கவிதை

This entry is part of 47 in the series 20040624_Issue

ரவிகுமார்


1.

ஏதோ இரசாயன பூச்சாம்
முன்பு போல் அருகில் செல்ல
முடியவில்லை..
எட்டாத உயரத்தில் நிலவு
வெளிச்சம்..
நிற்காமல் நகர்ந்து செல்லும்
வாகன வெளிச்சங்கள்..
ஒரிரவு வாழ்க்கைதனே வாழ்ந்துவிட்டு
போகட்டும் என்று எண்ணாமல்
விளக்கணைத்து மெழுகுவர்த்தி ஏற்றிவைக்கும்
மனிதர்கள்..
அப்பப்பா! ஒரு துளி வெளிச்சத்திற்க்குதான்
எவ்வளவு போராட்டங்கள்
இருந்தும் விடுவதாயில்லை.
விடியலில் தரையெங்கும் இரைந்து
கிடந்தன விட்டில் பூச்சியின்
இறகுகள்
போரடி வாழ்ந்ததின் அடயாளமாய்.

2.

விடிந்தால் மரணம் நிச்சயம்
இருந்தும் ஏன் இத்தனை அவசரம்
விளக்கை சுற்றும் விட்டில்பூச்சிகள்.

ஜ.ரவிக்குமார்

Series Navigation