அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 8 மற்ற நாடுகளுக்கு ஒளியாக‌(A Light Unto The Nations)

This entry is part of 34 in the series 20101205_Issue

ஜான் ஹார்ட்டுங்


மற்ற நாடுகளுக்கு ஒளியாக‌(A Light Unto The Nations)

சாலமனின் ஆட்சிகாலத்தின்போது இஸ்ரேலின் பொற்காலம் உச்சத்தை அடைந்தது. சாலமன் டேவிடின் மகன். இவன் “நதி தொடங்கிப் பிலிஸ்தியர் நாடு வரை உள்ள எல்லா நாடுகளையும் சாலமோன் ஆண்டு வந்தார். “(I Kings 4:21). போரில் பெற்ற கொள்ளைப்பணத்தை வைத்து சுகமாக வாழ்ந்துவந்தார்(Deuteronomy 20:14), கூடவே “தம் மனைவியரும் அரசிகளுமாக எழுநூறு பெண்களையும், வைப்பாட்டிகளாக முந்நூறு பெண்களையும் சாலமோன் வைத்திருந்தார்.”(I Kings 11:3) இன்னும் கப்பமாக ஏராளமான பணத்தை பெற்றுவந்தார் ” ஒவ்வொரு ஆண்டும் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து நிறையுள்ள பொன் சாலமோனுக்கு வந்து கொண்டிருந்தது. அதைத் தவிரச் சாலமோனுக்குக் கோத்திரத் தலைவர்களும் வியாபாரிகளும் வணிகர்களும் அராபிய அரசர்களும் மாநில ஆளுநர்களும் பொன் கொண்டு வருவதுண்டு.”(I Kings 10:14-15):

சாலமனின் ஆட்சிக்காலத்தின் பின்னர் இஸ்ரேல் இரண்டாக உடைந்தது. வடக்கு இஸ்ரேல் அரசுக்கும் தெற்கு இஸ்ரேல் அரசுக்கும் இடையே உள்நாட்டுப் போர் மூண்டது. முன்பு தங்கத்தை அனுப்பி வந்த வெளிநாடு அரசுகள் இப்போது துருப்புகளை அனுப்ப ஆரம்பித்தன. ஜெருசலம் நகரை சிரிய துருப்புகள் சுற்றி வளைத்த போது உள்குழு ஒழுக்கம் கீழ் நிலையை அடைந்தது. சாலமனின் அறிவு பற்றிய கதையை எல்லோரும் அறிந்திருப்பார்கள். குழந்தையை இரண்டாக வெட்ட உத்தரவு கொடுத்து யார் குழந்தையின் உண்மையான தாய் என்று அறிந்த கதை. ‌(I Kings 3:16-28) ஆனால் அயி நகர் மக்களை கொன்றொழித்த கதையை பைபிள் வகுப்புகள் பேசாதது போலவே இதே மாதிரியான இன்னொரு கதையையும் பைபிள் வகுப்புகள் பேசுவதில்லை. சாலமனின் பின்னால் வந்த அரசர் முன்னால் வந்த இதே மாதிரியான ஒரு வழக்கு(II Kings 6:26-30):

இஸ்ராயேலின் அரசன் நகர மதில் வழியே சென்று கொண்டிருக்கையில் மாது ஒருத்தி கூக்குரலிட்டு, “என் அரசரான தலைவா, என்னைக் காப்பாற்றும்” என்றாள். அதற்கு அவன், “ஆண்டவர் உன்னைக் காப்பாற்றவில்லை என்றால், நான் எங்ஙனம் உன்னைக் காப்பாற்றுவது? களஞ்சியத்திலிருந்தோ ஆலையிலிருந்தோ? சொல்” என்றான். மேலும் அவளை நோக்கி, “உனக்கு என்ன வேண்டும்? சொல்” என்றான். அதற்கு அவள், “இதோ இந்தப் பெண் என்னை நோக்கி, ‘இன்று நாம் சாப்பிடும்படி உன் மகனைக் கொடு, நாளை என் மகனைச் சாப்பிடலாம்’ என்றாள். நாங்கள் என் மகனைச் சமைத்துச் சாப்பிட்டோம். மறுநாள், ‘நாம் சாப்பிடும்படி, உன் மகனைக்கொடு’ என்றேன். அவளோ தன் மகனை ஒளித்து விட்டாள்” என்று சொன்னாள். அரசன் இதைக் கேட்டவுனே தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு நகர மதில் வழியாகச் சென்றான்.

இந்த சித்திரம் இன்னும் கேவலமாகி மிகுந்த நம்பிக்கையுடையவர்கள் மத்தியில் நிராதரவான நிலையில் ஒரு நம்பிக்கை தோன்றியது. இஸ்ரேலின் தெய்வம் ஒரு மெசியாவை அனுப்பும். அந்த மனிதன் மீண்டும் ராஜ்ஜியத்தை உருவாக்குவான். மீண்டும் இஸ்ரேல் உலகத்தின் நாடுகளை எல்லாம் வென்று ஆளும் என்பதே அது. கிறிஸ்துவ பூச்சுற்றல் ஆசாமிகளும், யூத பூச்சுற்றும் ஆசாமிகளும் சேர்ந்து பைபிளில் மறைத்து பேசும் விஷயம் “எல்லா நாடுகளுக்கும் ஒளிவிளக்காக இருக்கும் இஸ்ரேல்” என்ற கருத்துதான். ஒளி என்பது இஸ்ரேல். இனப்படுகொலை செய்யப்படும் இடங்களுக்கு வெளியே இருககும் நாடுகள் இஸ்ரேல் என்ற ஒளியை அவை இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்படுவத்ன் மூலம் பார்க்கும். அப்போது இந்த நாடுகள் தங்களது தெய்வங்களை விட இஸ்ரேலின் தெய்வம் வலிமையானது என்று அறியும். அதை விட முக்கியமாக, இஸ்ரேலின் தெய்வத்தை இஸ்ரேல் மூலம் வணங்கும். அதாவது பழையபடி மீண்டும் இஸ்ரேலுக்கு கப்பம் கட்டும்.

உள்குழுவின் உச்சகட்ட இனிய கற்பனை பைபிள் முழுவதும் விரவிக்கிடக்கிறது.
ஆனால், Psalms and Isaiah (RSV):இன்னும் குறிப்பாக
தெரியப்படுத்தப்படுகிறது
8 எம்மிடம் கேளும், யாம் உமக்கு மக்களினங்களை உரிமையாக்குவோம்: உலகின் கடை எல்லை வரை உமக்குச் சொந்தமாக்குவோம்.
9 இருப்புக் கோல் கொண்டு அவர்களை நொறுக்குவீர்: குயவனின் கலங்களென அவர்களைத் தவிடு பொடியாக்குவீர்.” (Psalms 2:8-9)
2 புறவினத்தார் வந்து அவர்களை அவர்களுடைய சொந்த நாட்டுக்குக் கூட்டிப் போவார்கள்@ இஸ்ராயேல் மக்கள் ஆண்டவருடைய நாட்டில் அவர்களை வேலைக்காரர்களாகவும் வேலைக்காரிகளாகவும் வைத்துக் கொள்வார்கள்@ தங்களை அடிமைப்படுத்தியவர்களை அடிமைகளாக்குவார்கள்@ தங்களை ஒடுக்கினவர்களை அடக்கி ஆளுவார்கள்.
(Isaiah 14:2)
இன்னும் ஆண்டவர் கூறுகிறார்: “எகிப்து தன் வேலைப் பயனாகிய செல்வங்களோடும், எத்தியோப்பியா தன் வணிகத்தால் கிடைத்த வருமானத்தோடும், சாபா தன் உயர்ந்து வளர்ந்த குடிகளோடும் இஸ்ராயேலே, உன்னிடம் வந்து சேரும் உனக்கு அவை யாவும் உரிமையாகும், உன்னைப் பின்தொடர்வார்கள் விலங்கிடப்பட்டவர்களாய் உன் முன் வந்து, உன்னை வணங்கி மன்றாடி, ~உன்னிடத்தில் மட்டுமே கடவுள் இருக்கிறார், உன்னிடத்திலன்றி வேறெங்கும் கடவுள் இல்லை~ என்பார்கள்.” (Isaiah 45:14).
அவர் சொன்னார்: “யாக்கோபின் கோத்திரங்களை எழுப்பவும், இஸ்ராயேலில் எஞ்சினோரைத் திருப்பிக் கொணரவும், நமக்கு நீ ஊழியனாய் இருத்தல் பெரிதன்று. உலகத்தின் எல்லை வரையில் நமது மீட்பு எட்டும் படி, புறவினத்தார்க்கு ஒளியாக உன்னை ஏற்படுத்தினோம்.”
(Isaiah 49:6)
1 யெருசலேமே எழுந்திரு, எழுந்து ஒளிவீசு, ஏனெனில் உனது ஒளி வந்து விட்டது, ஆண்டவரின் மகிமை உன் மேல் உதித்து விட்டது.
2 இதோ, காரிருள் பூமியை மூடிக்கொள்ளுகிறது@ அடர்ந்த இருள் மக்களைச் சூழ்ந்து கொள்ளுகிறது@ ஆனால் ஆண்டவர் உன் மேல் எழுந்தருள்வார், அவரது மகிமை உன் மீது உதயமாகும்.
3 மக்களினங்கள் உன் ஒளி நோக்கி வருவார்கள், உன்னில் உதிக்கும் சுடர் கண்டு மன்னர்கள் வருவர்.
4 கண்களை ஏறெடுத்துச் சுற்றிலும் பார், இவர்கள் அனைவரும் ஒன்று கூடி உன்னிடம் வருகின்றனர்@ உன் புதல்வர்கள் தொலைவிலிருந்து வருகின்றனர். உன் புதல்வியர் இடுப்பில் தூக்கி வரப்படுகின்றனர்.
5 நீயோ அதைக் கண்டு அக்களிப்பாய், உன் உள்ளம் வியப்பினால் பூரிப்படையும் ஏனெனில், கடல் வளம் உன்னிடம் கொணரப்படும். மக்களினங்களின் செல்வம் உன்னிடம் வந்து சேரும்.
6 ஒட்டகங்களின் கூட்டம் உன்னை நிரப்பும், மாதியான், எப்பா நாட்டு இளம் ஒட்டகங்களும் வரும்@ சாபா நாட்டினர் அனைவரும் பொன்னும் தூபமும் ஏந்தியவராய் ஆண்டவருக்குப் புகழ் பாடிக் கொண்டு வருவார்கள்.
7 கேதாரின் மந்தைகள் யாவும் உன்னிடம் சேர்க்கப்படும், நாபாயோத்தின் செம்மறிகள் உனக்குப் பயன்படும்@ நமக்கு ஏற்புடைய பீடத்தின் மேல் அவை ஒப்புக் கொடுக்கப்படும், நமது மாட்சிமையின் கோயிலை மகிமைப்படுத்துவோம்.
8 மேகங்கள் போலும், கூட்டுக்குப் பறந்தோடும் காட்டுப் புறாக்கள் போலும் விரைந்து பறந்து போகும் இவர்கள் யார்?

9 தீவுகள் நமக்காகக் காத்திருக்கின்றன@ உன் பிள்ளைகளைத் தொலைவிலிருந்து ஏற்றி வரவும், அவர்களுடன் அவர்களுடைய வெள்ளியையும் பொன்னையும் கொண்டு வந்து உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்கும், உன்னை மகிமைப்படுத்திய இஸ்ராயேலின் பரிசுத்தருக்கும் அர்ப்பணஞ் செய்யக் கடலின் மரக்கலங்களும் காத்திருக்கின்றன.
10 அந்நியரின் மக்கள் உன் சுவர்களைக் கட்டுவர், அவர்களின் அரசர்கள் உனக்குப் பணிபுரிவர்@ கோபத்தில் நாம் உன்னை அடித்து நொறுக்கினோம், இப்போது சமாதானமாகி உன் மேல் இரக்கம் காட்டினோம்.
11 உன் வாயில்கள் எப்போதும் திறந்திருக்கும், இரவிலும் பகலிலும் அவை மூடப்படா@ மக்களினங்களின் செல்வங்கள் கொண்டு வரப்படும், அவர்களின் அரசர்கள் கூட்டி வரப்படவும் அவை திறந்தே இருக்கும்.
12 உனக்கு அடிபணியாத மக்களினமோ அரசோ அழிந்து போகும், அவை அனைத்தும் முற்றிலும் பாழாக்கப்படும்@
(Isaiah 60:1-12).(8)

அது சரி, இது எப்போது நடக்கும்? இஸ்ரேல் தனக்குள்ளாகவே அடித்துகொள்வதை நிறுத்திய உடனே நடக்கும். அதாவது தனது உள்குழு ஒழுக்கத்தை பழையபடி சரி செய்தபின்னால் நடக்கும். பிறகு மெசியா வந்துவிடுவார். கடவுளின் ராஜ்ஜியத்தை பூமியில் கொண்டுவருவார். பூமியை விட்டுவிட்டு சொர்க்கத்துக்கு போவது அல்ல குறிக்கோள். சொர்க்கத்தை பூமியில் கொண்டுவருவது தான் குறிக்கோள். அதாவது டேவிடின் ராஜ்ஜியத்தை பூமியில்
ஸ்தாபிப்பது.

(தொடரும்)

முதல்பகுதி
இரண்டாம் பகுதி
மூன்றாம் பகுதி
நான்காம் பகுதி
ஐந்தாம் பகுதி
ஆறாம் பகுதி
ஏழாம் பகுதி

Series Navigation