மரணம்

This entry is part of 19 in the series 20010226_Issue

கோகுல கிருஷ்ணன்.


‘இதுக்கு
மூத்திரம் கழுவியே
மூச்சு நின்னுடும் எனக்கு ‘
முனகிக் கெ ‘ள்ளும் அம்மா;
‘ஆசுபத்திாிச் செலவுலயே
ஆஸ்தி கரைஞ்சிடுச்சி ‘
அலுத்துக் கொள்ளும் அப்பா;
‘இந்தத் தடவையும்
ஏமாத்திடிச்சோ ‘
புலம்பிக்கொண்டே
புறப்பட்டுப் போகும் அத்தை;
எதிர் வீட்டில் இருந்தும்
எட்டியே பார்க்காத
பொியப்பா;
எல்லோரும்
அலறி அழுதார்கள்
தாத்தா செத்துப் போனபோது.
எனக்கு மட்டும்
அழத் தோன்றவில்லை.

Series Navigation