எனக்கு வேண்டும் வரம்

This entry is part [part not set] of 49 in the series 20040101_Issue

புகாரி


————————

வேண்டும் வேண்டும்
வேண்டுமடா – யாவும்
வேண்டும் வேண்டும்
வேண்டுமடா – உள்ளம்
வேண்டும் போதே வேண்டுமடா

எல்லைக் கோடுகள்
அழிந்திடணும் – அதையென்
சின்னக் காலால்
அழித்திடணும் -உலகை
ஒற்றைப் பூவாய்க் கண்டிடணும்

காற்றில் அலையும்
பறவைகளாய் – மனிதன்
காலடி உலவும்
நிலைவேண்டும் – சிறுமைக்
கட்டுகள் அறுந்து விழவேண்டும்

(வேண்டும்….)

தலைவன் ஒருவன்
வரவேண்டும் – வெற்றித்
தகுதி கருணை
எனவேண்டும் – நின்று
தங்கும் நேர்மை பெறவேண்டும்

அழியும் அகிலம்
தொடவேண்டும் – எங்கும்
அன்புப் பயிர்கள்
நடவேண்டும் – வஞ்சம்
அற்றுத் தழைக்கும் நிலம்வேண்டும்

(வேண்டும்….)

காலை எழுந்து
பறந்திடணும் – பத்துக்
கோள்கள் கண்டு
திரும்பிடணும் – அந்தி
கவிதை ஒன்று எழுதிடணும்

காணும் உயிரைத்
தழுவிடணும் – அன்புக்
கவியால் கைகள்
குலுக்கிடணும் – உள்ளக்
கனவைக் கேட்டு களித்திடணும்

(வேண்டும்….)

மதங்கள் யாவும்
இணைந்திடணும் – செல்லும்
மார்க்கம் ஒன்றாய்
மலர்ந்திடணும் – தெய்வம்
மனிதம் கண்டு தொழுதிடணும்

உதவும் உள்ளம்
எழவேண்டும் – இந்த
வரங்கள் அருளும்
வலுவேண்டும் – என்றன்
வார்த்தை விண்ணை உழவேண்டும்
*
அன்புடன் புகாரி
buhari@rogers.com

Series Navigation

புகாரி

புகாரி

எனக்கு வேண்டும் வரம்

This entry is part [part not set] of 46 in the series 20031218_Issue

(கவியோகி வேதம்)


**********************

வரம்வேண்டிக் கெஞ்சுகின்றேன்! வாகீசா! உடனே தா!
சிரம்வலிக்கும் அளவிற்குச் சிறுமைகள் தொடருதப்பா!
..
நீ அளித்த சோலைமண்ணில் நிஜவிடத்தைக் கலக்கின்றார்!
நீகொடுத்த மேனிக்குள் நீள் ‘மலத்தைச் ‘ சேர்க்கின்றார்!
.
சோலையினை ரசிக்காமல் சுருட்டி(ல்)அதைப் பற்றவைப்பார்!
காலையிலும்,மாலையிலும் கழிவுகளைக் கொட்டுகின்றார்!
..
எனக்கோர்- ‘தீக் ‘ கண்கொடு! எரியவைப்பேன் இவர்களையே!
இனிக்கும் இவ்வுடலை ‘எய்ட்ஸ் ‘ வ(ை)ரப் படுத்துகின்றார்!
.
கர்மவினை கழித்திடவே கருணையுடல் நீதந்தாய்!
தர்மம்நின்று, வாழ்வுசெய்து தளராமல் உனைநினைத்து,
..
யோகத்தால்,பயிற்சிகளால் உள்நரம்பைப் பொலிவுறுத்தித்
தாகமுற ஒளியேற்றி ‘உட்கண்ணில் ‘ தழைக்காமல்,
.
கண்டபடி இன்பமுறும் கயவர்களைப் பொசுக்கிடவே
சுண்டிஅன்று ‘பாடிய ‘ கா ளமேகச்சூள் ‘நாக்கை ‘த் தா!
..
பகட்டுச் சொற்களினால் பதவியேற்று,மக்கட்கே
தகவாய்நன் மைசெய்யாத் தடியர்களைப் புடைத்திடவே
..
என்கையில் ‘பிறர் ‘ அறியா இயந்திரத் தடியும்,தா!
மென்சொல்லைப் பேசாமல் மேலான என்நாட்டை,
.
சாதிப் பிரச்னைக்குள், சகதியாம் வன்முறைக்குள்
ஊதிவிட்டு உள்மகிழும் உலுத்தர்களை உதைத்திடவே
..
இரும்பான கால்தனியே இரகசியமாய்த் தந்துவிடு!
கரும்பாக நாடெங்கும் கருணையாட்சி வர,வரம்தா!
..
உன்னால் இயலாதா ? உடனே சொல்லிவிடு!
என்னதவம் நான் செய்தால் இவ்வரம் பெற்றிடலாம் ?
.
என்பதை இப்போதே இறுதிசெய்! இல்லையென்றால்,
மன்பதையில் என்வாழ்வின் மகத்துவம்தான் என்ன என்ன ?
..
வீடு ‘தீ ‘ப் பற்றினால் வீணன்போல் நிற்பதுவா ?
ஓடுகளில் கல்கலந்தால் உட்கார்ந்து ரசிப்பதுவா ?
..
மேகத்தில் ‘அமிலம் ‘என்றால் விஞ்ஞானி வருந்தானா ?
தாகமுற,வேகமுற, தளிர்மேனி நடுக்கமுற,
..
தினசரியைப் பார்ப்பதற்கே தேள்கொட்டும் தினவெடுக்க
மனம்வருந்திக் கேட்கின்றேன் மகேசனே! வரம்தாயேன்!
..
இரண்டிலொன்று செய்துவிட்டு எப்படியும் ‘உள் ‘ சேர்வேன்!
வரம் ‘முக்தி ‘ கேட்டேனா ? வாழ்வினிமை கேட்டேனா ?
..
அசுரர்களைப் பொசுக்கஇப்போ அவதாரம் தேவைஅப்பா!!
குசும்பில்லை என்வரத்தில்! கொதிப்புத்தான்! உடன் கொடப்பா!
***************************(கவியோகி வேதம்)

Series Navigation

கவியோகி வேதம்

கவியோகி வேதம்