திரிசங்கு சொர்க்கம்

This entry is part of 47 in the series 20040304_Issue

பத்மா அரவிந்த்


ஏதோவொன்று குறைகிறது
எதுவென எனக்குத் தெரியவில்லை
கை நிறைய பொருள் உண்டு
கருத்தினையொத்த வேலை உண்டு
குழுவிப் பேச நண்பர் கூட்டம் உண்டு
கொஞ்சிபேச மனைவி, மக்களுண்டு
இந்திய உணவா உடையா நகையா
புத்தகம் இசையா கிடைக்கிறது
கேளிக்கைக்கும் குறைவில்லை
ஆடல், பாடல் கலைகளுடன்
அனைத்தும் கற்க வசதி உண்டு
நினைத்தபோது உறவினருடன்
பேசிக்களிக்க தொலைபேசி உண்டு
பண்டிகைகள் கொண்டாட
பலவித பொருட்களும் கிடைத்திடும்
சமய தொடர்பாய் பணியினில்
விடுமுறை கூட கிடத்திடுமே
ஆன்மீகத் துணைக்கென்றெ
அழகாய் கோவில்பல உண்டு
ஆயினும் இதிலே பிடித்தமில்லை
இந்தியா போல சுகமில்லை
திரும்பிட நினைத்தோம் முடியவில்லை
பிள்ளைக்கு பல மொழி தெரியவில்லை
பள்ளியில் சேர்த்திட பொருளில்லை
நுழைவுத்தேர்வின் பாரம் தெரியவில்லை
கிரிக்கெட் ஆட்டம் அறியவில்லை
தாய்மொழியில் எழுதிட தெரியவில்லை
இரண்டு மொழிகளில் பயிற்சி வேண்டும்
இவையில்லாவிடில் பிரச்னையே
மீண்டும் வந்தோம் போராட
திரிசங்கு சொர்க்கம் இதுதானோ
தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்
—-
padma.arvind@co.middlesex.nj.us

Series Navigation