விடியல் எங்கே ?

This entry is part of 31 in the series 20030525_Issue

சத்தி சக்திதாசன்


விழித்துப்பார் தோழனே ஏன்
இன்னும் விடியவில்லை ?
ஓ ! நீ உண்மையான விடியலை இன்னும்
தேடவே தொடங்கவில்லையே
ஏமாற்றங்களின் விளிம்புவரை எத்தனை முறை
ஏறி ஏறி இறங்கினாய் நீ
இரவு முடிந்து விடும் என எத்தனை தடவைகள்
நீ உறுதியாய் நம்பினாய்
தோழனே தேடல்களை மூடி விடு
உன் இதயத்தை திறந்து வை
இருட்டில் இருந்து கொண்டே
விளக்கை அணைக்காதே
உண்மையை உன்னில் கண்டு கொள்
விடியல் தனாகவே உன் வானைத் தேடி வரும்.

சத்தி சக்திதாசன்

sathnel.sakthithasan@bt.com

Series Navigation