இணையக் காவடிச் சிந்து
அனந்த்
எங்களிணை யத்திற்கிலை ஈடு – அது
எம்மனைய னோர்வதியும் வீடு – உளம்
இன்புறஇ னித்திடும்தேன் கூடு
வந்து கூடு(ம்)
அன்பர் நாடும் – அனை
வர்க்கும்பொது வென்றுளபண் பாடு (1)
o0o
இந்தியரும் இங்கிலந்துள் ளோரும் – வேறு
எங்குமுள நாடுபுகுந் தோரும் – ஒரு
சாதியென உவகையுடன் சாரும்
இணையம் பாரும்!
இதற்கு நேரும் – எங்கும்
இல்லைஇ துணர்ந்துபகை தீரும்! (2)
o0o
ஆயிரம்பல் லாயிரமாய்ச் சேர்ந்து – நாம்
அங்குமிங்கும் சேதிகளைத் தேர்ந்து – வெகு
ஆழமுடன் அலசிடுவோம் கூர்ந்து
இணையம் சார்ந்து
எதையும் ஓர்ந்து – செயும்
எவருமிங்கு விழுவதில்லை சோர்ந்து! (3)
o0o
கவிதையொடு கட்டுரைச மைப்போம் – பிறர்
காணமன ஓவியம்முன் வைப்போம் -தமிழ்க்
காதல்தரு கனிகளைச்சு வைப்போம்
இன்பம் துய்ப்போம்
துன்பம் பொய்ப்போம் – இந்த
இணையம்வழி இதயங்களைத் தைப்போம் (4)
o0o
கவிதையறி வென்பதெனக் கில்லை – என்ற
கவலைமுன்பு கொண்டடைந்த தொல்லை – இனிக்
கடுகளவு மென்மனத்தில் இல்லை
இணைய வில்லை
எடுத்து ஒல்லை – இன்றி
இனித்தொடுப்பேன் இனியதமிழ்ச் சொல்லை (5)
o0o
ananth@mcmaster.ca
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தாறு
- குறிப்புகள் சில அக்டோபர் 2, 2003 ( கனாடா, மருந்துகள்,அறிவுசார் சொத்துரிமை-அமெரிக்க அரசும் ஒபன் சோர்ஸ் குறித்த சர்ச்சையும்- சமூக
- கருத்தும். சுதந்திரமும்.
- வாரபலன் – இந்த வாரம் (பி.ஏ) கிருஷ்ண ஜெயந்தி
- நூல் வெளியீட்டுவிழா
- குமரிஉலா 5
- தமிழ்ச் சினிமா – இன்னும் சில குறிப்புகள்
- கல்யாண வினாயகர் (கல்லூரிக் காலம்-2)
- கடிதங்கள்
- பயணம் – ஒரு மைக்ரோ கதை
- ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – 4 – சென்ற இதழ் தொடர்ச்சி
- இன்னுமொரு உலகம்…….
- கனடாவில் நாகம்மா
- வடிகால்
- விடியும்! நாவல் – (16)
- முடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் ] 1. யோகம் ஒரு முன்னுரை [தொடர்ச்சி ]
- ‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ – 4
- பட்டாபிஷேகம் நடக்கிறது…
- பஸ்கால் கிஞ்ஞார் (Pascal Qignard)
- நியூயார்க்கில் இந்திய இலக்கியச் சந்திப்புகள்
- தேவை இன்னும் கொஞ்சம் தாகம்
- அடையாளத் தழும்புகள் (சிலுவைராஜ் சரித்திரம் – ராஜ் கெளதமன் – நாவல் அறிமுகம்)
- மனத்தில் படியும் ஞாபகங்கள் – சுரேஷ்குமார் இந்திரஜித்தின் ‘அலையும் சிறகுகள் ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 79)
- சூரியனைச் சுற்றி வந்து தகவல் அனுப்பும் யுலிஸிஸ் விண்ணாய்வுச் சிமிழ் [Ulysses Spacecraft Exploring the Sun (1990-2007)]
- மெளனம் பற்றி ஏறி
- இணையக் காவடிச் சிந்து
- மாயமான்.
- ‘யார் ? ‘என்றா கேட்கின்றாய் ?
- வலை
- வைரமுத்துக்களின் வானம்-4 (குமுதம் 29-9-03 இதழ்)
- சில சீனத் திறமைகள்