உயிர்த்திருத்தல்

This entry is part of 15 in the series 20010311_Issue

இரா. சுந்தரேஸ்வரன்.


உயிர் கொண்ட உடலின் பெரும்பகுதி
நீரால் ஆனது!

நீர் உறிஞ்சி
சாந்தி தரும் நீலம் மறைத்து
வானிருள வலம் வரும்
மேகத்தில் தொிகிறது,
அவள் முகம்!

அவள் அழும் கண்ணீர்,
ஊர் கொள்ளும் வெள்ளம்!
பிற,
ஆனந்தம்!

சுத்தமான பச்சையில்
மிளிரும் தாவரம் போல
துளிர்க்கிறேன் நான்,
மழையில் நனைந்த பின்!

மழை முடிந்தது!
பயிர் முளைக்கிறதோ ?
களை தளிர்க்கிறதோ ?
குறைந்த பட்சம் வேண்டுவது,
உயிர் தொட்டு, சுட்டு,
இருப்பை உணர்த்தும்
தூய வெண்சுடரொளியே!

Series Navigation