அன்பு

This entry is part of 47 in the series 20040603_Issue

பாஷா


என் அன்பு
ஏழு ஆண்டுகளாக
என்னிதயத்தில் அடக்கப்பட்டு
ஒரு நாள்
உன்குரல் ஒலிக்க
வெடித்து சிதறி
உன் வாசல்வரை
வழிந்துகொண்டிருக்கிறது!
உன் அன்பு
ஆறுதலாய் தொடங்கி
அன்பாய் அவ்வப்போது சுயம்தொட்டு
ஆண்டவன் கட்டளைகளாய் நிபந்தனைகளை
அள்ளிதெளிக்கிறது!
என் அன்பு
பாலை மணலெடுத்து – அதன்
குருதி பிழிந்து
உன் உருவம்
வடித்துகொண்டிருக்கிறது!
உன் அன்பு
அதன் வழித்தடங்களில்
விரிந்துகிடக்கும் புல்வெளியாய்
என் அடையாளம்
சொல்கிறது!
என் அன்பு
வானெங்கும் வியாபித்து
உன்மேல்மட்டும் அதன்மழை
பொழிந்துகொண்டிருக்கிறது!
உன் அன்பு
சாரலாய் சிலநேரம் என்
ஜன்னலோரம் வந்து
உயிர்தீண்டிபோகின்றது!
என் அன்பு
அதன் சிம்மாசனத்தில்
உன்னைமட்டுமே அமர்த்தி
அழகுபார்க்கின்றது!
உன் அன்பு
அதன் கதவுகளை
அனைவருக்கும் திறந்திருக்கிறது!
என் அன்பு
உன் குரல்தேனூற்றி
அதன் தாகம்தீர்க்கிறது!
உன் அன்பு
அதன் உத்தரவாதத்திற்கு என்
ஒருவருகை கேட்கின்றது!
என் அன்பு
அதன் எல்லா தருணங்களிலும்
உன்னிடம் அடைக்கலமாகிறது
உன் அன்பு
உன் அலுவல் நேரத்தில்
அதன் கதவடைக்கின்றது!
என் அன்பு
உயிர்பிரியும் நொடியிலும்
உன் நினைவை சுமந்திருக்கிறது!
உன் அன்பு
ஊர்துறந்த நாளிலேயெ என்
பெயர் மறந்துபோகின்றது!

—-
sikkandarbasha@hotmail.com

Series Navigation