப்புத் தொழில்”தான் செய்து வந்தவன். அலுப்பாந்திக்கு வரும் வத்தைகளிலிருந்து மூடைகளை இறக்கி ஏதோ நாலு காசு சம்பாதிக்கச் செய்தான். மாட்டுடன் வண்டில் ஒன்றை வாங்கினான். அதற்குப் பின்தான் ஏனோ நிறையக் குடிக்கத் தொடங்கினான்.

இரவில் வருவான். நிறைவெறியில் மூர்க்கத்தனமாக சரசுவை அடிப்பான். அவளும் ஏதாவது கையில் கிடைத்தால் எறிந்து தனது இயலாமை, த்திரம் எல்லாவற்றையும் தீர்த்துக் கொள்வாள். பிள்ளைகள் கூக்குரல் வைக்கும். கணபதியை அறிந்த அயலவர்கள் ஏன் வரப்போகிறார்கள் ? அடுத்த நாளும்….அதற்கு அடுத்த நாளும்….தாக்குதல்கள், தற்காப்புத் தாக்குதல்கள்….கூக்குரல்கள் தொடரும்.“போடா வேசயடமோனே…. விட்டுவிட்டுப் போடா குடிகார துாமமோன்….போடா….” இது சரசுவின் வாய்ப்பாடு.

கணபதி பலமுறை விட்டுவிட்டுப் போனவன்தான். தொடர்ந்து இரு இரவுகள் எப்படியோ எங்கேயோ கழித்து விடுவான். அப்புறமாக சமரசம் நடந்து கொள்ளும். இவ்வளவு அமளிக்குள்ளும் சரசு நசுக்கிடாமல் ஜந்தைப் பெற்றுப் போட்டுவிட்டாள்…

இந்த முறை கணபதி திரும்பவில்லை. ஒருநாள், இரண்டு நாள், ஒருவாரம்…. ஒரு மாதம், ஒரு வருஷம்….அவன் திரும்பவேயில்லை. இது சரசுவிற்கு ச்சாியமாகத்தான் இருந்தது. அவனுடைய “சாீரபலவீனத்தை” அறிந்து வைத்திருந்த அவளுக்கு அவனுடைய வைராக்கியம் ஒருவிதத்தில் அதிர்ச்சியாகக் கூட இருந்தது. அவளுக்கும் அப்படித்தான். ஒருநாள்…. இரண்டு நாள், ஒருவாரம்….ஒரு மாதம்…. ஒரு வருஷம்….அப்புறம் கணபதி என்ற “மனிதனை” மறந்தே போய் விட்டாள். அதற்காக துக்கப்படுவதையும் நிறுத்திக் கொண்டாள்.

சில நாட்களுக்கு முன்தான் குட்டித் தம்பியர் கதைவாக்கில் சொல்லி வைத்தார். கணபதி காங்கேசன் துறைக்கு வரும் கப்பல்களிலிருந்து மூடை இறக்குகிறானாம். அங்கேயே குடியும் குடித்தனமும் மறுபடியும் கிப் போய்விட்டதாம்.

காற்று ஒரு கணம் சுழன்றது. பக்கென்று மண்ணைத் துாவி முகத்தில் அடித்தது. சரசு கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

துாரத்தில் வயல் வெளி தொிந்தது. கூத்துக் கொட்டகையை நின்று சிலர் பிாித்துக் கட்டிக் கொண்டிருந்தனர். குட்டித்தம்பியரும் சிலவேளை அங்குதான் நிற்பார்.

குட்டித்தம்பியர் களையானவர், காசு உள்ளவர், வெற்றிலையும் வாயுமாய் எல்லோருடனும் சிாிக்கச் சிாிக்கப் பேசுவார். ராசகூத்துக்கு குட்டித்தம்பியரை அசைக்கவே முடியாது. பாட்டு அப்படி. வேஷப்பொருத்தம் அப்படி. அவருடைய இளைய பெண்ணுக்கு மூன்று பிள்ளைகள். இப்படி எல்லாம் இருந்து கொண்டும்தான் சரசுவிடம் வந்து போய்க் கொண்டிருந்தார் குட்டித்தம்பியர்.

பக்கத்துக் குடிசைகளிலும் உரத்த பேச்சுக்குரல். கடற்கரைக்குப் போவதற்கு பலர் யத்தமாகிக் கொண்டிருந்தனர்.

பொன்னு வேலி மூலைக்குள் “ஒண்டுக்கு” குந்திக் கொண்டிருந்தாள். சரசு கூரைக்கு மேல் காயப்போடடிருந்த உமலை எடுத்தாள். ஏற்கனவே கிழிந்து போயிருந்த மூலைகள் இன்னும் பொிதாகியிருந்தன. ஓலை எடுத்து கிழிவுகளைப் பொத்திப் போடவேண்டும் என்று நேற்று நினைத்திருந்தவள், திருவிழாச் சந்தடியில் மறந்தே போய்விட்டாள்.

உமலை விாித்துப்பார்த்தாள். செதில்களும் செத்த குஞ்சுமீன்களுமாய் வெடில் பக்கென்று மூஞ்சியில் அடித்தது. வயிற்றைக் குமட்டுவது போல்.

பொன்னு இப்போ பானையைத் துளாவிக் கொண்டிருந்தாள். ஏதோ சொட்டு நீர் கைகளை நனைத்தது. முகத்தில் தடவிக் கொண்டாள். கண் பீளையையும், எச்சில் காய்ந்திருந்த கடைவாயையும் பாவாடையால் துடைத்துக் கொண்டாள். அந்தப் பாவாடை எப்படியெல்லாமோ கிழிந்து போயிருந்தது. மேல் உடம்பில் அம்மாவின் பொிய சட்டை தொள தொளவென்றிருந்ததை இறுக்கி, வயிற்றுடன் முடிந்திருந்தாள்.

சரசு அவளுடைய தலையைக் கையால் நீவிவிட்டாள். அழுக்குத்துண்டு ஒன்றினால் மயிரைச் சேர்த்து சிலும்பாமல் கடடிவிட்டாள்.

“அம்மா எனக்கு….ஒரு சட்ட தைச்சு தாவண…. இதத்தானே நெடுகிலும் போடுறன். கடற்கரைக்கு வாறபொடியன் எல்லாம் எனக்கு நொட்ட சொல்லிகினம்….”

“பொறு புள்ள, சின்னாச்சி அக்காவோட நான் சீட்டு பிடிச்சிருக்கிறன். விழுந்தோடன உனக்கு சீத்தையில ஒருகவுண் தச்சுத்தருவன்….”

பொன்னு உமலைத் துாக்கிக் கொண்டாள். எப்போதாவது இவளோட கூடிப்போற சின்னவியும் எழுந்து வந்துவிட்டான்.

“கவனம் புள்ள….காத்துக்குள்ள….கார் வாறது கூடக்கேக்காது….சின்னவிய கவனமாக கையில புடிச்சுக் கூட்டிக்கொண்டு போ….”

அவர்கள் போய்விட்டார்கள். இவள் பெருமூச்சு விட்டுக்கொண்டே உள்ளே வந்தாள். குழந்தை அழுது கொண்டிருந்தது.

மூலையில் விளக்கு சாிந்து கிடந்தது. அதை எடுத்து நிமிர்த்தி வைத்தாள். தீப்பெட்டியை உரசிக் கொளுத்தினாள். சடக்கென்று ஒளி நிமிர்ந்தது. அத்துடன் பக்கென்று மறுபடியும் அணைந்தது.

இப்போது குழந்தை இன்னும் வீறிட்டது. தேநீராவது வைக்கலாம் என்று நினைத்தவள், புஸ்பராணியைத் தேடினாள், அங்கு ஒருவருமே இல்லை. அந்த விடிகாலையிலேயே…. எங்கேயோ ஓடிவிட்டனர். எங்கே போவார்கள். கடற்கரை குப்பை மேட்டில் எதையாவது பொறுக்கிக் கொண்டிருப்பார்கள்.

அவள் வெளியில் வந்து குரல் கொடுத்தாள்.

“எடி புஸ்பராணி….இங்க வந்து புள்ளையைத் துாக்கி வைச்சிரடி….”

வெகு அண்மையில் ஏதோ பாட்டின் முணுமுணுப்புக் கேட்டது. குட்டித்தம்பியர்தான் வந்து கொண்டிருந்தார்.

சரசு தேநீர் வைப்பதற்காக குசினிக்குள் புகுந்து விட்டாள்.

அவர் வரும் வேளைகளில் அவளுக்கு சந்தோஷந்தான். இருந்தாலும் அடிமனக் கிடக்கையில் ஏதோ துரு….துருவென்று முடக்குவாதம் செய்தது. புாியாத என்னவோ ஒன்று.

“என்ன சரசு தேத்தண்ணி வைக்கிறியா…. எனக்கும் கொஞ்சம் கொண்டா சுடச்சுட.”

குட்டித்தம்பியர் வழமையாக உட்காரும் மரப்பெட்டியில் குந்திக் கொண்டார். தலைக்குமேல் பூவரசுநிழல் விழுந்திருந்தது. வெயில் சற்று எட்டித்தான் நின்று கொண்டிருந்தது. இன்னும் அரைமணி நேரத்திற்காவது அதில் இருக்கலாம். அப்புறம் அந்த இடத்தில் இருக்க இயலாது. உள்ளே போக வேண்டும் அல்லது வெளியே போகவேண்டும்.

சரசு தேநீர் க் கோப்பையையும் சர்க்கரைக் குறுகலையும் கொண்டு வந்து வைத்தாள். குட்டித்தம்பியர் செழுமையான அவள் உடலை ஒரு தடவை கண்களால் ஸ்பாிசித்தார். அவளும் கவனிக்காமல் என்ன….உதட்டைப் பிதுக்கிக் கொண்டு ஒருக்களித்துப் பார்த்தாள்.

கொடுப்பிற்குள் வைத்திருந்த வெற்றிலைச் சப்பலை துா….துாவென்று துப்பிவிட்டு செம்பிலிருந்த நீாினால் நன்றாக கொப்பளித்துக் கொண்டார். இதற்காகவே வந்தவர் போல் தேநீரை ருசித்துக் குடித்தார்.

அவருடைய முகத்தில் இரவு பூசிய பூச்சு இன்னும் அழியவில்லை. மழுங்க விழித்திருந்த முகத்தில் மீசையிருந்த இடத்தில் ஏதோ அழிந்துபோன கறுப்புக் கோட்டின் மெல்லிய தழும்பு. கண்களில் நித்திரையின் கனப்பு. அந்தக் கோலத்தில் அவரைப்பார்க்க சற்று வேடிக்கையாக இருந்தது. இவரா இரவு சங்கிலியனாக வீரத்தோடு பொிய மீசையைத் திருகிக் கொண்டு வந்தவர் ? “என்ன புள்ள, இரவு கூத்துப் பார்த்தியா…. எப்படி இருந்தது…. ?”

“என்ன….ஏதோ….காணாத ளாட்டம். முன்னுக்குத்தானே இருந்தனான்….பார்த்துப் பார்த்து பல்லைக் காட்டிப்போட்டு….”

குட்டித்தம்பியர் விநயமாய் சிாித்தார். அவரது சின்னத் தொந்தி சற்றுக் குலுங்கியது.

“அது கிடக்கட்டும் புள்ள…. என்ர படிப்பு எப்படி…. ?”

“பின்கூத்து நீங்க வந்த பிறகுதான் வலு எழுப்பமாக இருந்தது எண்டு எல்லோரும் பறஞ்சு கொண்டு வந்தினம்….”

குட்டித்தம்பியருக்கு வலு சந்தோஷம். தேநீர் முழுவதையும் ஒரே மூச்சில் உறிஞ்சுவிட்டு கோப்பையை வைத்தார். மடிக்குள் செருகி வைத்துக் கொண்டு வந்த சிறிய “பார்சல்” ஒன்றை அவளிடம் நீட்டிக் கொடுத்தார்.

அவள் பவிசாகச் சிாித்துக் கொண்டே வாங்கி விாித்துப் பார்த்தாள். அது பூ விழுந்த சட்டைத்துண்டு அந்தக் கணத்தில் பொன்னுவைத்தான் நினைத்துக் கொண்டாள் சரசு. இன்னும் அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. அவர் எப்போதாவது இப்படித் தருவது தான். னாலும் அதற்காக ஏங்கி இருந்தவளல்ல….

இருவருமாக என்னவோ எல்லாம் பேசினர். வெளியில் யாரோ வரும் சத்தம் கேட்டது. இருவருமே ஏக காலத்தில் திரும்பிப் பார்த்தனர். பொன்னு நன்றாக நனைந்துபோய் வந்து கொண்டிருந்தாள். அவள் முகத்திலும் கைகால்களிலும் சேறு அப்பியிருந்தது. அவள் அழுதிருக்க வேண்டும். முகம் வேறு வீங்கியிருந்தது. பக்கத்தில் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு வடக்குத் தெருக்கிழவி மோி. அவள் தலையில் மீன் விற்கும் கடகமும், சுளகும். பின்னால் சின்னவி. கேவி….கேவி இன்னும் அழுது கொண்டுவந்தான். சரசு ஒருகணம் அப்படியே திகைத்து நின்றாள். அடுத்த கணம் குரல் எடுத்து எட்டு வீட்டுக்கு கேட்க கத்தினாள்.

“என்ன நடந்தது ? என்ர புள்ளைக்கு என்ன நடந்தது ? சின்னவி அடக்கி வைத்திருந்து வெடித்துச் சிதறியதுபோல் பெரும் குரல் எடுத்து அழுதான்.

“அக்கா புறக்கி வைத்திருந்த மீனை அந்த னக்கோட்டைப் பொடியன் களவெடுத்துப் போட்டான்…. அக்கா அவன அடிச்சா, அவன் அக்காவை கடலுக்க தள்ளிப் போட்டான்….உம்….உம்…”

மோிக்கிழவி அப்போது தான் குட்டித்தம்பியர் முற்றத்தில் இருப்பதைக் கவனித்தாள். முகம் சுறுக்கென்று உள் இழுத்துக் கொண்டது. வெறுப்பு டன் விசுக்கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“இந்தா சரசு புள்ளயக் கூட்டிக்கொண்டு முதலில உள்ள போ….எல்லாத்தையும் நான் சொல்லுறன்.”

சரசுவுக்கு விளங்கி விட்டது. பொன்னுவை மெதுவாக அழைத்துக் கொண்டு உள்ளே போனாள். மோிக் கிழவியும் தொடர்ந்து போனாள். உள்ளே கிழவியின் மெல்லிய குரல் வெகுநேரம் கேட்டது. “இந்தா சரசு நான் சொல்லுறத கவனிச்சிக் கேள். விலைபோகிற குமர் வீட்டுக்கு வந்திருக்கு. இனி எண்டாலும் இந்த அறுதலிமோன அண்டப் பிடிக்காத….”

மோிக் கிழவி வெளியே வந்தாள். இறக்கி வைத்திருந்த கடகங்களைத் தலையில் துாக்கி வைத்துக் கொண்டாள். குட்டித்தம்பியர் இருப்பதையே கவனியாதவளாய் விடு… விடுவென நடந்தாள்.

குட்டித்தம்பியார் எதுவும் புாியாதவராய் முற்றத்து மரப்பெட்டியில் இன்னமும்தான் இருந்தார். வெயில் மரப்பெட்டிக்கு அருகே வந்துவிட்டது. இனி அதில் இருக்க இயலாது. கண்கள் வேறு சுழற்றி அடித்தது. ஒரு கண் நித்திரை கொண்டுதான் தீர்க்க வேண்டும். சரசுவைப்பார்த்துவிட்டுச் செல்லலாம் என்று நினைத்தார். வெகுநேரம் சரசு வெளியில் வரவே இல்லை. சரசு ஏன் வெளியில் வரவில்லை…. ?

“சரசு அப்ப நான் போட்டு வாறன்….”

அவர் எழுந்து கொண்டார். தோளில் கிடந்த துண்டினால் முகத்தை அழுத்தித் துடைத்தார். வீட்டை நோக்கி விளங்காத தீவிரத்துடன் நடக்கத் தொடங்கினார்.

சரசு வெளியில் வந்தாள். குட்டித்தம்பியர் கொண்டு வந்த துணிப்பார்சல் விாித்தபடிதான் முற்றத்தில் கிடந்தது.

“குட்டித்தம்பியரும் கிழவி சொன்னதைக் கேட்டிருப்பாரோ….”

அவள் மறுபடியும் கணபதியை நினைத்துக் கொண்டாள். பொன்னு இனி மீன் பொறுக்க வெளியில் போக மாட்டாள். குட்டித்தம்பியரும் இனி வரமாட்டார். அப்படித்தான் அவள் நினைத்தாள். அவ்வாறே நடக்க வேண்டும் என்றும் விரும்பினாள்.

அவள் எல்லோரையும் இழந்துதான் விட்டாள். னாலும் என்ன ? எதையும் இழந்துவிடாத நெஞ்சுறுதி. அவளுக்கு அப்படி ஒரு மனப் பயிற்சி எப்படியோ ஏற்பட்டுவிட்டது.

daniel.jeeva@rogers.com (மூலமாக அனுப்பப்பட்டது)

Series Navigation

நாவாந்துறை டானியல் அன்ரனி

நாவாந்துறை டானியல் அன்ரனி

இழப்பு

This entry is part [part not set] of 29 in the series 20020722_Issue

துரைசாமி

தூக்கம் இல்லை மயக்கம், நினைவுகள் மயங்கவில்லை, உடல் மயங்குகிறது. கண் இரப்பைகள் பிரியவில்லை, உணர்வுகள் விழித்துக்கொண்டிருக்கின்றன. திறந்திருந்த ஜன்னல் வழியே பாதங்களில் பரவ ஆரம்பித்த வெளிச்சம் மெல்ல மெல்ல கழுத்துவரை ஏறிக்கொண்டிருக்கிறது. உடம்பில் வெயில் உறைக்க ஆரம்பித்தும் தலை நிமிர்தமுடியவில்லை. கை, கால்கள் கட்டளையின்றி தன்னிச்சையாய் – அழுக்கு துணியாய் தரையில் பரவிகிடப்பதை உணரமுடிந்தும் எதுவும் செய்ய தோன்றாமல் மூளை மயங்கிகொண்டிருக்கிறது. சிறகிழந்த பறவையாய் நினைவுகள் பாதாளத்தை நோக்கி வெகுவேகமாய் எங்கோ ….எங்கோ… நினைவுகள் சிதற ஆரம்பிக்கின்றன. சிதறி தெரித்த நினைவுகளில் தேங்கி நிற்பது அவன் -ரவி

ஈரமணலில் தடம்பதித்து சிறுது தூரம் நடந்து பின் திரும்ப, பதிந்த தடங்கள் மீண்டும் ஈரமணலாய்…

எத்தனை நேரம் நடை தெரியவில்லை, இடையில் இரண்டு குப்பம், வரிசையாய் கட்டுமரங்கள், மனிதநடமாட்டம் இன்றி அமைதியாய் ஒதுங்கியிருந்த கரை, மனித நரவல்கள் அற்று சில இடங்களில் சிரித்துக்கொண்டிருந்த கடல், இத்தனையும் தாண்டி அஷ்டலஷ்மி கோயில் வந்தாயிற்று. வெளிச்சத்தில் ஆரம்பித்தது, முகம் மறைக்கும் இருள் கவிழ்ந்து கொண்டிருக்கிறது. பேச்சில்லை, பேசுவதற்கு எதுவும் இல்லாமலும் இல்லை. உள்ளேயிருக்கிறது எல்லாம். கோபம், அதிர்ச்தி, ஆயாசம், வருத்தம், எதையும் வெளிப்படுத்ததெரியாமல் குழம்பி உறைந்து கிடக்கிறது அவன் முகம். என்னிடம் ஆச்சர்யம் மட்டும் தேங்கியிருக்கிறது. இருவரும் ஈரமணலை பார்த்தபடி இணையாகத்தான் நடந்துகொண்டிருக்கிறோம். அவன் உதடுகள் அசையவில்லை, ஆனால் அவனுடைய ஒவ்வொரு செல்லின் அசைவும் – அதிர்வும் எனக்கு கேட்டபடியேதானிருக்கிறது.

எத்தனையோ முறை இப்படி நேர்ந்திருக்கிறது. ஆனால் இதுபோல் எதுவும் நிகழ்ந்ததில்லை. ஒவ்வொருமுறையும் ஒவ்வொன்று, அந்த கணத்திற்கு தகுந்தாற்போல். மனம் எப்படியோ கணங்களும் அப்படி, காலங்கள் உறைந்துபோக கண்ணாடி டம்ளரில் டா குடிந்துகொண்டிருந்த கணங்கள் உட்பட, எத்தனையோ….எவ்வளவோ…பேசி பேசியே கரைந்துகொண்டிருந்த காலங்கள், பேச்சில்லாமல் மவுனமாய் நடந்த நேரங்களில் புரிந்தது, புரிந்துகொண்டதாய் உணர்ந்தது. உணரந்தது உறைந்து, உறைவில் மயங்கி மயக்கமே தூக்கமாய், தூக்கத்திற்கும் மயக்கத்திற்கும் இடைபட்ட கணமே வாழ்க்கையாய், சுழலில் படகாய், அதுவே சுகமாய், அந்த சுகமும் அவனாய்…………..

சரம் அறுந்து உதிர்ந்த மணிகளாய் நினைவுகள் அறுபட அலறுகிறது அலாரம். எங்கே……எங்கே…….சட்…மணி ஐந்து, இத்தனை நேரம் அவன் டெல்லி புறபடுவதற்கான ஆயத்தங்களில் இருக்கலாம். மகுடிக்கு முன் பாம்பாய் சுழற்சியில் சிக்கிக்கொண்டிருந்த எனக்கு விழிப்பு கொடுப்பதாய் வந்தது அவனுடைய சென்னை வருகையை பற்றின செய்தி. அவன் டெல்லி போய் வேறு வேலையை ஏற்றுகொள்வதற்கு முன் சென்னையில் இரண்டு நாட்கள் தங்கிபோகபோவதாக கிடைத்த அந்த செய்தி எனக்கு மிகவும் சந்தோசம் தருவதாக இருந்தது. வாழ்க்கையே மூன்று எட்டு மணிநேரங்களாக சிதறிகிடக்க, கிழமைகள் மறந்து, காலநேரங்களற்று குடைராட்டின குதிரையாய் மாறிக்கொண்டிருக்கையில், அவனின் வருகை….. படுக்கும் நேரம், விழிக்கும் நேரம், எல்லாம்….. எல்லாம்…திட்டமிட்டபடியே நூல்பிடித்து போட்ட கோட்டின் ஊடே இயந்திரமாய் ஓடிக்கொண்டிருக்கையில், திட்டங்கள் அற்று, நேரங்கள் பற்றிய பிரஞ்சை அற்று, என் கையுக்குள் அடங்கிகிடக்கும் காலத்தோடு ஒரு முழு இருபத்திநாலு மணிநேரமேனும் அவனுடன்…நூலறுந்த பட்டமாய் அவன் அருகில்………….

‘ ‘இல்லடா ரொம்ப கஷ்டம். என் நிலமைய புரிஞ்சுகயேன். மெட்ராஸ் முக்கியமாய் வந்ததே கம்பனி பெரிய ஆளுங்க கொஞ்சம் பேர் இங்க இருக்காங்க, அவுங்களை பார்கத்தான். நாளக்கி சாயந்தரம் அவுங்களோட டின்னர்….. ‘ ‘

என் மவுனம் அவனை சங்கடபடுத்தியிருக்க வேண்டும்.

‘ ‘இல்லன ஒன்னு செய்யலாம். ஸகன்ட் ஸோ வேண போகலாம். எந்த தியட்டருனு சொல்லிட்டேனா, அங்க வந்துடுவேன். மூனு பஸ் மாறி உன்னை இங்க பாக்க வரத்துக்குள்ள பாதி நாள் போச்சிடா…. ‘ ‘

‘ ‘சரி என்னைக்கு ஊருக்கு போறேனு சொல்லு நான் ஸ்டேசன் வர்றேன் ‘ ‘

கடைசி வருட கல்லூரி தேர்வுகள் முடிந்து எல்லோரும் எல்லோருடனும் – பிடித்தவர் பிடிக்காதவர் பேதமற்று கலந்து சிதறிக்கொண்டிருந்த பொழுது, நாங்கள் இருவரும் எதிலும் கலந்து கொள்ளாமல், கூவத்தின் குறுக்கே கிடந்த அந்த மரபாலத்தை கடந்துகொண்டிருந்தோம். அவன்தான் தீடாரென்று எங்கள் இருவருக்கும் பொதுவான ஒரு நண்பனுக்கும் அவனுக்கும் இடையில் உள்ள பிரச்சனையை பற்றிய பேச்சை ஆரம்பித்தான். எப்பொழுது என்று உணர்ந்து கொள்ளும் முன்பே, நாங்கள் இருவரும் எதிர் எதிர் கட்சியிலிருந்து வாதித்தபடியே கடற்கரைக்கு வந்துலிட்டிருந்தோம். வாதம், பிரதிவாதம் – கட்சி, எதிர்கட்சி என்ன சொல்ல, அன்று என் நாக்கில் சனி. அவன் என்னை அமர்த்த நினைத்தது நீதிபதியாக நான் அமர்ந்தது எதிர்தரப்பில். அன்றைய கசப்பு ஐந்து வருடங்களுக்கு பின் இன்னும் தொண்டைகுழியில்.

சற்று நேரம் எதுவும் செய்ய தோன்றாமால் அசைந்துக்கொண்டிருக்கும் கடிகாரமுள்ளை பார்த்தபடியே அமர்ந்திருந்தேன். எதையேனும்…..அவனுக்கு கொடுக்கவேண்டும். அதற்கே உடைய பிரத்யோக வாடையுடன் பழைய பெட்டி, கல்லூரி நாட்கள் டைரி, நோட்டுபுத்தகங்கள் , போட்டோ ஆல்பங்கள் …எல்லாம் என்னை சுற்றி விரிந்து கிடக்கின்றன மழலைபேசியபடி. மீண்டும் கிடைக்கமுடியாததாய் எதையேனும் அவனுக்கு…………..

பிளாட்பார டிக்கெட் வாங்கி சென்டரல் உள் நுழைந்தபோது, அவன் போவதற்கான ரயில் இன்னும் பிளாட்பாரத்திற்குள் வந்திருக்கவில்லை. மழை ஓய்ந்தவுடன் திட்டு திட்டாய் தண்ணீர் தேங்கி காட்சியளிக்கும் குழம்பிய தெருவாய் மனித முகங்கள். போனவுடன் மறக்காமல் கடிதம் எழுதசொல்லி வற்புறுத்தும் குரல்கள், இத்தனை சீக்கிரம் புறபட்டுவிட்டாயே என்று ஆதங்கத்துடன் ஒலிக்கும் குரல்கள்…..எல்லாம் குரல்கள், ஒருசில இடத்தில் மனங்கள். வார்த்தைகளற்று கைக்குள் கை பொதித்து கொண்டு உணர்வுகளை பரிமாறியபடி ஆபூர்வமாய் மனிதர்கள். எங்கும் பேச்சு, சப்தம், ஆராவரம், அமர்களம்…… சவகாசமாய் யார் மீதும் மோதிக்கொள்ளாமல் அந்த கடைசி பிளாட்பாரத்துக்குள் நுழைந்தபொழுது மிகவும் ஆயாசமாய் இருந்தது. எப்பொழுதுமே எங்களது பேச்சும், நட்பும் ஆள் அரவமற்ற தார்சாலையிலும், மனித நடமாட்டம் அற்று தவக்கோலத்தில் வீற்றிருக்கும் ரயில் நிலையங்களிலுமே இனிமையாய், சந்தோசமாய், தன்விருப்பம் போல்…..

கூடுவாஞ்சேரி தாண்டி எங்கோ…பெயர் ஞாபகமற்ற அந்த ஸ்டேசன் பெஞ்சில் உட்கார்ந்தபடியே எத்தனையோ…எவ்வளவோ…என்னை பற்றி, அவனை பற்றி, அடிமனதில் படிந்திருக்கும் வண்டலெல்லாம் வெளிவர திரைகளற்று அத்தனையும் எங்கள் எதிரில், அந்த கணத்தில் கடிகாரங்கலெல்லாம் செல்லரித்து போனதாகதான் தோன்றுகிறது.

எல்லாம் எங்களுக்காக, கல்லூரி மரத்தடியில் சிமிண்டு திண்டு, ஹாஸ்டல் வராண்டா, நாயர் கடை பெஞ்ச், மனித நடமாட்டம் ஓய்ந்திருக்கும் நேரத்தில் எங்களுக்காக இரவு நேரத்து மெர்குரி விளக்கு, எல்லாம்…எல்லாம்….எங்களுக்காக காத்திருந்தது போய், எல்லாவற்றிக்கும் நாங்கள், இல்லை நான். இத்தனை சந்தடியில் இப்படிபட்ட கூச்சலில் அவனிடம் எப்படி, எதைபற்றி பேச ? கோபத்தையும், பிடிவாதத்தையும் சடங்காக்கி கொண்டு…சை…நான் இல்லை அவன் இல்லை இருவமில்லை,எல்லாம் ….எல்லாம் ….சடங்காகிக்கொண்டு……சப்தத்துடன் பிளாட்பாரத்துக்குள் நுழைந்தது வண்டி. அவன் இருக்கையை தேடி அது பார்வையில் படும்படியாக சந்தடியற்ற பிளாட்பாரத்தின் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டேன்.

கையில் பத்திரமாய் அவன் வரவிற்காக காத்திருந்த அந்த போட்டோ..குளிர் நிறைந்த மலைபிரதேசத்தில், முகங்கள் அற்று, அடையாளங்காணமுடியாத பாதைகளின் நடுவே, முடிவற்ற பயணத்தை மட்டும் நினைவுறுத்தும் அந்த போட்டோ, அவனுக்கென்று.

வண்டி புறபட இன்னும் இருபது நிமிடங்களே, எழுந்து தூணில் சாய்ந்துகொண்டேன். தொலைவாய் அவனும், இன்னுமொரு நண்பனும், உடன் அறிமுகமில்லாத நான்கைந்து பேர்களும் வேகமாக வந்துகொண்டிருந்தனர். அவன் நன்கு மழித்த முகத்துடன் அழுந்த தலை வாரியிருந்தான். மைகோடாய் அரும்பு மீசை. சிலுப்பிக்கொண்டிருக்கும் முரட்டு முடியும், திட்டு திட்டாய் மழிக்கபடாத ரோமங்களுமாய் பொருந்தாமல் நானும்…என் கால்கள் மெல்ல அவர்களை நோக்கி நகர்ந்தது. அவனுடைய மற்ற நண்பர்களுக்கு என்னை அறிமுகம் செய்துவைத்தான்.என்னுடைய வேலையை பற்றி பேசுவதிலே நான்கைந்து நிமிடங்கள் உதிர்ந்து கொண்டிருந்தன, மழிக்கபட்ட கன்னமும், அரும்பு மீசையுமாய் அவன் முகம் சலனங்களற்று இருந்தது.

‘ ‘அப்புறம்….. என்னடா….. ‘ ‘

என்னுடைய கையை தன்னுடைய முரட்டு கையால் பிடித்துக்கொண்டான். நான் எதுவும் தோன்றாமல் அவனை பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் பார்வை மிக கூர்மையாய் என்னையே ஊடுவிக்கொண்டிருந்தது. உப்பியிருந்த கன்னமும், விரிந்திருந்த மார்பும், நன்கு ஏறியிருந்த புஜங்களும்,

‘ ‘நீ நல்லா குண்டாயிட்டடா…. ‘ ‘

அவனிடமிருந்து சப்தத்துடன் ஒரு சிரிப்பு உதிர்ந்தது.அவன் கையுக்குள் இருந்த என் விரல்களில் இலேசக ஒரு அழுத்தம் பரவிற்று.

‘ ‘நான் மாறிட்டேனு சொல்ற அப்படிதானே…. ‘ ‘

நான் எதுவும் பேசவில்லை.

‘ ‘முன்னெல்லாம் நிறைய நேரமிருந்தது, நிறைய நடந்தோம்..இப்பெல்லாம் டாய்லெட் போறதுன்னா கூட பதினஞ்சி நிமிசமுனுதான் யோசிக்க தோனுது…. ‘ ‘

‘ ‘……………………….. ‘ ‘

‘ ‘பழசெல்லாம் ஞாபகமா மட்டுதான் இருக்குடா…. ‘ ‘

அவன் குரல் கிணற்றுகுள்ளிருந்தது வந்தது. விசில் ஊதியாகிவிட்டது. அவன் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு வண்டியில் ஏறிக்கொண்டான். என் விரல்களுக்கிடையே போட்டோயிருந்த கவர் பிசுபிசுத்துக்கொண்டிருந்தது. என் குழம்பிய முகத்தை மறைத்துக்கொண்டு கவர் அவன் முன் எழும்பிற்று.

‘ ‘என்னடா ? ‘ ‘ ரயில் மெல்ல நகர ஆரம்பித்தது.

‘ ‘ஒண்ணுமில்லடா……போட்டோ ஒண்ணு…… ‘ ‘ என் நடை வேகமாகிக்கொண்டிருந்தது.

‘ ‘பெட்டியெல்லாம் பேக்பண்ணிட்டன்டா…. அடுத்த…. ‘ ‘

வண்டி வேகம் பிடித்துவிட்டது. கல்லாய் நானும், காலியாகிக்கொண்டிருந்த பிளாட்பார காற்றில் என் கை கவரும்… மனித நடமாட்டமற்ற தார்சாலையும், ரயில் நிலையமும், எனக்காக…எனக்காக…. அங்கே என்னுடைய நண்பனும்……..

***

ttpoondi@emirates.net.ae

Series Navigation

துரைசாமி

துரைசாமி

இழப்பு

This entry is part [part not set] of 16 in the series 20010602_Issue

கோகுல கண்ணன்

வலி அவ்வப்போது ப்ரக்ஞையின் முழுமையையும் சிறைப்படுத்தியது. அந்தக்கணத்தில் புற உலகத்திலிருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டாள். பெருகி வரும் ஒவ்வொரு வலியலையும் புற உலகத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அவளை விசிறி அடித்தது. அங்கிருந்து மீண்டு மீண்டு வருவது ஆயாசமான தன்னிச்சை செயலாயிற்று. அவளால் தாங்கமுடியாதபடி இருந்தது வலியின் மூர்க்கம். பெரிய அரக்கனின் அகண்ட கைக்குள் நசுக்கப்படுவதை போலுணர்ந்தாள். வலியின் உக்கிரம் அதிகரிக்க, காலம் நகராமல் நின்றுபோய் விடுவது போல் இருந்தது. அந்த சில கணங்களில் எல்லாம் அழிந்து போய், வெறும் வலி மட்டுமே உடலாய் மாறி நிற்கிறது

இது இன்னும் சில மணி நேரங்கள் தான். மருத்துவர் சொன்னது படி இன்னும் சில நேரம் பொறுத்துக் கொண்டால் போதும். எண்ணங்களை உடலின் அசெளகரியங்களின் பிடியிலிருந்து கழற்றிக் கொள்ளப் பிரயத்தனப் பட வேண்டியிருந்தது. பிடிவாதமாய் நினைப்புகளை வேறு வேறு திசையில் செலுத்தினாள்.

அந்த அறையின் வெளிச்சம் கண்களுக்கு இதமாய் இல்லை . மூலையில் இருந்த மேஜையின் மேல் அம்மா படித்து கொண்டிருந்த புத்தகம் கவிழ்ந்திருந்து. காற்றில் அதன் முனைகள் லேசாக படபடத்துக் கொண்டிருந்தன. இன்னும் சிறிது நேரத்தில் அவனும் வந்துவிடுவான். அலுவலகத்தில் சிலவேலைகளை இன்னொருவரிடம் மாற்றிக் கொடுக்கும் ஏற்பாடுகளை செய்துவிட்டு வருவதாய் சொல்லி விட்டு போனான். அம்மா அவளுடன் இருப்பாள். பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. மருத்துவர் இன்னும் நேரமிருப்பதாய் சொல்லியிருக்கிறார்.

குழந்தை எப்படியிருக்கும் என்று ஊகம் அவளுக்கு பிடித்தமான ஒன்று. எத்தனையோ நேரங்கள் அவள் மனம் அதில் தான் ஈடுபட்டிருக்கும். அலுப்பற்று. இருவரின் சந்தோஷமும் ஒன்றிணைந்த வடிவம் உச்ச அழகின் பிரதிபலிப்பாகத் தான் இருக்கும். அதை இப்போதே தொட வேண்டும் போலிருந்தது. இறுக மூடிக்கொள்ளும் பிஞ்சுவிரல்களின் இடுக்குக்குள்ளே தன் விரலை வைத்துக்கொள்ள வேண்டும். அந்த இளஞ்சூடு தானாய் உள்ளுக்குள் பரவியது. லேசாக உடல் நடுங்கியது.

*

அவள் உடலுக்குள் நடுக்கம் நீர்வளையங்களைப் போல பரவியது. அவனுடையக் காதில் அவள் உச்சரித்தாள்,

இன்றையக்கணங்களின் சந்தோஷம் என் உடலுக்குள் ஊறுகிறது. அது உயிர்க்கொள்ளும் அதிர்வுகள் உனக்கு கேட்கிறதா.

அவன் முனகினான். அவனுடைய கிளர்ச்சி அவளின் வார்த்தைகளால் தீவிரமடைவது போலிருந்தது. அவளைப் பற்றியிருந்த அவன் கைகள் இறுகியது. அவனுடைய வேகம் கூடுவதை அவள் உணர்ந்தாள் அவளுக்குள் அது இன்பமான வலியை உண்டாக்கியது. கண்களின் கிறக்கம் கூட, ப்ரக்ஞை முழுவதும் நரம்புகளின் அதிர்வுகளும் கிளர்ச்சி உருவாக்கும் உத்வேகம் மட்டுமே மிஞ்சியிருந்தது. தொடுதல் எல்லா விளிம்புகளையும் அழித்து பெருகியோடும் நதியாய் பரவி பிரவாகித்தது. அழுத்தத்தில் உடலின் தசை பரப்புகள் அகண்டு விரிந்து எங்கும் சதையிலான உலகத்தில் நழுவி விழுந்திருந்தாள். உச்சக்கட்டத்தில் குவிமையமான ஒரு புள்ளியில் உடலும் ப்ரக்ஞையும் தொலைந்திருந்தன.

அவனுடைய துவளலும், இறுகப் பற்றியிருந்த கரங்களின் இளகலும் திடாரென்று எங்கும் வியாபித்த வியர்வை வாசனையும் அவளை நகர்த்தியது. அவன் முகத்தை பற்றி அவள் வயிற்றின் மேல் வைத்தாள். கேட்கிறதா உனக்கு. நம் உயிர் அணுக்களின் ஆனந்தக் கூச்சலை. கைக்கோர்த்து துள்ளி விளையாடும் ஓசை கேட்கிறதா. புதிதாய் குமிழிடும் உயிரின் சத்தம் கேட்கிறதா.

அவன் ‘ரொமான்டிக் ஃபூல் ‘ சிரித்தான். ‘ மை அடோரபிள் ரொமான்டிக் ஃபூல் ‘ மெதுவாய் வயிற்றில் முத்தமிட்டான். சில்லென குழைந்தது.

*

எங்கு குழந்தைகளைப் பார்த்தாலும் அள்ளி எடுத்துக் கொள்ள வேண்டும் போல பரபரத்தது. பார்க்கும் ஒவ்வொரு குழந்தையும் வயிற்றுக்குள் இருப்பதை அடையாளப்படுத்தியது. தெருக் குழந்தைகளுக்குக் கொடுக்கப் படும் ஒவ்வொரு முத்தமும் தனக்குள் இருக்கும் குழந்தைக்குத் தான் என்பதை உணர்ந்திருந்தாள். பிறந்து வளர்ந்தவைகள் பிறக்கப் போவதை எதோ ஒரு வகையில் தொட்டுக் கொண்டே இருக்கின்றன என்று நினைத்தபடியிருந்தாள். கனவாய் காலம் போகையில் அதிகரிக்கும் உடலின் அசெளகர்யங்கள் அவளுக்கு ஒரு பொருட்டாக இல்லை. அம்மாவிற்கும் பானுவிற்கும் இன்னும் எத்தனையோ குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்களுக்கும் அவளின் உடல் மாற்றங்களை பற்றி இருந்த கரிசனக் கேள்விகளுக்கு அவளுக்கு பதில் சொல்ல பொறுமையற்றுப் போனது.

குழந்தையின் ஞாபகம் எப்பொழுதும் அவளை சூழ்ந்து கொண்டிருந்தது. சில சமயம் கரு தரித்தது உடலா மனதா என்ற கேள்வி எழுந்தது. சின்ன சின்ன விஷயங்கள் கூட வரவிருப்பதை ஞாபகத்தில் நிறுத்திக்கொண்டிருந்தன. அவன் எத்தனையோ பொம்மைகளையும் துணிகளையும் வாங்கி குவித்துவிட்டான். அம்மாவின் எதிர்ப்புகளை மீறி. அம்மாவிற்கு எப்போதும் இவள் உடம்பை பற்றியே கவலை. விதவிதமான ஆலோசனைகளை சொல்லிக் கொண்டேயிருந்தாள். அவள் காதுகளில் அவை வெறும் சப்தமாக மட்டுமே விழுந்துகொண்டிருந்தது. சில சமயம் தன்னை தனியாக விட்டு விட்டு இவர்கள் எல்லோரும் சென்றால் தேவலை என்று தோன்றிற்று. தனியாய் படுக்கையில் மல்லாந்தபடி குழந்தையுடன் தன் உரையாடலை தொடரவே அவள் விரும்பினாள். மனதின் மத்தியில் ஒரு குரல் தொடர்ந்து தன் வயிற்றுக்குள் பேசிக் கொண்டே இருந்தது. அந்த உரையாடலின் திரி அறுந்து போகும்படியான இடையூறுகள் வரும் போது எரிச்சல் பட்டாள்.

அதை அவன் வெறுப்பது அவளுக்குத் தெளிவாகப் புரிந்தது. அவளுடைய உலகத்தில் தன்னுடைய இடம் சுருங்கிபோய்விட்டதையும் அதை அவனுடைய உள்ளுணர்வு அடையாளம் கண்டுகொண்டுவிட்டதையும் அவள் அறியாமலில்லை. பொங்கி வரும் உணர்வுகளின் மத்தியில் பொறாமையையும் கைவிடப்பட்டத் தன்மையையும் அவன் ஒரு நாள் சந்தித்தப் போது அவனுக்கு தன் மேலே மிகுந்த வெறுப்பும் அவநம்பிக்கையும் ஏற்பட்டது. அவன் எத்தனையோ இரவுகள் , அவளின் பருத்த வயிற்றைத் தடவியபடி அருகில் மெளனமாய் படுத்திருக்கிறான். சில சமயம் அவன் முனைப்பாய் பேசும்போது நடுவில் அவள் தன்னை அறுத்துக்கொண்டு தனக்குள்ளான பரவசத்தில் தொலைந்து போய்விடுவதை பார்க்கையில் அவனுக்கு வெறுப்பு ஏற்பட்டது. அவளுக்கு அவனுடைய வெறுப்பும் பொறாமையும் ஒரு விதமான கிளர்ச்சியை அளித்தது. அப்போதெல்லாம் அவள் அவனை சிறு பிள்ளையைக் கொஞ்சுவது போல அள்ளியெடுத்து முத்தமிட்டுக் கொஞ்சினாள். எல்லாவற்றையும் கழற்றியெறிந்து விட்டு அவன் அவளிடம் தடையற்று சரணடைவது போலிருந்தது. அந்தக் கணங்களில் அவளை அவன் நன்றியுடன் பார்ப்பதாய் உணர்ந்தாள். ஆனால் பல சமயங்களில் அவனுடைய அருகாமையும் துணையும் அவளுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை.

*

தூக்கம் போலிருந்த நிலையில் ஆழ்ந்திருந்த போது அந்தத் தோற்றம் அவளுக்குத் தோன்றியது. கண்ணாடி கோலிக்குண்டு போல காணப்பட்ட ஒரு கோளத்தின் மத்தியில் அதைப் பார்த்தாள்.வெளிரிப்போயிருந்த கோளத்தின் சுவர்கள் வழியாக பார்க்கையில் அதன் சருமம் லேசாக பளபளத்தது. மெதுவாய் உள்ளுக்குள் குழந்தை மிதந்தபடியிருந்தது. அந்தக் கோளத்தின் லேசான அசைவைப் பார்க்கையில் அது முழுக்க நீரினால் ஆனது என்று புலப்பட்டது.குழந்தையின் தலை நகர்ந்து அவள் பக்கம் வருகையில் அதன் கண்கள் தெரிந்தன. கோடு போன்ற புருவங்களும் மிகக்குறைவான இரப்பைகளும் அதன் கண்கள் கொண்டிருந்தன. கண்களில் ஒரு புன்சிரிப்பு வெளிப்பட்டது. அவளைப் பார்த்ததும் அது தன் சிறிய கரத்தை மெதுவாய் மேல் தூக்கி அவளை வா என அழைப்பது போல் அசைத்தது. அதன் மெல்லிய அதரங்கள் அகன்று சிரித்த போது இனம் புரியாத உருக்கம் அவளுக்குள் ஊடுருவியது. அந்த அழகை தாங்க முடியாது, மூச்சு நின்று விடும் போல இருந்தது. கண்ணுக்குத் தெரியாத ஒரு கரம் அவளை அந்தக் கோளத்தை நோக்கி தள்ளிவிடுவது போலிருந்தது. அவள் பார்த்துக் கொண்டேயிருக்கையில் அது காற்றில் மெதுவாய் மிதந்த மிதந்து அவளருகே வந்தது. அந்த அசைவுகளில் குழந்தை அங்குமிங்கும் அல்லாடுவதை பார்க்கும் போது அவளுக்கு திகிலாய் இருந்தது. இரண்டு கரங்களாலும் அந்தக் கோளத்தை ஏந்திக் கொள்வது போல் நீட்டினாள். அது அவள் கரங்களில் மேல் நழுவி அவள் மார்பின் இடைவெளியில் தேங்கியது. அதைத் தன்னுடலோடு இறுக அணைத்துக் கொள்ள அவள் நீட்டிய கரங்கள் அந்தக்கோளத்துக்குள்ளே இருப்பதை அவள் அதிர்ச்சியுடன் பார்த்தாள். குழந்தை அவளின் கைவிரல்களின் மேல் நீந்திய போது சில்லிப்பாய் இருந்தது. அதன் குளிர்ந்த சிறு விரல்கள் அவளுடைய மார்புகளில் பட்டப் போது அவளுக்குள் அலை அலையாக எல்லாம் எழுந்தது. அந்தக் கோளம் படிப்படியாக அவள் உடல் முழுவதும் பரவியது. வெம்மையான நீர் அவளை சுற்றிலும் சூழ்ந்தது. வெற்று உடம்பின் வாசம் எல்லாவிடத்திலும் பரவியிருந்ததை அவள் உணர்ந்தாள். நீர்கோளத்துக்குள்ளே அவளும் மிதக்கத் தொடங்கினாள். குழந்தை சுருண்ட தன் பிஞ்சுக் கரங்களால் அவளைப் பற்றியபடி அவள் இடையோரம் ஒட்டியபடி மிதந்தது. நீர்பரப்பின் எல்லையில் வெளிச்சம் அதிகமாவதை சற்று நேரத்தில் உணர்ந்தாள்.அப்போது அவள் மிகவும் இலேசாக, எடையற்றதாய் உணர்ந்தாள். அவள் பார்க்க பார்க்க கோளத்தின் உள்பரப்பு அதிகமடைந்து கொண்டே வந்தது. சற்று தூரத்தில் நீரில் அலையும் கரையும் , அடியில் நிழலைத் தேக்கியிருக்கும் மரங்களும், அதையும் கடந்ததொலைவில் சிறு குன்றுகளும் , மரகதப் பச்சை வெளிகளும் தோன்றின.

வியர்த்து போய் விழித்தாள். உடல் பரவசமான ஒளியில் பளபளத்தது. அவனிடம் மறுநாள் அந்தக் கனவைச் சொன்னதும் அவன் முகம் தீவிரமான

நிலைக்கு மாறியது.

இந்த மாதிரி சமயங்களில் மனோநிலை தெளிவாக இல்லாது போக சாத்தியங்கள் இருக்கின்றன உடலில் ஏற்படும் மாற்றங்களால். அதனால் தான் இப்படிப் பட்ட குழப்பமான தோற்றங்கள் வருகிறது. உனக்கு இந்தக் குழந்தை குறித்து மிகுந்த மன அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. நீ உன் எண்ணங்களை வேறு திசையில் செலுத்துவது நல்லது.

அவளால் அதை அப்படியே ஒதுக்க முடிவதில்லை. அவளுக்குள் முதலில் தோன்றிய எண்ணம் இந்தத் தோற்றம் எனக்குள் உருவாகியிருக்கும் பிரபஞ்சத்தை உருவகப்படுத்துகிறது

என்பது.

எனக்குள் பிரபஞ்சம். பிரபஞ்சத்தில் ஒரு பகுதியாயிருக்கும் எனக்குள் பிரபஞ்சத்தின் ஒரு பிளவு உருவாகியிருக்கிறது. எனக்கும் என் குழந்தைக்குமாய் உருவான பிரபஞ்சம். வெளியிலிருப்பது என் மூலமாக உள்ளிருப்பதை தொட முயல்கிறது.

அவளுக்கு இந்த நினைப்பே அலாதியான போதையை அளித்தது. எனக்குள் பிரபஞ்சம் எனக்குள் பிரபஞ்சம் என மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டாள். அது அவளை மற்றவர்கள் இருக்கும் தளத்திலிருந்து இன்னொரு தளத்துக்கு மேலேற்றி விட்டதாக தோன்றிற்று. குழந்தையுடனான உறவை இது இன்னும் விசேஷப் படுத்துவதாக உணர்ந்தாள்.

இந்த பெளளதீகமான உடல் அதன் எல்லைகளை மீறி இன்னொரு பரிமாணத்திற்குப் போகிறது. எனக்கே எனக்கான பிரபஞ்சம். என் குழந்தைக்காக நான் உருவாக்கியுள்ள

உலகம்.

*

வலியின் வேகம் கூடிக் கொண்டே போனது. இன்னும் சிறிது நேரத்தில் அந்தப் பிஞ்சு உடலை கைகளில் ஏந்த முடியும் என்பதிலிருந்து தன் வலி பொறுக்கும் சக்தியை

அதிகரித்துக் கொண்டாள்.

வலியின் தீவிரத்தில் அவ்வப் போது அவளுக்கு நினைவு தப்பியது. நினைவுக்கும் மயக்கத்துக்கும் இடையில் ஊசலாடுகையில் அந்தக் கோளமும் நீந்தும் குழந்தையின் அசைவுகளும், எல்லையில் உயர்ந்தோங்கும் மரங்களும் அவளுக்கு தோற்றமளித்தது. என் பிரபஞ்சம்.. என்று அவள் உதடுகள் லேசாய் அப்போது முணுமுணுத்தன. மயக்கத்திலிருந்து வலியின் சீற்றத்தினால் விடுபட்டு எழுகையில் சூழலின் இருப்பும், மருத்துவர்களின் குரல்களும் அலை போல அவளை சூழ்ந்தது. அவளிடம் ஏதோ அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை கண்டு அவள் வியப்படைந்தாள். ஒரே சமயத்தில் அவள் இரண்டு மூன்று தளங்களில் இருப்பது போலிருந்தது. அவளின் கால்கள் அகற்றி தொடைகளை வெள்ளை நிற உடையில் நின்றிருந்த ஒருத்தி பிடித்துக் கொண்டிருந்தாள்.

அவள் ஏதோ ஒரு குரலின் ஆணைக்கேற்ப்ப அடி வயிற்றில் இருந்து வெளியே தள்ள பிரயத்தனப்படுவதைப் உணர்ந்தாள். மறுபடியும் அவளின் நினைவு சரிந்தது. கண்முன் கோளத்தின் மத்தியிலிருந்து குழந்தை உற்றுப் பார்த்தது. அந்தக் கோளத்தின் சுவர்கள் கரைந்து நீராய் வேகத்துடன் எங்கும் தரையில் வழிந்து கொண்டிருந்தன. குழந்தையின் கண்களில் நீர் வழிவதைப் பார்த்தாள்.அது சத்தம் வராமல் அழுவதைப் போலிருந்தது. கரையும் கோளத்தின் நீர்ப்பெருக்குடன் வழிந்து ஓடாமல் இருக்க ஒற்றைக் கரத்தை அவளை நோக்கி நீட்டியது. அதன் கரத்தை பற்றி இழுக்க தான் கரம் நீட்டுவதையும் அவள் பார்த்தாள்.அவள் உதடுகள் திரும்ப திரும்ப முணுமுணுத்தவாறு இருந்தன. உடல் முழுவதும் ஒரு வித விரைப்பு நிலை பரவியது.

*

அவள் நினைப்பு தட்டியபோது சூழல் மிக அமைதியாக இருந்தது. வெளிச்சம் மட்டுப் பட்டிருந்தது. கண்களை மிகச்சிரமத்துடனே விழிக்க வேண்டியிருந்தது. தொண்டையில் எரிந்தது. நீர் குடித்தால் தேவலை போலிருந்தது. லேசாகத் தலையைத் தூக்கி பார்த்தாள். கீழே தரையில் அம்மா படுத்திருந்தாள்.

அவளின் குரல் கேட்டதும் அம்மா சட்டென்று எழுந்தமர்ந்தாள்.

‘எழுந்திட்டியா. ஜாக்கிரதை. உடம்பை அசைக்காத ‘ என்றாள்.

அம்மாவை பார்த்து அவள் புருவத்தை உயர்த்தினாள். அம்மா தன் விரல்களால் அவள் முகத்தை தடவி தலைமயிரை ஒதுக்கி விட்டாள்.

‘நல்லபடியா பேத்தி வந்தாச்சு. ஆனா நீ செய்த கலாட்டா போல நான் பார்த்ததில்ல. எத்தனை பிரவசம் பார்த்திருக்கன் நான். விடாப்பிடியா வயித்த இறுக்கிக்கிட்டியே ீ. கடைசில ஸிஸேரியன் பண்ண வேண்டியதா போச்சு. எத்தனை டென்ஷன் தெரியுமா எங்க எல்லாருக்கும். ‘

‘இரு. நர்ஸைப் பாத்து குழந்தைய எடுத்துக்கிட்டு வர்ரேன். ‘

அவளுக்கு உடலைப் பற்றிய உணர்வு தோன்ற, தலையை சரித்து பார்த்தாள். வீக்கம் அடங்கி தொய்ந்து போயிருந்தது. தன் வயிற்றையே பார்த்துக் கொண்டிருந்தாள் சற்று நேரம். பக்கத்தில் விழுந்திருந்த கையை தூக்கி வயிற்றின் மேல் வைத்து, வயிற்றை லேசாகத் தடவினாள்.எந்த விதமான உணர்வுகளுமற்று ஏறக்குறைய தட்டையாக இருந்தது. இடுப்பை லேசாக அசைத்தாள். லேசாக எடையற்று இருந்தது உடல்.

குழந்தையுடன் அம்மா உள்ளே வந்தாள். அவளிடம் பெருமிதத்துடன் நீட்டினாள். குழந்தையை பார்த்தாள். மூடியிருந்த இமைகளை மெதுவாய் திறந்து அவளைப் பார்த்த குழந்தை, அறிமுகமற்ற சாயலுடன் இருந்தது.

முற்றிலுமான அன்னியத் தன்மையுடன் குழந்தையை பார்த்தாள். வயிற்றுக்குள் இருந்தது வெளி வருகையில் தன்னுடனான நுட்பமான ஒரு இணைப்புக்கண்ணியை துண்டித்து வேறோர் உருக்

கொண்டது போலிருந்தது.

அப்போது உடல் முழுவதும் வெற்றிடமொன்று பரவியிருப்பதை அவள் உணர்ந்தாள். அது ஏற்படுத்திய இழப்பு அவளால் தாங்கமுடியாததாக இருந்தது.

*********

நன்றி:தினமணிக்கதிர்

Series Navigation

கோகுல கண்ணன்.

கோகுல கண்ணன்.